Saturday, December 28, 2013

2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் 53% மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள்!!! ரிப்போர்ட்..- www.tnfinds.com - Best site in the world..

2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் 53% மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள்!!! ரிப்போர்ட்..

டெல்லி: 2013 ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் ஏறக்குறைய பாதி பேர் எந்த வேலையை செய்யவும் தகுதியற்றவர்களாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது, இந்தியாவின் கல்வி முறைமாணவர்களுக்கு எந்த வித திறன்களையும் அளிப்பதில்லை என கருத்து நிலவுகிறது. நகைச்சுவை நடிகர் கூறுவது போல "என்னத்த படிச்சு... என்னத்த கிழிக்கபோராங்களோ" என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது இந்த ஆய்வு அறிக்கை.
 
 அஸ்பைரிங் மைன்ட்ஸ் (Aspiring Minds) என்ற வேலைத்திறன் தீர்வு நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் 2013 ஆம் ஆண்டில் தேர்வுற்ற பட்டதாரிகளில் ஏறக்குறைய 47 சதவிகிதம் பேர் ஆங்கில மொழி அறிவு மற்றும் அறிவாற்றல் திறன்கள் உள்ளிட்ட திறமைகளின் அடிப்படையில் எந்த வேலையும் செய்யத் திறனற்றவர்களாக இருப்பது ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலாக வெளிவந்துள்ளது.

தகுதி பெற்றவர்கள்.


ஆய்வில் பங்கேற்றவர்களில் 2.59 சதவிகிதம் பேர் கணக்குப் பதிவியல் போன்ற செயலாற்றுத் துறைகளிலும், 15.88 சதவிகிதம் பேர் விற்பனை தொடர்பான வேலைகளிலும் மற்றும் 21.37 சதவிகிதம் பேர் பீபிஒ எனப்படும் வர்த்தக நடைமுறைகள் வெளிப்பெரும் துறைகளுக்கும் பொருத்தமானவர்களாக இருப்பதாகவும் அந்த ஆயவரிக்கை தெரிவித்துள்ளது.

இதிலும் பெண்கள் முதல் இடம்!!!


அதிகமாக பெண்கள் மூன்று வருட பட்டப்படிப்பை மேற்கொள்வதாகவும், வேலைக்கு பொருத்தமானவர்கள் எனும்போது, ஆண்களுக்கு இணையாகவோ அல்லது சற்று அதிகமாகவோ பொருந்துவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
 

குறைப்பாடுகள்.


மூன்று வருட பட்டப் படிப்புகளில் 100 பெண்களுக்கும் சராசரியாக 109 ஆண்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. வேலை பெறுவதில் குறைந்த ஆங்கில மொழி அறிவு, கணினித் திறன் குறைபாடு மற்றும் அறிந்து கொள்ளும் திறன் ஆகியவை பெரும் தடைகளாக இருக்கிறது.

சிறு நகரங்களின் நிலை!!


ஆங்கில மொழி அறிவு மற்றும் கணினித் திறன் குறைபாடுகள் சிறிய நகரங்களில் பெரும்பாலும் வேலை வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் சிறிய நகரங்களில் வசிக்கும் அல்லது படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் இந்த கணினி மற்றும் ஆங்கிலத் திறன் குறைபாடுடன் காணப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

 

தகுதியான மாணவர்கள் மிகவும் குறைவு.

 


 


 
 

 




 
 

 

 
 

 

 


புத்தாண்டு.. மூணு நாளைக்கு 'கடைய' மூடுங்க! - ராமதாஸ் - www.tnfinds.com - Best site in the world...

புத்தாண்டு.. மூணு நாளைக்கு 'கடைய' மூடுங்க! - ராமதாஸ்

சென்னை: புத்தாண்டையொட்டி இரண்டு நாட்களில் மட்டும் ரூ.250 கோடிகளுக்கு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், எனவே புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தவிர்க்க டிசம்பர் 31 முதல் வரும் ஜனவரி 2ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட மக்கள் தயாராகிவரும் நிலையில், டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் மட்டும் ரூ.250 கோடிகளுக்கு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தாராளமாக மது விற்பனை செய்ய வசதியாக ஒவ்வொரு கடையிலும் 15 நாட்களுக்கு தேவையான மது இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
 
 
 தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தேவையான அளவுக்கு இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டாத அரசு, மது வகைகளை இருப்பு வைப்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது. 
 
 
ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்த பிறகுதான் இளைஞர்கள் மது அருந்தும் வழக்கமும் அதிகரித்திருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 14 முதல் 19 வயது வரையுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களில் 65 விழுக்காட்டினர் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று அசோசெம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி, 20 வயது முதல் 29 வயது வரையுள்ளவர்களில் 25 விழுக்காட்டினர் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மது அருந்துவதற்காக மட்டும் ரூ.1000 முதல் ரூ.10,000 வரை செலவழிக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.
 
 
 இந்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன என்ற போதிலும் இந்த உண்மைகளை எவரும் மறுக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிக அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலமாகவும், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதுதான் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களில் சென்னையில் சாலையோர நடைபாதைகளில் இருந்த குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழக்கக் காரணமான 2 பயங்கர சாலை விபத்துக்களுக்கு காரணம் மதுபோதை தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், புத்தாண்டையொட்டி நிகழும் பாலியல் குற்றங்களுக்கும் மது தான் காரணமாக விளங்குகிறது. 
 
இத்தனைத் தீமைகளுக்கும் காரணமான மதுவை கட்டுப்படுத்துவது தான் மக்கள் நலன் விரும்பும் ஓர் அரசின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே புத்தாண்டின் போது இலக்கு நிர்ணயம் செய்து மதுவை விற்பனை செய்வது வெட்கக்கேடான ஒன்றாகும். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று ஒருபுறம் அறிவுறுத்தும் அரசு, இன்னொரு புறம் மதுக்கடைகளை திறந்து வைத்து, இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வது முரண்பாடுகளின் உச்சமாகும். 
 
மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள் அதிகம் வாழும் அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கூட புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துக்களைத் தவிர்க்கவும், மற்றவர்களுக்கு தொல்லையில்லாத கொண்டாட்டங்களை உறுதி செய்யவும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது கலாச்சாரத்திற்கும், ஒழுங்குக்கும் பெயர்பெற்ற தமிழ்நாட்டில் அரசே அதிக அளவில் மது விற்பனை செய்வது சரியல்ல. 
 
எனவே, மக்களின் நலன்கருதி புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்" என இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.


 

 

முழுமையான பிரம்மச்சர்யம் உணர்ந்து வாழ்வேன்!- 'மா ஆனந்தமயி' ரஞ்சிதா! - www.tnfinds.com - Best site in the world..

முழுமையான பிரம்மச்சர்யம் உணர்ந்து வாழ்வேன்!- 'மா ஆனந்தமயி' ரஞ்சிதா! 

பெங்களூர்: முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் பிடதி ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன், என்று மா ஆனந்தமயியாக மாறியுள்ள நடிகை ரஞ்சிதா கூறினார்.
 
 தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு நித்யானந்தா சாமியாருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ பட காட்சிகள் சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. நித்யானந்தாவின் மடாலயங்கள் தாக்கப்பட்டது. ரஞ்சிதா தலைமறைவானார். நித்யானந்தா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். ரஞ்சிதாவும் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளிப்பட்டு ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல என்று அறிவித்தார். தன் மீது அவதூறு பரப்பி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 
 
 
இந்த நிலையில் தற்போது சன்னியாசியாகியுள்ளார். நித்யானந்தாவின் 37-வது பிறந்தநாள் விழா பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் நடந்தது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் சன்னியாசியாக விரும்புகிறவர்களுக்கு நித்யானந்தா தீட்சை வழங்குவது உண்டு. இந்த பிறந்த நாளிலும் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் தீட்சை பெற்றனர். 
 
அதில் ஒருவர் நடிகை ரஞ்சிதா. இதனால் பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆபாச வீடியோ சர்ச்சைக்கு பின்னரும் நித்யானந்தா ஆசிரமத்திலேயே ரஞ்சிதா தங்கி இருந்தார். ஆன்மீக சுற்றுப் பயணங்கள், தியான கூட்டங்களில், குண்டலினி எழுப்புதல் என அனைத்து நிகழ்வுகளிலும் நித்யானந்தாவுடனே காணப்பட்டார். 
 
 
தற்போது சன்னியாசியாகி உள்ளார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து ருத்ராட்சை மாலைகள், மற்றும் காவி உடை அணிந்து சன்னியாசியாக தீட்சை பெற்றார். பின்னர் மேடையில் அவர் பேசும்போது, "உண்மை, அமைதி, அகிம்சை போன்றவற்றை நான் புரிந்து கொண்டேன். இதன் மூலமே சன்னியாசி ஆகி இருக்கிறேன்.
 
 இனி எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன்," என்றார்.
 
 ஏற்கெனவே நடிகை ராகசுதாவும் இதே நித்யானந்தா மூலம் சன்னியாசம் பெற்றது நினைவிருக்கலாம்.


 


தமிழ்நாட்டில் எனக்குக் கொஞ்சம் பிரச்சினை இருக்கு, அதான் நடிக்கல!- அஞ்சலி - www.tnfinds.com - Best site in the world..

தமிழ்நாட்டில் எனக்குக் கொஞ்சம் பிரச்சினை இருக்கு, அதான் நடிக்கல!- அஞ்சலி

ஹைதராபாத்: தமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு.. அதான் தமிழில் இப்போதைக்கு நடிக்க முடியாத சூழல் உள்ளது, என்று நடிகை அஞ்சலி கூறினார்.
 
 தமிழில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படம் ஆந்திராவிலும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. 
 
ஹைதராபாதில் நடந்த இதன் வெற்றி விழாவில் பங்கேற்ற அஞ்சலி தமிழ் படங்களில் தான் நடிக்க முடியாத சூழல் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

விழாவில் அவர் பேசுகையில், "ஆதலால் காதல் செய்வீர்' படம் தயாரான போது அதில் கதாநாயகியாக நடிக்க என்னைத்தான் அழைத்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எனக்கு சில பிரச்சினைகள் உள்ளன. 
 
அது எல்லோருக்கும் தெரியும். எனவேதான் தமிழ் படங்களில் நடிக்காமல் உள்ளேன். ‘ஆதலால் காதல் செய்வீர்' படத்திலும் இதனால்தான் நடிக்க முடியவில்லை. இந்த படம் ஆந்திராவில் ரிலீசாகி பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
 
 இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை



 


பெங்களூரு வந்த நான்டேட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ; 26 பேர் பலி- 3 தமிழர்கள் உயிரிழப்பு - www.tnfinds.com - Best site in the world..

பெங்களூரு வந்த நான்டேட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ; 26 பேர் பலி- 3 தமிழர்கள் உயிரிழப்பு

அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயம் அடைந்துள்ளனர். 
 
மகராஷ்டிரா மாநிலம் நான்டேட் பகுதியில் இருந்து நேற்று இரவு பெங்களூர் புறப்பட்ட நான்டேட் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 3.45 மணியளவில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே உள்ள சென்று கொண்டிருந்தது. கொத்தசேவூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. ரயிலின் வேகம் அதிகமாக இருக்கவே தீ மளமளவென பற்றியது.
 


அதிகாலை நேரம் என்பதால் உறக்கத்தில் இருந்த பயணிகள் பலர் எரிந்து சாம்பலாயினர். மூச்சுத் திணறியும் பலர் பலியாகினர். இதுவரை 26 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அனந்தபூர் மற்றும் தர்மாவரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
5-க்கும்மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தும் விதமாக ரயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். 
 
ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் ஏறபட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சகம் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.
 
 விபத்து குறித்து விசாரணை நடத்தவும் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில் தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் சுதா, லீலா, ராமநாதன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. 
 
அதேபோல ரயிலில் பயணம் செய்த குரோம்பேட்டையைச் சேர்ந்த நடேஷ், குழந்தை தனுஸ்ரீ ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. தீக்காயமடைந்த இருவருக்கும் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரயிலில் பயணித்த தனியார் வங்கி ஊழியரான நடேஷின் மனைவி விஜிதா பற்றி தகவல் இல்லை. 
 
குரோம்பேட்டையில் நியூ காலனி 4-வது மெயின் ரோட்டில் வசித்து வருகிறார் நடேஷ். நான்டேட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை நடைபெற்ற தீ விபத்து அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 
 
ரயிலில் பயணம் செய்தவர்கள் பற்றி தெரிந்து கொள்ள ரயில்வே நிர்வாகம் உதவி தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது ஹைதராபாத்: 040 - 23310680 பெங்களூரு: 080 - 22354108, 22259271, 080 2235 4108, 080 2225 9271, 080 2215 6554

 

Friday, December 27, 2013

காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் - www.tnfinds.com - Best Site In The World


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ்

நம்ம அப்பா அம்மா காலத்துலலாம் போலீஸ்னு சொன்னாவே அப்படி பயப்படுவாங்க ஆனா இப்பவே போலீஸ் தான் மக்கள பாத்து பயப்படுது காரணம் அந்த அளவுக்கு ஊடகங்கள் வளர்ந்திருக்கிறது. 

பேஸ்புக், ட்விட்டர் என நிறைய சமூக வலைத்தளங்களும் இருக்கிறது ஒரு சிறிய பிரச்சனையை மிக சுலபமாக அனைவரிடமும் கொண்டு சேர்த்து விடலாம். 

சரி அத விடுங்க இங்க சில காவல் குறை நண்பர்கள் இருக்காங்க ஓ... சாரிங்க காவல் துறை நண்பர்கள் இருக்காங்க அவங்கள பாருங்க எப்படி கெத்தா இருக்காங்கன்னு...

1


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் என்ன ஒரு தத்ரூபமான காட்சி மொத போட்டோவே செம...

2


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் குருநாதா என்ன மூஞ்சிய காணோம் குருநாதா.

3


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் சட்டம் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது

4


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் இது என்னாது புதுசா இருக்கு

5


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் உள்ள இருக்கறது மொம்மை மாதிரி இல்ல தெரியறது இத கூட அரெஸ்ட் ப்ண்ணுவாளா இவாள்

6


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் போலீசா இருந்தாலும் அவளும் பெண் தானே...

7


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் வாவ்

8


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் சார் சார் கீழே என்னமொ ஓடுது பாருங்க.

9


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் விளையாட்டு...ம்ம்ம்

10


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் கருப்பன் குசும்பு காரன்...

11


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் வாவ் போலீஸ் நாய்....

12


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் நாங்க டியூட்டில ரொம்ப ஸ்டிட்டு

13


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் போலீசே இப்படியா சூப்பரு

14


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் ஆளே இல்லாத ஆத்துல அப்படி என்னத்த சார் பாக்குறீங்க

15


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் இவருதாங்க நெஜ போலீஸ்

16


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் டியூட்டி பாக்கறாரு

                                             17


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் அருமை...


18


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் கலவரத்த அடக்குங்க ஆபிஸர்ன்னு சொன்னா இங்க வந்து போட்டோக்கு போஸ் கொடுக்கறாரு
19

காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் சட்டத்தின் முன் அனைவரும் சமம்

20


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் யாருப்பா இந்த வேலைய பாத்தது

21


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் ஹலோ ஹலோ இது ஒன் வே ங்க

22


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் இப்படி ஒரு போலீஸ் நம்ம நாட்டுல ஏன் இல்லாம போய்ட்டாங்க

23


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் ஒருவேளை டிரெயின்ங்கா இருக்குமா

24


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் சார் சார் நீங்க தான் சார் என்னோட ஒடிப்போன பொண்டாட்டிய கண்டுபிடிச்சு தரணும்

25


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் தலைவர் ரஜினி பேன் போல...


More Hot News Click Here...





































யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... - www.tnfinds.com - Best Site in The World


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு....

யானை பெரிய சைஸ்ல இருந்தா தாங்க நமக்கு பயம் அதுவே சின்னதா இருந்தா நம்ம அத பாத்து பயப்படுவோமா, கண்டிப்பா மாட்டோம். 

இதனால சபைல இப்ப நான் என்னா சொல்ல வர்றேனா இங்க இருக்கும் இந்த மிருகங்கள பாருங்க. 

இதுங்களோட ஒரிஜினல் சைஸ் என்னமோ சின்னதுதாங்க ஆனா இப்ப இதுங்க இருக்கற மெகா சைஸ கொஞ்சம் பாருங்க...

1


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... இது என்னான்னு தாங்க எனக்கு தெரியலை.

2


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... பூரான் போல இது நம்ம வீட்டுக்குள்ள செம தான்.

3


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... வாவ் முயல்.

4


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... மீனுங்க மீன்.

5


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... எட்டுக்கால் பூச்சி

6


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... மீனம்மா

7


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... இது என்னாது

8


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... வௌவ்வால்...

9





யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... இது நம்மை கடிக்காது அப்படியே நம்மை சாப்பிட்டு விடும் போலவே

10


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... ம்ம்ம்

11


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... பட்டாம்பூச்சி

12


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... குட்டி பாம்பு

13


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... அருமை

14


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... புலிக்குட்டியோட தம்பி பூனைக்குட்டி

15


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... செண்பகத்த பாத்திங்களா எப்படி வளந்துட்டான்னு

16


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... கரப்பான் பூச்சி

17


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... தவளை

18


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... இது நத்தை தாங்க

19


யப்பா என்னாது இது இவ்ளோ பெருசா இருக்கு.... ம்ம்ம்... இது என்னவா இருக்கும்

More Hot News Click Here...