Wednesday, June 11, 2014

Puthiya Thodakkam E Magazine - 11-06-2014

புதிய தொடக்கம் இதழின் 5ம் வெளியீடு
உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட இணைய முகவரியில் புத்தகத்தை படித்துவிட்டு இங்கே பதியவும்.

Saturday, January 11, 2014

60 ஆண்டுகளாக குளிக்காத ஈரானின் அழுக்கு மனிதர்’: உடம்பில் தண்ணீரே பட்டதில்லை! - www.tnfinds.com - Best site in the world...


60 ஆண்டுகளாக குளிக்காத ஈரானின் அழுக்கு மனிதர்’: உடம்பில் தண்ணீரே பட்டதில்லை!

டெஹ்ரான்: ஈரானில் 60 ஆண்டுகளாக ஒரு மனிதர் குளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த கப்பு மனிதர் விலங்குகளின் சாணத்தை பைப்பில் அடைத்து புகைக்கும் விசித்திர பழக்கமும் கொண்டுள்ளார்.

 தினந்தோறும் குளிப்பது மனிதர்களின் இயல்பு, தண்ணீர் பஞ்சத்தைப் பற்றியும் கவலைப்படாமல், இருவேளை குளிப்பார்கள். 

ஈரானின் தெற்கு மாகாணமான ஃபர்ஸ் பகுதியில் உள்ள டெஜ்கா என்ற கிராமத்தை சேர்ந்த அமோவ் ஹாஜி. கடந்த 60 ஆண்டுகளாக உடம்பில் தண்ணீரே படாமல் வாழ்ந்து வருகிறார். 

இளம் வயதில் தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இவர், இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்து, பற்றற்ற துறவியின் நிலையில் வாழ்ந்து வருகிறார்.


உலகின் அழுக்கான மனிதர்.


நீராவியால் இயங்கும் ரெயிலின் டிரைவரைப் போல் உடல் முழுவதும் பட்டைப்பட்டையாய் புழுதி மண்ணுடனும், கன்னங்கரேலென்ற அழுக்கு துணிகளுடனும் அந்த கிராமத்திலேயே சுற்றிச்சுற்றிவரும் இவரை மடக்கிப்பிடித்து குளிப்பாட்ட பலர் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல், விரையத்தில் தான் முடிந்துள்ளது.


கெட்டுப்போன இறைச்சி.

இவர் விரும்பி சாப்பிடுவது என்ன தெரியுமா? கெட்டுப்போன இறைச்சியும், செத்துக் கிடக்கும் உயிரினங்களின் மாமிசமும்தான்.

விலங்குகளின் சாணம்.

'செயின் ஸ்மோக்கர்' ஆன தனது 'ஸ்மோக்கிங் பைப்'பில் (புகை பிடிக்க பயன்படுத்தும் உறிஞ்சு குழல்) புகையிலைக்கு பதிலாக விலங்குகளின் சாணத்தை அடைத்து, 10 நிமிடத்திற்கு ஒரு முறையாவது பைப்பை பற்றவைத்து ‘தம்' அடிக்காவிட்டால் தலை வெடித்து விடுவது போல் அமோவ் ஹாஜி துடித்துப்போய் விடுகிறார்.

கிடைத்த இடத்தில் உறக்கம்.

இவருக்கு உரிமையான உபயோகப் பொருட்கள் என்று ஏதுமில்லாததால் ‘மடியில கனமில்லே.. வழியில பயமில்லே' என்ற சித்தாந்தத்தின்படி, பயமறியாத இளங்கன்றாக கடந்த 60 ஆண்டுகளாக குளித்தே அறியாமல் இவர் டெஜ்கா கிராமத்தில் வலம் வருகிறார்.


சாதனை முறியடிப்பு.

இந்த சாதனையை இவர் எட்டுவதற்கு முன்னர் வரை 66 வயதான ஒரு நபர் 38 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்தது தான் பெரிய சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையை தற்போது அமோவ் ஹாஜி முறியடித்து விட்டார்.

இந்தியாவின் கைலாஷ்சிங்.

முந்தைய சாதனைக்கு சொந்தக்காரர், இந்தியாவின் வாரணாசி பகுதியை சேர்ந்த கைலாஷ் சிங் என்பவர்தான். 'உயிரே போனாலும் இனி குளிக்கப்போவது இல்லை' என 1974-ம் ஆண்டில் சபதமேற்றுக் கொண்ட இவர் 2012 வரை 38 ஆண்டுகளாக குளித்ததே கிடையாது. 

அதற்கு பிறகாவது அவர் குளித்தாரா? இல்லையா? என்பது தொடர்பாக இவரைப்பற்றி உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.












இந்தியாவின் அழகிய தோட்டங்கள் - www.tnfinds.com - Best Site In The orld


இந்தியாவின் அழகிய தோட்டங்கள்


முன்னாட்களில் இயற்கையாக ஆங்காங்கு பூத்துச் சிரிக்கும் மலர்ச் செடிகளும், குளங்களும், அழகிய தாவரங்களும் நம் வாழும் சூழ்நிலையின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தன. ஆனால் நாளடைவில் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் கட்டும் பொருட்டு குளங்கள் தூர்க்கப்பட்டும், மரங்கள் வெட்டப்பட்டும் இந்த இயற்கை வளங்களை இழக்க நேர்ந்தது. எனவே இதை ஈடுசெய்யும் நோக்கத்துடன் செயற்கையான தோட்டங்கள் ஆங்காங்கு உருவாக்கப்படுகின்றன. அதேவேளையில் மன்னர் காலத்து தோட்டங்கள் சிலவும் நம்மிடையே இன்று எஞ்சியுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் காணப்படும் சில குறிப்பிடத்தக்க அழகிய தோட்டங்களை பற்றி காண்போம்.

இந்திரா காந்தி துலிப் தோட்டம், ஸ்ரீநகர் 




தால் ஏரிக்கருகில் ஸபர்வான் மலைச்சிகரங்களில் உள்ள இந்திரா காந்தி துலிப் தோட்டம் ஸ்ரீ நகரிலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் ஒரு வார பண்டிகையான துலிப் திருவிழாவிற்காக இந்த இடம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த தோட்டத்தில் பூக்களுக்கான பருவத்தில் ஒரே சமயத்தில் 1.3 மில்லியன் துலிப் பூ மொட்டுக்கள் பூக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்தோட்டம் ஷாலிமார் தோட்டம், சஸ்ம்-இ-ஷாஹி, நிஷாத் தோட்டம் மற்றும் பிற முகலாய தோட்டங்களுக்கு மிகவும் அருகிலேயே அமைந்துள்ளது.


பிருந்தாவன் கார்டன், மைசூர் 



காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாகர் என்ற அணைக்கு கீழே இந்த பூங்கா தோட்டம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பூங்காவின் மையத்தில் அமைந்துள்ள சிறு குளத்தில் காவேரி தெய்வத்தின் சிலை அமைந்துள்ளது. இக்குளத்தில் பயணிகள் படகு பயணம் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. 

ஷாலிமார் தோட்டங்கள், ஸ்ரீநகர் 



ஸ்ரீ நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஷாலிமார் தோட்டங்கள், ஸ்ரீ நகரின் புகழ் பெற்ற முகலாய தோட்டங்களில் ஒன்றாகும். ஷாலிமார் என்ற வார்த்தைக்கு 'காதலின் இருப்பிடம்' என்று பொருளாகும். இந்த தோட்டம் ஷாலிமார் பூங்கா, பைய்ஸ் பக்ஷ், சார் மினாரின் தோட்டம் மற்றும் ஃபாரா பக்ஷ் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகிறது. முகலாய மன்னர் ஜஹாங்கீர் தனது மனைவி நூர் ஜஹானுக்காக 1619-ம் ஆண்டு இந்த தோட்டத்தை உருவாக்கினார். பெர்சியாவில் உள்ள சஹார் பாக் தோட்டத்தின் வடிவத்தை போலவே ஷாலிமார் 

லால் பாக், பெங்களூர் 




லால் பாக் என்றால் ‘சிவப்பு தோட்டம்' என்பது பொருள். இந்த பூங்காத்தோட்டமானது புகழ் பெற்ற முகலாய தோட்டங்களை போன்று அமைக்கும் நோக்கத்துடன் ஹைதர் அலியால் துவங்கப்பட்டு அவரது மகன் திப்புசுல்தானால் முழுதும் உருவாக்கி முடிக்கப்பட்டது. 240 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் லால் பாக்கில் 1000 வகையான மலர்ச்செடிகளும் பலவகைப்பட்ட வறண்ட பிரதேச வகைத் தாவரங்களும் காணப்படுகின்றன. இந்த பூங்காத்தோட்டத்தின் உள்ளே பீடபூமி போன்ற இயற்கையான பாறை அமைப்பு காணப்படுகிறது. லால் பாக் பாறை என்று அழைக்கப்படும் இது 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

நிஷாத் பூங்கா, ஸ்ரீநகர் '





நிஷாத் பூங்கா' என்ற வார்த்தைக்கு 'மகிழ்ச்சியின் தோட்டம்' என்று அர்த்தமாகும். 1633-ம் ஆண்டு தால் ஏரியின் கிழக்கு கரையில் கட்டப்பட்ட இந்த பூங்காவில் அரிய வகையிலான பூக்கள், சினார் மரங்கள் மற்றும் சைப்ரஸ் மரங்கள் ஆகியவை உள்ளன.


தொங்குதோட்டம், மும்பை 



மும்பை மாநகரில் உள்ள பூங்காக்களில் மிகவும் பழமையான பூங்காவாக தொங்குதோட்டம் அறியப்படுகிறது. இந்தத் தோட்டத்தின் கவர்ந்திழுக்கும் அம்சமான ராட்சஸ மூதாட்டியின் காலணியை காண்பதற்காகவே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இங்கு அலைமோதுகிறது. இங்கிருந்து அரபிக்கடலின் பின்னணியில் சூரிய அஸ்த்தமனத்தை ரசிப்பது ஒரு அலாதியான அனுபவம்.



'டவுட்' தனபாலு - www.tnfinds.com - Best site in the world...

'டவுட்' தனபாலு

மத்திய தலைமை வழக்கறிஞர், வாஹன்வதி: நிலங்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சில தவறுகள் நடந்திருப்பது உண்மையே; அரசின் கொள்கை முடிவு காரணமாக, விதிகள் தளர்த்தப்பட்டதும் உண்மை தான்.
டவுட் தனபாலு: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பான சி.பி.ஐ., விசாரணை அறிக்கையில் திருத்தம் நடந்துச்சு... முக்கிய ஆவணங்கள் மாயமாச்சு... இதை எல்லாம் சாக்குப்போக்கு சொல்லி, பிரதமரும், மத்திய அரசும் தட்டிக்கழிச்சாங்க... இப்ப ஒரு வழியா, ஒரு தவறை அரசு ஒப்புக்குச்சு... இனி, இன்னும் நிறைய பூதங்கள் வெளிவரும் என்பதில், 'டவுட்'டே இல்லை...!

காங்., மூத்த தலைவர், குலாம் நபி ஆசாத்: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்; கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.
டவுட் தனபாலு: 'கூட்டணியில் இருந்து, தி.மு.க., வெளியேறியதன் மூலம், காங்கிரசுக்கு இப்போது தான், சுதந்திரம் கிடைச்சு இருக்கு'ன்னு உங்க கட்சியின் மாநிலத் தலைவர்கள் பேசிட்டு வர்றாங்க... 'அது அப்படியில்லை; நீங்க இருந்தால் தான், எங்களுக்கு மரியாதை'ன்னு விளக்கறதுக்குத் தான், இந்த மரியாதை நிமித்தமான சந்திப்புங்கறது, நீங்க சொல்லித்தான் தெரியணுங்கற அவசியமில்லே; மக்களே புரிஞ்சுக்குவாங்கங்கறதுல, 'டவுட்'டே இல்லே!

புதிய தமிழகம் கட்சித் தலைவர், கிருஷ்ணசாமி: இந்திய அளவில் மாற்றம் வேண்டும் என, ஜெயலலிதா நினைக்கிறார்; பேசுகிறார். தமிழகத்திலேயே, அவரால் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாதபோது, எப்படி இந்திய அளவில் மாற்றத்தை உருவாக்க முடியும்?
டவுட் தனபாலு: 'ஜெயலலிதாவால் தான், மாற்றத்தை கொண்டு வர முடியும்'னு, சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் முழங்கியதை நீங்க மறந்துட்டீங்களா... 'சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னாடி, என்னை சீந்தக்கூட மாட்டேங்குறாங்க'ங்குற விரக்தியில் இருக்கீங்க என்பது, 'டவுட்'டே இல்லாமத் தெரியுது...!

More Hot News Click Here...


பக்க வாத்தியம் - www.tnfinds.com - Best site in the world...

பக்க வாத்தியம்

எல்லாரையும் 'கவர்' பண்ணுங்க!

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின், முன்னோடி திட்டங்கள் குறித்து, கால்நடைத் துறை அமைச்சர், சின்னையா தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில், விவாதிக்கப்படும் திட்டங்கள் குறித்து, செய்தி மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக, பத்திரிகையாளர்கள் சென்றனர்; அனுமதி மறுக்கப்பட்டது.பின், அமைச்சர் பேசும் போது, 'அனைத்து பத்திரிகையாளர்களும், உள்ளே செல்லலாம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளே சென்ற பத்திரிகையாளர்கள், அமைச்சரை புகைப்படம் எடுத்தனர். அப்போது, கால்நடைத் துறை அமைச்சர் சின்னையா, 'அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும், 'கவர்' பண்ணி, படம் எடுங்கள்' என்றார்.இதைக் கேட்ட அரசு அதிகாரிகள் சிலர், 'பத்திரிகைகளில் வரும் படங்களில், இடம் பெறாத, எம்.எல்.ஏ.,க்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என, முதல்வர், கட்சியை விட்டு துாக்கிடுவாங்க போலிருக்கு... அதான், அமைச்சர், பயந்து போய், அனைவரையும், 'கவர்' பண்ணுங்க'ன்னு சொல்றாரு...' என்றனர்.
இதைக் கேட்ட மூத்த நிருபர்கள் சிலர், சிரித்து விட்டுச் சென்றனர்.

அலட்சியப்படுத்திய அதிகாரிகள் வறுத்தெடுத்த பெரியவர்!

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, ஒரு ரேஷன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதி, சமீபத்தில் துவக்கி வைத்தார். சென்னை மேயர், சைதை துரைசாமி, கலெக்டர் சுந்தரவள்ளி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.விழா முடியும் முன்னரே, மேயர் துரைசாமி மேடையை விட்டு இறங்கினார். அப்போது, தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின், 'பாரத பாக்ய விதாதா' என்ற வரியில் இருந்து, தேசிய கீதம் மீண்டும் ஒலிபரப்பப்பட்டது. மேடையில் இருந்த அமைச்சர் உட்பட, யாரும் இதை கண்டு கொள்ளவில்லை.கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர், 'அரசு விழாவுல, அரசியல்வாதிகள் மட்டுமில்லாம, அதிகாரிகளும் கூட, தேசிய கீதத்தை, இப்படி அலட்சியம் செய்றாங்களே... இந்த அதிகாரிங்களோட, 'சீட்'டை கிழிக்க, சட்டம் வரணும்...' என, கோபத்தில் கொப்பளிக்க, அவ்வழியே வந்த அரசு அதிகாரி ஒருவர், பெரியவரின் பேச்சைக் கேட்டு பயந்து, அப்படியே, 'ரிவர்ஸ்' எடுத்து, வந்த வழியே, அசடு வழியச் சென்றார்.

More Hot News Click Here...

ஜில்லா- விமர்சனம் - www.tnfinds.com -Best Site In the World


ஜில்லா- விமர்சனம்

நடிப்பு - விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, மகத், சம்பத், பூர்ணிமா ஜெயராம் 

இசை - டி இமான் 

ஒளிப்பதிவு - கணேஷ் ராஜவேலு 

தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி 

இயக்கம் - ஆர்டி நேசன் 

ஆக்ஷன் கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஆனால் அதற்காக இப்படியா? என்ற கேட்க வைக்கிற, கற்பனையை தோற்கடிக்கும் போலீஸ் ஸ்டோரி, விஜய் - மோகன்லால் நடித்துள்ள ஜில்லா. 

மதுரையின் அசைக்கமுடியாத தாதா மோகன்லால். தன்னை எதிர்க்க வேண்டும் என்ற நினைக்கு ஒருவனுக்கு எழுந்தாலே அவனை அழித்துவிடும் சிவன்.



(ஜில்லா படங்கள்) 

அவரது வளர்ப்பு மகன்தான் விஜய். தன் ஒரிஜினல் அப்பாவை கண்ணெதிரிலேயே போலீஸ் சுட்டுக் கொன்றதைப் பார்த்த பிறகு, காக்கிச் சட்டை என்றாலே மகா வெறுப்பு.. எந்த அளவு தெரியுமா, தான் விழுந்து விழுந்து காதலிப்பவள் ஒரு போலீஸ் என்று தெரிந்ததும், அவளைக் கைகழுவும் அளவுக்கு. ஆனால் சூழ்நிலை, விஜய்யை காக்கிச் சட்டை போட வைக்கிறது. தன் அப்பாவுக்கு சாதகமான போலீசாக ஜாலியாக சுற்றும் விஜய், ஒரு கோர விபத்தைப் பார்த்த பிறகு அப்பாவின் தாதாயிசத்தை அடியோடு ஒழிக்க முடிவு கட்டுகிறார். மோகன்லாலுக்கும் விஜய்க்கும் இடையில் யுத்தம் ஆரம்பிக்கிறது... அது எப்படி முடிவுக்கு வருகிறது என்பதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள். பல லாஜிக் ஓட்டைகளில் சிக்கித் தவிக்கும் இந்தப் படத்தை கொஞ்சமேனும் காப்பாற்றுபவர்கள் இருவர்.. ஒருவர் விஜய். அடுத்தவர், சந்தேகமென்ன.. மோகன்லால்தான். இந்த இருவரையும் பார்ப்பதற்காக மட்டும்தான் கடைசி வரை இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது.


அதிலும் விஜய்... அல்டிமேட். இந்தப் படத்தில் தன் உடல் மொழியை மொத்தமாக மாற்றியிருக்கிறார் (ஆனால் அந்த வசன உச்சரிப்பு, சொதப்பிபைய்ங்!). சுழன்று சுழன்று அடிக்கும் அந்த சண்டைக் காட்சி, கற்பூரம் மாதிரி அடுத்து நடப்பதை யூகித்து வியூகம் வகுக்கும் மின்னல் வேகம்... என மாஸ் ஹீரோவுக்கான அத்தனை விஷயங்களையும் சர்வ சாதாரணமாய் செய்கிறார். அந்த கண்டாங்கி கண்டாங்கி பாடலில் விஜய் மனசை அள்ளுகிறார்... ஷங்கர் ஸ்டைல் பிரமாண்டம், அழகு... காஜலும், அந்த அட்டகாச லொகேஷனும் கூடத்தான்! சினிமாக்காரர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளான கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸுக்கெல்லாம் அர்த்தம் தெரியணும்னா... இந்தப் பாட்டைப் பார்க்கலாம்! மோகன் லால் கம்பீரமாக வருகிறார். மகனோடு விளையாடும் காட்சியிலும் சரி, மோதும் காட்சியிலும் சரி... மகா இயல்பு. ஆனால் இந்த மாபெரும் கலைஞனை, ஏதோ கோயில் யானையைப் போல ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் கட்டி முடக்கிவிட்டது போலத்தான் காட்சிகள் அமைந்துள்ளன. சும்மா சும்மா அவர் உறுமிக் கொண்டே இருந்தால் போதுமா... அவர் பலத்தை, புத்திசாலித்தனத்தைக் காட்டும் காட்சி, அட்லீஸ்ட் ஒன்றாவது வேண்டாமா?


இவருக்கு என்ன சிக்கலென்றாலும், அதைத் தீர்க்க விஜய் மட்டும்தான் வரவேண்டியிருக்கிறது. இது மோகன்லால் பாத்திரத்தை டம்மியாக்குகிறதே! துப்பாக்கிக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாகியிருக்கிறார் காஜல். கண்டாங்கி கண்டாங்கி பாடல், அந்த என்சிசி கேம்ப், அப்புறம் இரண்டு 'பேக் டு பேக்' மசாஜ் காட்சிகளில் மட்டும் மனசில் நிற்கிறார். மற்ற காட்சிகளில் முகத்தில் ஒரு முதிர்ச்சி.. அவரை விட விஜய் இளமையாகத் தெரிகிறார்! சூரிக்கு படம் முழுக்க வரும் காமெடியன் வேடம். ஆனால் அடிக்கடி முன்பக்கத்தில் அடிவாங்கி, வாயில் புகைவிடும் பரிதாப கேரக்டர். அவரது வேலையையும் விஜய்யே செய்துவிடுவதால், இவர் சும்மா வந்து போக வேண்டியுள்ளது. பூர்ணிமா பாக்யராஜ், இறுதிவரை ஒரு நல்ல அம்மாவாக வருகிறார். பெறாத மகன் என்றாலும் கடைசி வரை மாறாத பாசம் காட்டி மனதில் பதிகிறார். அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு பூர்ணிமா என்ற 'நல்ல அம்மாவை' தொடர்ந்து திரையில் பார்த்து நெகிழலாம். இப்படி ரசிக்கும்படியான காட்சிகள், திறமையான கலைஞர்களின் பங்களிப்பு இருந்தாலும்... மோசமான ஓட்டைகள் நிறைந்ததாக உள்ளது ஜில்லா.


ஒரு நேர்மையான கமிஷனர்... அவர் கையை நடுரோட்டில் வெட்டுகிறார் ரவுடியான விஜய். அவரை போலீஸ் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் அவரோ, ஜாலியாக போலீஸ் ஆகிறார். யாரை வெட்டினாரோ அவர் மூலம் பதவி உயர்வே பெறுகிறார்! ஒரே நேரத்தில் தந்தையைப் பறிகொடுத்த விஜய்யும் சம்பத்தும் மோகன்லால் வீட்டில் வளர்கிறார்கள். இளமையில் ஒரே வயதுக்காரர்களாய் இருக்கும் இவர்கள் வளர்ந்த பிறகு, சம்பத்துக்கு மட்டும் அவ்வளவு வயசாகிவிடுவது எப்படி என்று புரியவில்லை. என்னதான் மோசமான தாதாவாக இருந்தாலும், பெற்ற மகனை (மகன்) ஏவி நகரம் முழுக்க வன்முறையைத் தூண்டை வைப்பாரா.. அதுவும் அத்தனை சேனல்களிலும் பப்பரப்பே என படமெடுத்து வெளியிடும் அளவுக்கு? அடுத்தடுத்து இரண்டு டூயட்டுகள். அதில் ஒன்று ரசிக்க வைத்தாலும், அடுத்த பாடலில் (எப்ப மாமா ட்ரீட்), நடனத்தில் இணையற்ற விஜய்யை கேவலமாக, ஏதோ உடற்பயிற்சி செய்ய வைப்பது போல், ஆட வைத்து கடுப்பேற்றியிருக்கிறார் இயக்குநர் நேசன். அதை மன்னிக்கவே முடியாது!


3 மணி நேரம் படத்தை இழுப்பது இன்னொரு கொடுமை. இந்தப் படத்தை இரண்டே கால் மணி நேரத்துக்குள் சுருக்கியிருக்க முடியும். எடிட்டர் டான் மேக்ஸ் தூங்கிவிட்டார் போலிருக்கிறது. ஆர்கேவை வீணடித்திருக்கிறார்கள். அவரை வைத்து இன்னும் சுவாரஸ்யமான இரு காட்சிகளை வைத்திருக்கலாம், தனக்குக் கிடைத்திருக்கிற வாய்ப்பு எப்பேர்ப்பட்ட மகத்தானதென்ற நினைப்பு இயக்குநருக்கு இருந்திருந்தால்! விஜய்யின் தம்பி, தங்கையாக வரும் மகத், நிவேதிதா இருவரும் விஜய்க்கு ஆகாதவர்களைப் போல காட்டிவிட்டு, திடீரென்று இருவருக்கும் அவர் மீது பாசம் பொங்குவது எடுபடவில்லை. கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. அந்த நெடுஞ்சாலைக் காட்சிகள் பிரமாண்டமாக உள்ளது. கண்டாங்கி கண்டாங்கி பாடலில் வண்ணமயம். இமானின் இசையும் அந்தப் பாட்டில்தான் ஓஹோ. மற்றவற்றில் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், தலைவாவோடு ஒப்பிடுகையில் 100 சதவீதம் பார்க்கலாம் ரக படமே. பொங்கல் லீவில் வெட்டு வெட்டென்று உட்கார்ந்திருப்பதை விட அல்லது மொக்கையான டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு, இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம் (இப்போது 10 நிமிட காட்சிகளை தூக்கிவிட்டார்களாம்)!

More Hot News Click Here...







ஜில்லா, வீரம் வெளியீடு... கடும் ட்ராபிக்கால் சென்னையில் வாகன ஓட்டிகள் அவதி! - www.tnfinds.com - Best Site In The World


ஜில்லா, வீரம் வெளியீடு... கடும் ட்ராபிக்கால் சென்னையில் வாகன ஓட்டிகள் அவதி!


சென்னை: 


ஜில்லா, வீரம் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானதால் சென்னையில் கிண்டி கத்திப்பாரா தொடங்கி கே கே நகர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜில்லா மற்றும் வீரம் ஆகிய இரு படங்களும் சென்னை மற்றும் புறநகர்களில் ஏராளமான அரங்குகளில் வெளியாகின. சென்னை அண்ணா சாலையின் தென்பகுதியான கிண்டி கத்திப்பாராவில் உள்ள ஜோதி திரையரங்கில் இரு படங்களுமே வெளியிடப்பட்டுள்ளன.


அடுத்து இரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காசி திரையரங்கில் ஜில்லா திரையிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து சில மீட்டர் தூரத்தில் உள்ள உதயம் காம்ப்ளெக்சில் ஜில்லா, வீரம் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இந்த மூன்று அரங்குகளுமே கிட்டத்தட்ட நெடுஞ்சாலையில் உள்ளன. இந்தப் படங்களுக்கு அதிகாலையிலிருந்தே சிறப்புக் காட்சிகள் போடப்பட்டதால், விஜய், அஜீத் ரசிகர்கள் திரண்டு வந்து மேள தாளம், பாலாபிஷேகத்தோடு முதல் காட்சி பார்த்தனர். சாலைகளில் பட்டாசுகள் கொளுத்தினர். சாலையை அடைத்துக் கொண்டு ரசிகர்கள் நின்றதால் காலையில் 11 மணி வரை இந்த சாலை திணறியது.


More Hot News Click Here...







டீ கடை பெஞ்சு - www.tnfinds.com- Best site in the world...

டீ கடை பெஞ்சு

வருத்தத்தில் 'வருவாய்' துறையினர்!

''மதுரையில, போஸ்டர் கலாசாரம், என்னைக்கு தான் ஓயப் போகுதோ தெரியலை பா...'' என்ற அன்வர்பாய், வடையை எடுத்து கடித்தபடி, பெஞ்சில் வந்தமர்ந்தார்.
''எந்தக் கட்சியை சொல்றீங்க... 'யாரை' சொல்றீங்க... கொஞ்சம் விவரமா தான் சொல்லுங்க...'' என, ஆர்வமாய் கேட்டார், அந்தோணிசாமி.

''இது கட்சிக்காரங்க மேட்டர் இல்லை பா... மதுரை காமராஜ் பல்கலையிலும், கட்சிக்காரங்க மாதிரியே, போஸ்டர் கலாசாரம், தொற்றியிருக்கு... இப்போதைக்கு, இந்த விஷயம் தான், மதுரையில, சுவாரசியமா பேசப்படுது...

''துணைவேந்தரை பாராட்டி, 'தாயே... பெண்ணரசியே... அம்மாவே...' அப்படின்னு, அரசியல்வாதியை துதி பாடும், 'ரேஞ்சு'க்கு, பல்கலையை சுற்றியுள்ள சுவர்களில், அடிக்கடி போஸ்டர்கள் மின்னுது பா...

''இதெல்லாம், துணைவேந்தருக்கு தெரியாமலா நடக்கும் வே...'' என, பெரியசாமி அண்ணாச்சி இடைமறிக்க, ''தெரியாம எப்படிப்பா இருக்கும்... 'வேறு ஏதாவது இடமா இருந்தா கூட பரவாயில்லை... பல்கலையை சுற்றி தேவையா... கல்விக் கூடங்களில், இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்காம, துணைவேந்தர், 'தடா' போடணும்'னு, கல்வியாளர்கள் விரும்புறாங்க பா...'' என விவரித்தார் அன்வர்பாய்.

''வருவாய்த் துறை அதிகாரிகளும், போலீசாரும் புலம்புதாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.

''ஏங்க... பொங்கல் போனஸ் இன்னும் கிடைக்கலியாமா...'' என, இடைமறி்த்தார் அந்தோணிசாமி.

''அது இல்லை வே... ரேஷன் அரிசியை, யாரும் ஆந்திராவுக்கு கடத்துறது இல்லையாம்... அதான் புலம்புதாவ...'' என்ற அண்ணாச்சி, தொடர்ந்து, ''திருவள்ளூர் மாவட்டத்துல இருந்து தான், அதிகளவுல, ரேஷன் அரிசியை, ஆந்திராவுக்கு கடத்துதாவ...

''ரெண்டு மாசமா, கடத்தல் குறைஞ்சிடுச்சு... குறிப்பா, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுக்காவில் இருந்து, கடந்த ரெண்டு மாசமா, யாருமே, ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தலை...

''ஏன்னா, நகரி, புத்துார் பகுதிகள்ல, ரேஷன் அரிசியை வாங்குற முதலாளிகள், இப்போ, ஜெயில்ல இருக்காவ...

''ரேஷன் கடத்தலில் ஈடுபடும் பெண்களும், வியாபாரிகளும், ரெண்டு மாசமா, வீட்டில ஓய்வு எடுக்காவ...

''இதனால, 'வருவாய்' பாதிக்கப்பட்ட, வருவாய்த் துறை ஊழியர்களும், போலீசாரும் கவலைல இருக்காவ... கடத்தல்காரங்ககிட்ட, 'மீண்டும் எப்போ, தொழிலை ஆரம்பிக்கப் போறீங்க?'னு, கேக்காவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி. ''வேற ஒண்ணும் விஷயமில்லையே பா...'' என்ற அன்வர்பாய், ''நான் கிளம்பறேன்...'' என்றபடி, நடையைக் கட்டினார். மற்ற நண்பர்களும் கிளம்பவே, பெஞ்ச் அமைதியானது.

More Hot News Click Here..

இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் ஜில்லாவுக்குதான்!- ஆர்பி சவுத்ரி - www.tnfinds.com - Best Site In The World


இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் ஜில்லாவுக்குதான்!- ஆர்பி சவுத்ரி

சென்னை: 


விஜய் நடித்த படங்களிலேயே அதிக ஆரம்ப வசூல் விஜய் நடித்த ஜில்லா படத்துக்குத்தான் என்று தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி தெரிவித்தார். ஜில்லா படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்கள் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியும் இயக்குநர் ஆர் டி நேசனும்.


படத்தின் ரிசல்ட் குறித்து ஆர்பி சவுத்ரி கூறுகையில், "படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை வெளியான விஜய்யின் படங்களிலேயே மிகப் பெரிய ஆரம்ப வசூல் ஜில்லாவுக்குக் கிடைத்துள்ளது என்னை பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜில்லா மட்டுமல்ல, உடன் வெளியான அஜீத்தின் படமும் வெற்றியடைந்துள்ளது ஒரு தயாரிப்பாளராக என்னை சந்தோஷப்பட வைத்துள்ளது. ஆரம்ப காலங்களில் தியேட்டர் விசிட் போவேன். பின்னர் போவதை விட்டுவிட்டேன். ஆனால் 85 படம் எடுத்த பிறகு இப்போது இந்தப் படத்துக்கு ரசிகர்கள் செய்திருந்த ஏற்பாடுகளுக்காக போயிருந்தேன். அதிகாலையிலேயே அவ்வளவு பேர் திரண்டு வந்திருந்தனர். அந்த காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கும் போவதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல... கேரளாவில் நேரடி மலையாளப் படங்களை மிஞ்சும் அளவுக்கு நேற்று வசூல். எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்," என்றார்.


More Hot click here...




மாணவர்கள் ஆயுதம் எடுத்தால் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுப்பார்கள் - www.tnfinds.com - Best site in the world....

மாணவர்கள் ஆயுதம் எடுத்தால் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுப்பார்கள்

சிவகங்கை : "மாணவர்கள் கத்தி போன்ற ஆயுதம் எடுத்தால், ஆசிரியர்களும் துப்பாக்கி எடுக்க வேண்டிய சூழல் உருவாகும்,” என ஆங்கில மொழி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சேவியர் எச்சரித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பைரவ ரத்தினத்தை, பிளஸ்1 மாணவர், நேற்று முன்தினம் பாட்டிலால் தாக்கினார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் சில ஆசிரியர் கழகத்தினர் நேற்று சிவகங்கை சி.இ.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில், ஆங்கில மொழி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் சேவியர் பேசியதாவது:தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்கள் தாக்கப்படுகின்றனர். ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தர கல்வித்துறை தவறுகிறது. அரசியலை நாங்கள் தான் கற்றுத் தருகிறோம். எங்களுக்கும் 'ரவுடியிசம்' தெரியும். மாணவர்களை அடிக்கக்கூடாது என்றால், 'ரிசல்ட்' மட்டும் எதற்காக கேட்கிறீர்கள். திருப்புவனம் சம்பவத்திற்கு அங்குள்ள ஆசிரியர்கள் மட்டும் ஒருநாள் விடுப்பு எடுத்து வந்துள்ளனர். தலைமை ஆசிரியர் மட்டும் பணி செய்கிறார். பள்ளிக்கூடத்தை இழுத்து மூடியிருக்க வேண்டும்.கோழை, அடிமைத்தனம் ஆசிரியர்களுக்கு வேண்டாம். அரசின் இலவசம் என்ற பெயரில் செருப்புக்களை சுமக்கிறோம். பள்ளிக்கூடத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை எழுகிறது. மாணவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களை தூக்கினால், ஆசிரியர்களும் துப்பாக்கியை எடுக்கும் சூழல் உருவாகும், என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் சங்கம், ஆங்கில ஆசிரியர் கழகம், தமிழாசிரியர் கழகம், உயர், மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், வரலாறு ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் திருப்புவனம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த ஆசிரியர்களும் விடுப்பு எடுத்து பங்கேற்றனர். சி.இ.ஓ., கலெக்டரிடம் புகார் மனுக்கள் தரப்பட்டது.

More Hot News Click Here...

வீரம் - விமர்சனம் - www.tnfinds.com - Best Site In The World


வீரம் - விமர்சனம்

நடிப்பு - அஜீத், தமன்னா, விதார்த், நாசர், சந்தானம், பாலா, அதுல் குல்கர்னி, பிரதீப் ராவத், முனீஷ், சோஹைல் 

ஒளிப்பதிவு - வெற்றி 

எடிட்டர் - மு காசி விஸ்வநாதன் 

வசனம் - சிவா, பரதன்

 தயாரிப்பு - விஜயா புரொடக்ஷன்ஸ் 

எழுத்து, இயக்கம் - சிவா 

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் வெற்றி ஃபார்முலாவான அண்ணன் - தம்பி பாசம், காதலை கமகம பொங்கல் மசாலாவாகத் தந்திருக்கிறார் இயக்குநர் சிவா. 

படத்தில் அதிகபட்ச, நம்ப முடியாத ஹீரோயிசம் இருந்தாலும், ஏன் எதற்கு என்று கேட்க வைக்காமல் பரபரவென காட்சிகளை நகர்த்தியிருப்பது ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போட வைக்கிறது. 

மதுரை ஒட்டன்சத்திரம்தான் கதைக் களம். இங்கு தானிய கிடங்கு வைத்திருக்கும் விநாயகம் பிரதர்ஸ் ஐவரில் மூத்தவர் அஜீத். அவருக்கு நான்கு பாசக்கார தம்பிகள். ஐந்தாவது தம்பியாக சேர்ந்து கொள்கிறார் ஜாமீன் வக்கீல் சந்தானம். விநாயகம் பிரதர்ஸின் முழு நேர பணியே தப்பு எங்கே நடந்தாலும், அதை அதிரடியாக தட்டிக் கேட்பதுதான்.



திருமணம் செய்து கொண்டால் மனைவியாக வருபவள் தம்பிகளைப் பிரித்துவிடுவாள் என்ற பயத்தில் பெண் வாடையே வேண்டாம் என தம்பிகளுக்காக வாழ்கிறார் அஜீத். ஆனால் தம்பிகளோ ஆளுக்கொரு காதலியைப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆனால் பின்னர் தங்களுக்காகவே அனைத்தையும் துறந்து வாழும் அண்ணனுக்கு திருமணம் செய்யாமல், நாம் காதலிப்பதில் அர்த்தமில்லை எனப் புரிந்து, திருமண முயற்சியில் இறங்குகிறார்கள். அஜீத்துக்கு கோப்பெருந்தேவி என்ற பெயர் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதைப் புரிந்து, அதே பெயரைக் கொண்ட அழகி தமன்னாவை வீட்டுக்குப் பக்கத்தில் குடிவர வைக்கிறார்கள். அஜீத்துக்கும் அவருக்கும் காதல் ஏற்பட பல முயற்சிகளைச் செய்கிறார்கள். அப்போதுதான் தமன்னாவுக்கும் அவர் குடும்பத்துக்கும் அடிதடி வன்முறை என்றாலே பிடிக்காது என்பது தெரிகிறது. இருந்தாலும் பலவித பொய்களச் சொல்லி காதல் ஏற்பட வைக்கிறார்கள். தமன்னாவின் அப்பா நாசரிடம் சம்மதம் வாங்க, அவர்கள் ஊருக்குச் செல்ல, ரயிலில் பகை துரத்துகிறது. ஒரு பயங்கர சண்டை தமன்னா கண் முன்னே நடக்கிறது. அதிர்ந்து நிற்கிறார் மென்மையான தமன்னா...



(வீரம் படங்கள்) ஆனால் அந்த விரோதம் பின் தொடர்வது அஜீத்தை அல்ல.. என்ற உண்மை பின்னர் தெரிகிறது. எதற்காக இந்த விரோதம்.. அஜீத் வன்முறையை விட்டாரா... அஹிம்சாவாதி தமன்னாவை கைப்பிடித்தாரா என்பது மிச்சமுள்ள ஒரு மணி நேரப் படம்! இந்தப் படத்தில் எத்தனை குறைகள் வேண்டுமானாலும் இருக்கட்டும்... இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அஜீத் போன்ற அண்ணன், விதார்த், பாலா, முனீஷ், சோஹைல் மற்றும் சந்தானம் போன்ற தம்பிகள் உலகத்தில் எங்காவது இருப்பார்களா... இருக்க மாட்டார்களா என ஏங்க வைக்கின்றன ஒவ்வொரு காட்சியும். ஆரம்பக் காட்சியிலிருந்து இறுதி வரை அத்தனை பாஸிடிவான பாசம். எங்கே இந்தத் தம்பிகள் துரோகிகளாகிவிடுவார்களோ என பதைக்கிறது மனசு. நல்லவேளை... கடைசி வரை அந்தத் தப்பை செய்யாமல், நேர்த்தியாக நேர்மறைக் காட்சிகளாகவே வைத்த இயக்குநர் சிவாவைப் பாராட்ட வேண்டும். ஒரு மாஸ் ஹீரோவுக்கு எப்படி காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதை சிவாவிடம் இளம் இயக்குநர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் அப்படி கச்சிதமாக அமைத்திருக்கிறார். பிரதீப் ராவத் தன் தம்பிகளை துரத்தும்போது, ஆல மர ஊஞ்சலில் சாவகாசமாய் ஆடிக் கொண்டு, பின்னர் தம்பிகளுக்கும் சண்டை சொல்லிக் கொடுத்து எதிரிகளைப் புரட்டியெடுப்பாரே அஜீத்... அடேங்கப்பா, பிரமாதம். தொன்னூறுகளில் ரஜினி படங்களில் பார்த்தவைதான் என்றாலும், இப்போது மீண்டும் பார்க்கும்போது நன்றாகத்தான் உள்ளது!


தமன்னாவுக்கும் அஜீத்துக்கும் காதல் வர வைக்க தம்பிகள் எடுக்கும் முயற்சிகளும், அவர்களுக்கு கூடவே இருந்து ஐடியா கொடுத்தபடி கலாய்க்கும் சந்தானமும் செம செம! இருந்தாலும் ஒரு மாவட்ட கலெக்டரை, இப்படி மாமா வேலை பார்க்கும் அளவுக்கு இறக்கியிருக்க வேண்டாம் (அதான் பள்ளிக் கூட நட்புன்னு சொல்லிட்டாருல்ல இயக்குநர்!). அஜீத்துக்கு ஏன் நரைமுடி கெட்டப் என்பதற்குக் கூட ஒரு காட்சி வைத்து அத்தனை பேரையும் ஏற்க வைத்திருக்கிறார் சிவா. 'என்னை என்ன சாதின்னா கேக்குற... நீ தேவர்னா நான் தேவர்... நாடார்னா நானும் நாடார்.. தலித்னா நானும் தலித்... அய்யர்னா நான் அய்யர்.. எனக்கு எந்த மதமும் இல்ல... நீ எப்படிப் பார்க்கறியோ அப்படித்தான் நான்!" கைத்தட்டலும் விசில் சத்தமும் அடக்க ரொம்ப நேரமாகிறது அரங்கில். மாஸ் சீன்-னா அது இதான்!


சோறு போட்டவ தாய்... சொல்லிக் கொடுத்தவன் தந்தை.. இந்த ரெண்டையும் இந்தக் குடும்பம் எனக்குக் கொடுத்தது...' - இந்த வசனத்தை அஜீத் பேசும்போது அத்தனை நெகிழ்ச்சி. முதல் முறையாக அஜீத்தைச் சுற்றி நிறைய குழந்தைகள்... அதுவும் மிக இயல்பாய், வலிந்து திணிக்காமல். அடுத்து பாராட்ட வேண்டிய விஷயம்... மாட்டு வண்டி, காளைகள், ஆடு மாடுகள் என தமிழ் சினிமா காட்ட மறந்த கிராமிய அடையாளங்களை அஜீத் மூலம் காட்டியிருப்பது. இடைவேளைக்குப் பின், தாடியை எடுத்துவிட்டு கொஞ்சம் மீசையும் (அதில் ஏன் கஞ்சத்தனம்... இன்னும் கொஞ்சம் அதிகமாகவே மீசையை வைத்திருக்கலாம்.. கலக்கலாக இருந்திருக்கும்!), அளவான புன்னகையுமாக அஜீத் வந்து நிற்கும்போது, பத்து வயது குறைந்த இளைஞனைப் பார்க்க முடிகிறது.



தமன்னா, அவரது அப்பா, குடும்பத்தினருக்குத் தெரியாமலேயே தன் தம்பிகள் துணையுடன் அவ்வளவு பயங்கரங்களையும் அவர் சமாளிக்கும் விதத்தை, கேள்விகளின்றி ஏற்க வைக்கிறார் இயக்குநர். முக்கியமாக, எந்தக் காட்சியிலும், வாய்ப்புகள் இருந்தும் அநாவசிய துதி பாடலோ, பில்ட் அப்போ இல்லாமல் பார்த்துக் கொண்டதற்காக அஜீத் - சிவா இருவருக்குமே பாராட்டுகள். அஜீத்... இந்தப் படத்தில் நடிக்கவில்லை. அவருக்குப் பிடித்தமாதிரி காட்சிகள் என்பதாலோ என்னமோ, விநாயகமாகவே வாழ்ந்திருக்கிறார். அத்தனை ஈடுபாடு ஒவ்வொரு காட்சியிலும். அவர் அடித்தால் அது நிஜமான அடியாகவே தெரிகிறது பார்ப்பவர்களுக்கு. காதல், நகைச்சுவை, அதிரடி, தம்பிகள் மீது பாசம் என நவரசங்களையும் வஞ்சனையின்றி காட்டுகிறார் மனிதர். வில்லன் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அதிகம் கவர்ந்தார் அஜீத்! சண்டைக் காட்சிகளில் அநியாயத்துக்கு ரிஸ்க் எடுத்திருக்கிறார் அஜீத். குறிப்பாக அந்த ரயில் சண்டைக் காட்சி. எந்த ஹீரோவும் செய்யத் தயங்கும் காட்சி இது.



தமன்னா... சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அழகான மறுவரவு. அழகு, நடிப்பு எதிலும் குறைவைக்கவில்லை. வெல்கம் பேக்! இந்தப் படத்தில் கடைசி வரை கலகலப்பு குறையாமல் பார்த்துக் கொண்டதில் சந்தானத்தின் பங்கு கணிசமானது. மனிதர் செம பார்மில் இருக்கிறார். வாயைத் திறந்தால் நமக்கு வயிற்று வலி நிச்சயம், சிரிப்பில். 'அண்ணே என்னையும் உங்க பிரம்மச்சரிய தம்பிக லிஸ்டில் சேத்துக்கங்க' எனும் சந்தானத்தை, 'வாடா செல்லம்... வாடா..' என அஜீத் அணைத்துக் கொள்ளும் விதம்... இனி சந்தானத்துக்கு ஏறுமுகம்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது! தம்பிகளாக வரும் விதார்த், பாலா, முனீஷ், சோஹைல் ஆகிய நால்வருக்குமே சம வாய்ப்பு. ஆமாம்... எல்லா இடங்களிலும நால்வருமே நீக்கமற நிற்கிறார்கள். ஆனால் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவிலாவது இப்படி அண்ணன் தம்பிகளைப் பார்க்கிறோமே என்று! தமன்னாவின் தந்தையாக வரும் நாசர் பாத்திரம் அருமை. பிரதீப் ராவத் ஏதோ பெரிசாக செய்யப் போகிறார் என்று பார்த்தால், பாட்ஷா படத்தில் வரும் சேது விநாயகம் மாதிரி பம்மிவிட்டு வடக்குப் பக்கம் ஜூட் விடுகிறார். இடைவேளைக்குப் பின் வரும் அதுல் குல்கர்னி செம டெர்ரர். நாசர் குடும்பத்துக்காக அஜீத் செய்த அத்தனை தியாகங்களையும் அதுல் குல்கர்னி தன் வாயாலேயே சொல்வதுபோல காட்சி அமைத்தது நல்ல புத்திசாலித்தனம். வேறு எந்த வகையிலும் அந்த முடிச்சை அவிழ்க்கவும் வழியில்லை! குறைகள்... அதற்குப் பஞ்சமில்லை. முக்கியமான குறை... எதிரி நினைக்கும் முன்பே ஹீரோ அவரை மடக்குவது போன்ற சூப்பர் ஹீரோ சாகஸங்கள். ஆனால் அதை மறக்கடிக்கும்விதமாக திரைக்கதை அமைப்பதுதானே இன்றைய சினிமா? அதில் ஜெயிக்கிறது வீரம்!


வெற்றியின் ஒளிப்பதிவு மிகக் கச்சிதம். ரசிகர்களை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரு திருவிழா மனநிலையிலேயே வைத்ததில் இவரது கேமராவுக்கும் தேவி ஸ்ரீ பிரசாதின் பின்னணி இசைக்கும் பெரும் பங்குள்ளது. இரண்டு பாடல்கள் பரவாயில்லை. அஜீத்தை ஒரு இயக்குநராக மட்டும் பார்க்காமல், அவரது ரசிகராகவும் பார்த்ததால்தான் தன்னால் இப்படி ஒரு திரைக்கதையை எழுத முடிந்தது என்றார் இயக்குநர் சிவா. அது நூறு சதவீதம் உண்மை. அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்களை, முதலில் ரசிக்கத் தெரிந்தால்தான் அவர்களுக்கான அட்டகாசமான திரைக்கதையை ஒரு படைப்பாளியால் உருவாக்க முடியும். அந்த வகையில் வீரம்... செம மாஸ்.. பொங்கல் பண்டிகை உற்சாகத்தை ஒரு படி அதிகமாக்கியிருக்கிறது!

More Hot News Click Here...


Reporter Wanted - www.tnfinds.com - Best Site In The World

Reporter Wanted - www.tnfinds.com - Best Site In The World




More Hot News Click Here....


Friday, January 10, 2014

'மட்டன் பிரியாணி, சிக்கன் 65': தனியார் மருத்துவர்களுக்கு வழங்கிய மேயர் - www.tnfinds.com - Best site in the world....

'மட்டன் பிரியாணி, சிக்கன் 65': தனியார் மருத்துவர்களுக்கு வழங்கிய மேயர்

கீழ்ப்பாக்கம்: சென்னை மாநகராட்சி நடத்திய, 'மெகா' மருத்துவமுகாமில் கலந்து கொண்டு, மக்களுக்கு மருத்துவசேவை அளித்த, தனியார் மருத்துவர்களை பாராட்டி, மேயர், சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து, அவர்களுக்கு, மட்டன் பிரியாணியுடன் தடபுடல் விருந்தும் அளிக்கப்பட்டது.
கவுரவிப்பு: சென்னை மாநகராட்சி சார்பில், கடந்த மாதம், 5ம் தேதி முதல், 9ம் தேதி வரை, ஐந்து நாட்கள், சென்னை முழுவதும், ஆயிரம் இடங்களில், 'மெகா' மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதற்கு, சென்னையில் உள்ள 30 மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள் வழங்கி ஒத்துழைப்பு அளித்தன. அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள், இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பணியாற்றினர். அவர்களை கவுரவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில், நேற்று, தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கீழ்ப்பாக்கம், ஜெ.ஜெ., உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் பாராட்டு பத்திரம் வழங்கினார். கமிஷனர் விக்ரம் கபூர், சுகாதார அதிகாரி குகானந்தம் உள்ளிட்ட பலர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பாயசத்துடன்...:

பின்னர், அனைவருக்கும், மட்டன் பிரியாணி, சிக்கன், 65, மீன் வறுவல் என, அசைவ விருந்தும், வடை, பாயசத்துடன் சைவ விருந்தும் அளிக்கப்பட்டது.

'அம்மா' குடிநீர் எங்கே?

தனியார் மருத்துவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட விருந்தில், 'அம்மா' குடிநீர் வழங்கப்படாமல், தனியார் நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்கள் தான் வழங்கப்பட்டன. மேலும், இந்த விருந்துக்கு, ? லட்சம் ரூபாய் வரை செலவாகி இருக்கும் என, கூறப்படுகிறது.

More Hot News Click Here...

பேச்சு, பேட்டி, அறிக்கை - www.tnfinds.com - Best site in the world....

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நம் பேச்சை, நம்ம கட்சிக்காரங்கக் கூட மதிக்க மாட்டேங்கிறாங்களே...' என்ற வேதனையில், காங்., பொதுச் செயலர், திக்விஜய் சிங் பேட்டி: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், தங்களை உயர்வானவர்கள் என, எண்ணிக் கொள்கின்றனர். மற்றவர்களின் கருத்துகளை, அவர்கள் கேட்பதே இல்லை.

'கோளாறாகிக் கிடக்கும் நம்ம மதிப்பை, எப்படி பேசினால் தூக்கி நிறுத்தலாம்' என்ற சிந்தனையில், தினமும் அறிக்கை வெளியிட்டாலும், அதனால் இந்த முறை பலன் ஏற்படப் போவதில்லை என்பது அறியாமல், தி.மு.க., தலைவர், கருணாநிதி அறிக்கை: பராமரிப்புப் பணியால், மத்திய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, முன்பு, மின் வினியோகம் குறைந்திருந்தது. மத்திய அரசும், தி.மு.க.,வும் சேர்ந்து, வேண்டுமென்றே மின் வினியோகத்தைக் குறைத்ததாக, ஜெயலலிதா பழி சுமத்தினார். தற்போது, பராமரிப்புப் பணி முடிந்து, தமிழகத்தின் மின் வினியோகம் அதிகரித்துள்ளது. தான் முதலில் கூறிய குற்றச்சாட்டு தவறு என, ஜெயலலிதா ஒப்புக் கொள்வாரா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் பேட்டி: வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., தலைமையில், அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் இணைந்த, வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும். இதில், தே.மு.தி.க.,வும் இடம்பெற வேண்டும். பலமான கூட்டணி அமைக்க, தி.மு.க., தலைமை எடுக்கும் முயற்சிக்கு, நாங்கள் துணை நிற்போம்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், வீரமணி பேச்சு: அரசு பள்ளி மாணவர்களின், தமிழ் வாசிப்புத்திறன் குறைந்திருப்பது, வேதனைக்குரியது. இத்தகைய மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் நாளிதழ்களை, மாணவர்கள் படித்தாலே, வாசிப்புத்திறன் நன்றாக வளரும். இதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர், சரத்குமார் பேட்டி: கடந்த தி.மு.க., ஆட்சியில், மின் உற்பத்திக்கான தொலைநோக்கு திட்டம் ஏதும் செயல்படுத்தப்படாததால், மின் பற்றாக்குறை ஏற்பட்டது. மத்திய அரசு, மின்தொகுப்பில் இருந்து, போதிய மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்காமல் வஞ்சித்தது. தற்போதைய ஆட்சியில், மின்உற்பத்தி, படிப்படியாக சீர் செய்யப்பட்டுள்ளது.

More Hot News Click Here..

பாரம்பரியம் மாறாத மண் பானைப் பொங்கல்....- www.tnfinds.com - Best site in the world...


பாரம்பரியம் மாறாத மண் பானைப் பொங்கல்…

மானாமதுரை: மானாமதுரையில், பொங்கல் திருநாளையொட்டி, இல்லங்களில் பொங்குவதற்கு தயாராகும் வகையில், பொங்கல் பானைகள், பல வகைகளில் தயாராகின்றன. 

மண் பாண்டத்திற்கு பெயர் பெற்ற மானாமதுரையில், கஞ்சிக் கலயம் முதல், கலையம்சம் பொருந்தியகடம் வரை, மண்ணால் தயார் செய்யப்படுகிறது. 

இங்கு தயாராகும் மண்பாண்டங்கள், உறுதியாகவும், நேர்த்தியாகவும், தரமாகவும் இருப்பதால், வெளி மாவட்டங்களில் வரவேற்பு உள்ளது. சீசனுக்கு தகுந்தவாறு மண்பாண்ட பொருட்கள் தயார் செய்வது, இங்குள்ள தனிச்சிறப்பு.

சிவகங்கை மாவட்டத்தில்.


பொங்கல் திருநாளுக்காக சிவகங்கை மாவட்டத்தில் மண் பானைகள் தயாராகின்றன. மாவட்டத்தில் பூவந்தி, மானாமதுரை, வேதியரேந்தல், சிவகங்கை, பாகனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்படுகின்றன.

பாரம்பரிய மணம்.

பாரம்பரியத்தை விரும்புவர்களுக்காக மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் கிராமப்புறங்களில் மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது வீட்டு வாசல் மற்றும் கால்நடை தொழுவம் ஆகியவற்றில் விவசாயிகள் பாரம்பரிய மண் அடுப்புகளில் மண் பானைகள் வைத்து பொங்கல் கொண்டாடுவார்கள். இவர்களை குறிவைத்தே மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன.

பொங்கல் பானைகள்.

தற்போது, பொங்கல் திருநாள் நெருங்குவதால், அதற்காக, பொங்கல் பானைகள், அடுப்புகள் தயாராகி வருகின்றன. ஐந்து கிராம கண்மாய்களில் உள்ள மண்ணை கலவையாக்கி, ஆறாவதாக வைகை ஆற்றுமணலை உறுதுணையாக்கி, அரைத்து மாவாக்கி, தரையில் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பானையாக தயாரிப்பதற்கு இசைவாகும் வரை, காலால் மிதித்து, கையால் பிசைந்து பக்குவப் படுத்துகின்றனர்.

தயாராகும் பானைகள்.

பக்குவமான மண் கலவை, மின் சக்கரத்தில் வைத்து, கைக்கு லாவகமாகிய பின், பல்வேறு வடிவங்களில் பானையாக உருவாக்குகின்றனர். அவற்றை, அரைகுறை வெயில், நிழலில் காய வைத்து, பெற்ற பிள்ளையை பேணி காப்பது போல் பாதுகாக்கின்றனர். பின், செங்கோட்டையிலிருந்து வரும் செம்மண்ணில், தண்ணீரை கலந்து இயற்கை சாயத்தில் வண்ணம் பூசுகின்றனர்.

பலபடி பானைகள்.

கால்படி அரிசியிலிருந்து, ஒன்றரை படி அரிசி வேகும் அளவுக்கு, பல்வேறு அளவுகளில் பானை தயாரிக்கின்றனர். பானை ஒன்றின் விலை, 26லிருந்து 70 ரூபாய் வரை, பல ரகங்களில் வியாபாரிகளுக்கு விற்கின்றனர். இங்கு வந்து கொள்முதல் செய்யும் வெளியூர் வியாபாரிகள், போக்குவரத்து செலவு, சேதாரம் சேர்த்து, இருமடங்கு விலை வைத்து விற்கின்றனர்.

மணக்கும் மண்பானைகள்.

உலோகப்பானைகளில் பொங்கல் வைத்தாலும் சுவைக்காத பொங்கல், மானாமதுரை பானையில் பொங்கல் பொங்கும் கமகம வாசனைக்காக, தேடி வந்து வாங்கி செல்கின்றனர். மதுரை, திருச்சி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவு வியாபாரிகள் பானைகள் வாங்க மானாமதுரை பகுதிக்கு வருகின்றனர்.

இலஞ்சி மண் பானை.

நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, இலஞ்சி உள்ளிட்ட சுற்று புறங்களில் மண்பானைகளையும், மண் அடுப்புகளையும் மும்முரமாக தயாரித்து வருகின்றனர். 

வாடிக்கையாளர்களின் விருப்பதுக்கு ஏற்ப பல்வேறு மாடல்களில் இவர்கள் தயாரித்து வழங்குவதால் இப்போதே அதன் விற்பனையும், விலையும் ஏற தொடங்கியுள்ளது.

உற்பத்தி பாதிப்பு.

மண் அள்ள தடை, வைக்கோல் தட்டுப்பாடு மற்றும் உற்பத்தி செலவு ஆகியவற்றால் மண்பானை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 விறகு, தேங்காய் மட்டை உள்ளிட்டவற்றின் விலைகளும் அதிகரித்து விட்டதால் உற்பத்தி குறைந்து பானை, சட்டிகள் மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணி கடந்த சில வாரங்களாக மந்தநிலையில் இருந்தது. இப்போது உற்பத்தி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

குறைந்தது 50 ரூபாய்.

சாதாரண மண்பானை ரூ.50 முதல் தொடங்குகிறது. ஸ்பெஷல் மண்பானை ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மண்பானை மற்ற பானைகளை விட பெரியதாக இருக்கும். மேலும் சுற்றிலும் வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

தலைப் பொங்கல்.

ஸ்பெசல் மண்பானையை தலை பொங்கலுக்காக திருணமான தம்பதிகளுக்கு பரிசாக வழங்குவர். இந்த பானை ஆர்டர் கொடுத்துதான் பெற முடியும் என்பதால் பலர் இதற்கு முன்னதாகவே ஆர்டர் கொடுத்து விட்டு பெற்று செல்கின்றனர்.

மண் அடுப்பு.

மேலும் மண் அடுப்பு ரூ.50 முதல் விற்பனை செய்யபட்டு வருகிறது. இந்நிலையில் குளங்களில் மண் எடுக்க அரசு கட்டுபாடு விதித்துள்ளதால் பெரும்பாலானோர் பானை செய்வதற்கு தேவையான மண் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

விலை உயர்வு.

பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மண் பானை விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆனால் தற்போது மண் பானைகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், விலை உயர்ந்து காணப்படுகிறது.

கிராமங்களில் பாரம்பரியம்.

நவீன காலத்தில் தற்போது அலுமினிய பாத்திரத்தில் பொங்கலிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் மின்சார அடு்ப்பில் பொங்கலிட்டு வருகின்றனர். ஆனாலும் கிராமப்புறங்களிலும் இன்னும் பாரம்பரியம் கைவிடப்படவில்லை.

வாசலில் பொங்கல்.

கிராமப் பகுதிகளில் வீட்டு வாசலில் மண் அடுப்பை வைத்து ஒலைகளால் நெருப்பு மூட்டி அதன் மேல் மண் பானைகளை வைத்து பொங்கலிடும் பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நகரங்களிலும் பொங்கல்.

நகர பகுதிகளிலும் பலர் இந்த பழக்கத்தை விடாமல் மேற்கொண்டுதான் வருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய மண்பானைகளையே வாங்கி பயன்படுத்துவர்.

மண்பானைப் பொங்கல்.

இன்று நாகரீக காலத்தில் பலரும் குக்கர் பொங்கலுக்கு மாறி விட்ட நிலையில் மண் பானையில் பொங்கல் வைக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த மண்பானைகளுக்கு இன்றும் கூட நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இதனால்தான் மண்பானைத் தொழிலும் உயிர்ப்போடு இருக்கிறது.

More Hot News Click Here..


























'டவுட்' தனபாலு - www.tnfinds.com - Best site in the world...

'டவுட்' தனபாலு

மத்திய அமைச்சர், ஜி.கே.வாசன்: லோக்சபா தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, 20 மாநிலங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால், காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

டவுட் தனபாலு: டில்லி சட்டசபைத் தேர்தலின் போதும் இதையே தான் சொன்னீங்க... ஆனா, முடிவு என்னவாச்சு என்பது தான், உலகுக்கே தெரியும்... 'மோடியாலும் பாதிப்பு இல்லை; ஆம் ஆத்மியாலும் பாதிப்பு இல்லை'ன்னா, காங்கிரசால் தான், காங்கிரசுக்கு பாதிப்பு வரும்னு சொல்றீங்களாங்கறது தான், என்னோட, 'டவுட்!'

பிரதமரின் ஆலோசகர், சாம் பிட்ரோடா: நம் நாட்டிற்கு, புதுப் புது திட்டங்கள் மூலம், புதுமைகளை புகுத்துபவர்களே தேவைப்படுகின்றனர்.

டவுட் தனபாலு: நான்கு மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பின், காங்கிரஸ் தலைவர்கள் தான், பிரதமரை குத்திக் காட்டும் வகையில் பேசுறாங்கன்னா, நீங்களுமாங்கற, 'டவுட்' ஏற்படுதே...!

புதிய தமிழகம் கட்சித் தலைவர், கிருஷ்ணசாமி: நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., ராமசாமியை, முதல்வர் சந்தித்தது, தவறான முன்னுதாரணம்.

டவுட் தனபாலு: எம்.எல்.ஏ., ராமசாமி, உங்க கட்சியைச் சேர்ந்தவர் தானே... அவரை கட்டிக்காக்க முடியாமல், முதல்வரை விமர்சிப்பது சரியா... அதுசரி, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, நீங்க சந்தித்ததை, ராமசாமியிடம் நீங்க கலந்து ஆலோசித்தீங்களா... ஆளுக்கொரு நியாயமாங்கறது தான், என்னோட, 'டவுட்!'

More Hot News Click Here...