'மட்டன் பிரியாணி, சிக்கன் 65': தனியார் மருத்துவர்களுக்கு வழங்கிய மேயர்
கீழ்ப்பாக்கம்: சென்னை மாநகராட்சி நடத்திய, 'மெகா' மருத்துவமுகாமில் கலந்து கொண்டு, மக்களுக்கு மருத்துவசேவை அளித்த, தனியார் மருத்துவர்களை பாராட்டி, மேயர், சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து, அவர்களுக்கு, மட்டன் பிரியாணியுடன் தடபுடல் விருந்தும் அளிக்கப்பட்டது.
கவுரவிப்பு: சென்னை மாநகராட்சி சார்பில், கடந்த மாதம், 5ம் தேதி முதல், 9ம் தேதி வரை, ஐந்து நாட்கள், சென்னை முழுவதும், ஆயிரம் இடங்களில், 'மெகா' மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதற்கு, சென்னையில் உள்ள 30 மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள் வழங்கி ஒத்துழைப்பு அளித்தன. அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள், இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பணியாற்றினர். அவர்களை கவுரவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில், நேற்று, தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கீழ்ப்பாக்கம், ஜெ.ஜெ., உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் பாராட்டு பத்திரம் வழங்கினார். கமிஷனர் விக்ரம் கபூர், சுகாதார அதிகாரி குகானந்தம் உள்ளிட்ட பலர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பாயசத்துடன்...:
பின்னர், அனைவருக்கும், மட்டன் பிரியாணி, சிக்கன், 65, மீன் வறுவல் என, அசைவ விருந்தும், வடை, பாயசத்துடன் சைவ விருந்தும் அளிக்கப்பட்டது.
'அம்மா' குடிநீர் எங்கே?
தனியார் மருத்துவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட விருந்தில், 'அம்மா' குடிநீர் வழங்கப்படாமல், தனியார் நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்கள் தான் வழங்கப்பட்டன. மேலும், இந்த விருந்துக்கு, ? லட்சம் ரூபாய் வரை செலவாகி இருக்கும் என, கூறப்படுகிறது.
No comments:
Post a Comment