Tuesday, December 31, 2013

மிலி சைரஸ், லேடி காகா, வித்யாபாலன்.... 2013ல் மிக மோசமாக ஆடை அணிந்த பிரபலங்கள் - www.tnfinds.com - Best Site In THe World


மிலி சைரஸ், லேடி காகா, வித்யாபாலன்.... 2013ல் மிக மோசமாக ஆடை அணிந்த பிரபலங்கள்


லண்டன்:


2013ம் ஆண்டு முடிய இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ளது. இந்நிலையில் இந்தாண்டு நடந்த முக்கிய திரை நிகழ்வுகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது எம் டிவி. அதில் இந்தாண்டு மிக மோசமாக உடை அணிந்து வந்த பிரபலங்கள் என சிலர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவர்களில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகள் பத்து பேர் தரவரிசை படுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் யார் யாரென தெரிந்து கொள்ளலாமா...

மிலி சைரஸ் :


 பாப் பாடகி மிலி சைரஸ் முதலிடத்தில் உள்ளார். கவனம் ஈர்க்கும் நடவடிக்கைகள் மூலம் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வதிலேயே கவனமாக இருந்த சைரஸ் உடை அணியும் விஷயத்தில் படு மோசம் என சலித்துக் கொள்கிறார்களாம் அவரது ரசிகர்கள்.


















Monday, December 30, 2013

பூச்சி மருந்தைக் குடித்து கூடுதல் டிஜிபி முத்துக்கருப்பனின் தந்தை தற்கொலை - www.tnfinds.com - Best Site In The World


பூச்சி மருந்தைக் குடித்து கூடுதல் டிஜிபி முத்துக்கருப்பனின் தந்தை தற்கொலை


பரமக்குடி:



 தமிழக கூடுதல் டிஜிபி முத்துக்கருப்பனின் தந்தை காளிமுத்து பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரமக்குடி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 பரமக்குடி அருகே உள்ள தென்பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயதான காளிமுத்து. இவரது மகன்தான் முத்துக்கருப்பன். ஒரு காலத்தில் தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்திய காவல்துறை அதிகாரியான முத்துக்கருப்பன் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர். அவர் ஆணையராக இருந்தபோதுதான் நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். தற்போது ஊர்க்காவல் படை கூடுதல் டிஜிபியாக இருக்கிறார். 

காளிமுத்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாராம். சிகிச்சை எடுத்து வந்தபோதிலும் உடல் நிலை சரியாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் பூச்சி மருந்தைக் குடித்து விட்டார்.

 இதையடுத்து போலீஸார் காளிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பரமக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

More Hot News Click Here...


'ஜஸ்ட்' அரை மணி நேரத்தில் முடிந்து போன புதுச்சேரி சட்டசபைக் கூட்டம்! - www.tnfinds.com - Best Site In The World


'ஜஸ்ட்' அரை மணி நேரத்தில் முடிந்து போன புதுச்சேரி சட்டசபைக் கூட்டம்!

புதுச்சேரி:



 புதுச்சேரி சட்டசபை இன்று கூடிய அரை மணி நேரத்திலேயே முடிவடைந்து போனதால் கடுப்பாகிப் போன காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். அந்த அரை மணி நேரக் கூட்டத்திலும், அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பெல்லாம் செய்து அசத்தி விட்டனர்.

 இந்த ஆண்டின் கடைசிக் கூட்டமாக இன்று புதுச்சேரி சட்டசபைக் கூட்டப்பட்டது. பிற்பகல் 12.30 மணியளவில் கூட்டத்தைக் கூட்டினர். முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 சில திட்டங்கள் வாசிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் சபாபதி அறிவித்தார். அப்போது மணி ஒன்று. இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆவேசமடைந்தனர்.

 புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. அரசு பணியில் இருந்து விலக்கப்பட்ட 4 ஆயிரம் ஊழியர்களுக்கு திரும்ப வேலை வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் புதுச்சேரி சட்டசபையில் விவாதிப்பதற்கு பல பிரச்னைகள் உள்ளது. ஆனால், அது எதையும் செய்யாமல் வெறும் அரை மணி நேரத்தில் சட்டசபையை முடித்து விடுவது எந்தவிதத்தில் நியாயம். எனவே, நாளைக்கும் சட்டசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கூட்டமாக எழுந்து கோஷமிட்டனர். ஆனால் சபாபதி கேட்கவில்லை. 

இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரும் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

 அதேசமயம், அதிமுகவில் அரை மணி நேரக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர். அதிமுக எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர், தனது தொகுதிக்கு சரியான முறையில் மேம்பாட்டு நிதி ஒதுக்கவில்லை என்றுக்கூறி சட்டசபை முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். 

பின்பு சபாநாயகர் சபாபதி, கூடிய விரைவில் நிதி ஒதுக்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து ஓம்சக்தி சேகர் தனது முற்றுகை போராட்டத்தை கைவிட்டுக் கிளம்பினார். ஆனால் காங்கிரஸார் போகவில்லை.

 முன்னதாக சபை தொடங்கியதும் அதிமுக உறுப்பினர் அன்பழகன் பேசுகையில், இலவச வேட்டி-சேலை வழங்கப்படவில்லை, வெள்ளை அரிசி வழங்கப்படவில்லை, அறிவித்த திட்டங்கள் பல நிறைவேற்றப் படவில்லை. இதுபோல் பல பிரச்சினைகள் உள்ளது. இவற்றை சபையில் விவாதிக்க வேண்டும் என்றார்.

 அதற்கு சபாநாயகர், சபை மரபுகளை மதிக்க வேண்டும். மூத்த உறுப்பினரான உங்களுக்கு சபை மரபுகள் நன்றாக தெரியும். தற்போது இரங்கல் தீர்மானத்தை எடுத்து கொள்வோம் என்றார். 

இதையடுத்து அன்பழகன் எம்.எல்.ஏ. பேசுவதை கைவிட்டு இருக்கையில் அமர்ந்தார். பின்னர் இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்பட்டது. அப்போது மீண்டும் அன்பழகன் பேச எழுந்தார். ஆனால் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அன்பழகன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர்.



நடராஜர் கோயில் தெற்குவாயிலை திறக்கக் கோரி பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் - www.tnfinds.com - Best Site In The World


நடராஜர் கோயில் தெற்குவாயிலை திறக்கக் கோரி பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்


சிதம்பரம்: 




சிதம்பம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்குவாயிலை திறக்கக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்

நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை திறக்க வேண்டும், கோயிலை அறநிலையத்துறை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்பது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரம் காந்திசிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று அக்கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடராஜர் கோயில் தெற்குவாயிலை முற்றுகையிடவும் அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். ஆனால் போலீசார் அவர்கள் அனைவரையும் வழிமறித்தனர். பின்னர் ஊர்வலமாக புறப்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 115 பேரையும் போலீசார் கைது செய்தனர். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

More Hot News Click Here...

பதைபதைக்க வைத்த இளவரசன் மரணம்.... மறக்க முடியாத - www.tnfinds.com - Best Site In The World


பதைபதைக்க வைத்த இளவரசன் மரணம்.... மறக்க முடியாத 2013!


சென்னை:


 சில நிகழ்வுகளை நிச்சயம் நம்மால் நீண்ட காலத்துக்கு மறக்க முடியாது. அப்படிப்பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் தர்மபுரி இளவரசனின் மரணம். 2013ம் ஆண்டின் மறக்க முடியாத நிகழ்வுகளில் இது முக்கியமானது. 

அதேபோல இயக்குநர் மணிவண்ணனின் திடீர் மரணமும் அனைவரையும் அதிர வைத்தது. 

மூத்த திராவிடத் தலைவர் கருணாநிதி இந்த ஆண்டில்தான் தனது 90வது வயதில் காலடி எடுத்து வைத்தார்.

ரஜினி - கமல் உண்ணாவிரதம்

 ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலரும் திரண்டு வந்து பங்கேற்றனர்.


கோவை வணிக வளாகத்தில் பயங்கர தீ - 4 பேர் பலி

 கோவையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மறைந்தார் மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி 

மெல்லிசை மன்னர்களில் ஒருவரான டி.கே.ராமமூர்த்தி சென்னையில் மரணமடைந்தார்.


பா.சிவந்தி ஆதித்தன் மரணம் 

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் சென்னையில் மரணமடைந்தார்.

பவர் ஸ்டார் கைது

 பவர் ஸ்டார் என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டு அகில உலகப் புகழ் பெற்றவரான டாக்டர் சீனிவாசன் ரூ. 50 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் தமிழ்த்தாய்க்கு ரூ. 100 கோடியில் சிலை

 அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போல மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு சிலை வைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

கருணாநிதி 90

 இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திமுக தலைவர் கருணாநிதி தனது 90வது பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாடினார்.


மணிவண்ணன் திடீர் மரணம்

 இயக்குநர், நடிகர், தமிழ் ஆர்வலரான நடிகர் மணிவண்ணன் திடீரென சென்னையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகை மட்டுமல்ல, தமிழ் ஆர்வலர்களையும் உலுக்கி விட்டது.

கடும் பரபரப்புக்கு மத்தியில் வென்ற கனிமொழி



 தமிழகத்தில் ராஜ்யசபாவுக்கு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட கனிமொழி கடும் பரபரப்புக்கு மத்தியில் வெற்றி பெற்றார்


அதிமுகவுக்குத் தாவிய பரிதி இளம்வழுதி



திமுகவின் பிரசார பீரங்கிகளில் ஒருவராகத் திகழ்ந்த பரிதி இளம்வழுதி திடீரென அதிமுகவில் போய்ச் சேர்ந்தார்.

தந்தி செத்துப் போச்சு


 நூறு வருடமாக நாட்டு மக்களோடு ஐக்கியமாகிப் போயிருந்ததந்திக்கு விடை கொடுத்தது தேசம்.. கடைசியாக ஜூலை 14ம் தேதியுடன் தனது மூச்சை நிறுத்திக் கொண்டது தந்தி.


இளவரசனின் திடீர் மரணம்



 தர்மபுரி இளவரசனின் திடீர் மரணம் அனைவரையும் பதை பதைக்க வைத்து விட்டது. தர்மபுரியில், ரயில் தண்டவாளம் அருகே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடே இந்த மரணத்தால் தவித்துப் போய் விட்டது. ஜாதிக் கொடூரத்திற்கு அநியாயமாக பலியான இளவரசனுக்கு அஞ்சலி செலுத்தாத தமிழ் உள்ளங்களே இல்லை.


கட்டிலிலிருந்து விழுந்து மஞ்சுளா மரணம்



 நடிகை மஞ்சுளா, கட்டிலிலிருந்து கீழே விழுந்து பலத்த அடிபட்டு மரணமடைந்தார்.

More Hot News Click Here...





'லாஸ்ட் மினிட்ல' மாறும், அரங்கேறும், வரும்... ஞானதேசிகன் திகில் பேச்சு! - www.tnfinds.com - Best Site In The World


'லாஸ்ட் மினிட்ல' மாறும், அரங்கேறும், வரும்... ஞானதேசிகன் திகில் பேச்சு!


சென்னை: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து படைத்துள்ளது காங்கிரஸ். இந்த விழாவில் கலந்து கொண்டு பிரியாணி வழங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் பல கட்சிகள் இணையும் என்று பொடி வைத்துப் பேசினார். சென்னை தி.நகரில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி 200 பெண்களுக்கு இலவச சேலைகளும், பொதுமக்களுக்குப் பிரியாணி விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.



பிரியாணியை தனது கையால் வழங்கினார் ஞானதேசிகன். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இப்போதைக்கு எதையும் உறுதியாக கூறமுடியாது. ஆனால் தேர்தல் நெருங்கும் போது காட்சிகள் மாறும். பல நாடகங்கள் அரங்கேறும். அப்போது கூட்டணிகளில் எதிர்பாராத திருப்பங்கள் வரும். காங்கிரஸ் அணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது என்றார். மாறும், அரங்கேறும், வரும்.. என்று ஞானதேசிகன் பேசுவது அப்படியே திகில் பட வசனம் போலவே இருக்கிறதே... கடைசி நேரத்தில் காங்கிரஸ் என்ன குண்டைப் போடப் போகிறதோ... 


More Hot News Click Here...



Sunday, December 29, 2013

லஞ்சத்தை ஒழிக்க கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை: டெல்லி அதிகாரிகள் கலக்கம்... - www.tnfinds.com - Best Site in the World

கெஜ்ரிவால் வீட்டில் இன்று பஸ் தொழிலாளர்கள் திரண்டனர்: வேலையை நிரந்தரமாக்க கோரிக்கை

டெல்லி மாநில முதல்– மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் நாடு முழுவதையும் உற்று நோக்க வைத்து இருக்கிறார். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த டெல்லியில் அவர் பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் தானே டிக்கெட் எடுத்து பதவி ஏற்க வந்தார். முன்பு இதே மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் இருந்த போது அவரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்திய டெல்லி போலீசார் நேற்று அவரை வரவேற்று பாதுகாப்பாக விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர். 

பதவி ஏற்பு விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் வாங்கவும் மாட்டோம், லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் என்று தொண்டர்களுடன் சேர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார். வெறும் உறுதிமொழியுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதை செயல்வடிவம் காட்டவும் தீவிரமாக உள்ளார். 

ஊழல் லஞ்சம் பற்றி தகவல் தெரிவிப்பதற்காக 2 நாளில் டெலிபோன் எண்ணை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிடுகிறார். மேலும் மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பல அதிரடி கட்டளைகளும் பிறப்பித்துள்ளார். அதன்படி மந்திரிகளோ, மாநில அரசின் அதிகாரிகளோ தங்கள் கார்களில் சிகப்பு சுழல் விளக்குகளை பொருத்திக் கொள்ள மாட்டார்கள். அதிகாரிகளுக்கு தனி பாதுகாப்பு அதிகாரியோ, பாதுகாப்பு வாகனமோ வழங்கப்பட மாட்டாது. 

அச்சுறுத்தல் அடிப்படையில் தான் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் முடிவு எடுத்துள்ளார். டெல்லியில் எங்கு பார்த்தாலும் அதிகாரிகள் சிகப்பு விளக்கு பொருத்திய கார்களில் வலம் வருகிறார்கள். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டே கேள்வி எழுப்பி இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எந்த அதிகாரியும் மதிக்கவில்லை. எனவேதான் சிவப்பு விளக்கு பொருத்தக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் அனைவரும் வி.ஐ.பி.க்கள் போல் வலம் வரக்கூடாது. மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவால் தனது அலுவலகத்தில் அமர்ந்ததும் தனது எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அதிகார வர்க்கத்தை மாற்றி அமைத்தார். டெல்லி மாநில அரசின் உயர் அதிகாரிகள் 9 பேர் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டனர். டெல்லி குடிநீர் வாரிய முதன்மை அதிகாரிதான் முதலில் மாற்றம் செய்யப்பட்டார். 

அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளராக உயர் கல்வித் துறை செயலாளர் ராஜேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுத்துள்ளார். தினந்தோறும் நபருக்கு 700 லிட்டர் இலவச குடிநீர் அளிப்பதாகவும், மின்சார கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாகவும் வாக்குறுதி அளித்து இருந்தார். 

இலவச குடிநீர் பற்றிய அறிவிப்பை நாளை (திங்கட்கிழமை) வெளியிடுகிறார். அதுபோல் மின் கட்டணம் குறைப்பு பற்றிய அறிவிப்பை நாளை மறுநாள் அல்லது புதன்கிழமை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். இதேபோல் டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவால் பயணிகளின் டீசல் வாகனங்கள் தடை செய்யப்பட்டு கியாஸ் வாகனங்கள் மட்டுமே இயக்கப் படுகின்றன. இதனால் கியாஸ் விலை உயர்வால் ஆட்டோ டிைரவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர், மின்சாரத்திற்கு அடுத்தப்படியாக டெல்லியில் இதுவும் பெரும் பிரச்சினையாக உள்ளது. 

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னுரிமை அளித்துள்ளார். மக்கள் பிரச்சினையை தீர்க்க முன்னுரிமை அளிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்த நிலையில் முதல் நாளே அவரது வீட்டின் முன் அரசு பஸ் ஊழியர்கள் 1000 பேர் திரண்டனர். முதல்– மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்த அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்கள். 

டெல்லி நகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள்– கண்டக்டர்கள் 14 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக அவர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. இதையடுத்து இன்று காலை ஒப்பந்த ஊழியர்கள் கெஜ்ரிவால் வீட்டின் முன் திரண்டனர். ‘‘கெஜ்ரிவால் ஜிந்தாபாத்’’ என்று வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். இதில் கலந்து கொண்ட அரசு பஸ் டிரைவர் ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாங்கள் 10 ஆண்டுகளாக பணிநிரந்தரம் இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறோம். இதுபோல் 14 ஆயிரம் பஸ் ஊழியர்கள் உள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’’ என்றார். 

கண்டக்டர் சுரேஷ் கூறுகையில், ‘‘நாங்கள் இங்கு திரண்டு வந்தாலும், எங்களால் டெல்லியில் மற்ற இடங்களில் பஸ் போக்கு வரத்து பாதிக்கப்பட வில்லை. மற்றொரு டிரைவர் தேஷ்பால் கூறும்போது, ‘‘கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தின்போது எங்களை பணி நிரந்தரம் செய்வதாக உறுதி அளித்தார். எனவே அவர் முதல்–மந்திரியாகி விட்டதால் எங்களது கோரிக்கைகளை நிறை வேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்தார். 

டெல்லியில் இதற்கு முன் முதல்–மந்திரி வீட்டின் முன்போ அல்லது மந்திரிகள் வீட்டின் முன்போ யாரும் கூட முடியாது. போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி விடுவார்கள். ஆனால் கெஜ்ரிவால் வீட்டின் முன் போலீசார் இல்லாததால் 1000 பஸ் ஊழியர்களை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. அவர்கள் திடீர் என்று கெஜ்ரிவால் வீட்டின் முன் திரண்டு விட்டார்கள். இததேபோல் பல்வேறு சமூக அமைப்பினரும் கெஜ்ரிவால் வீட்டின் முன் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


More News Click Here............. 

Saturday, December 28, 2013

பண்ணை வீடுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு சென்னை போலீஸ் தடை - www.tnfinds.com - Best site in hte world..


பண்ணை வீடுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு சென்னை போலீஸ் தடை

சென்னை: சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்த நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் களை கட்டி வருகின்றன. 


புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் பார்ட்டி என்ற பெயரில் கொண்டாட்டங்கள் இடம் பெறும். இதில் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

 இதில், பலர் மது அருந்தி அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக காவல்துறை மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது.



இதே போல் புத்தாண்டு தினத்தில் குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டி செல்வதால் விபத்துக்களும் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கும், நட்சத்திர ஹோட்டல்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். 

இதுதொடர்பாக கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துவிட வேண்டும் என்றும், குடிபோதையில் இருப்பவர்கள் கார் ஓட்டுவதற்கு ஹோட்டல் நிர்வாகம் அனுமதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதியின்றி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுமார் 600 பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 
]
போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக் கண்ணன், ராஜேஸ்தாஸ், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கருணாசாகர், இணை கமிஷனர்கள் தினகரன், அருண் ஆகியோர் மேற்பார்வையில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க 50 க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

More Hot News Click Here...










2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் 53% மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள்!!! ரிப்போர்ட்..- www.tnfinds.com - Best site in the world..

2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் 53% மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள்!!! ரிப்போர்ட்..

டெல்லி: 2013 ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் ஏறக்குறைய பாதி பேர் எந்த வேலையை செய்யவும் தகுதியற்றவர்களாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது, இந்தியாவின் கல்வி முறைமாணவர்களுக்கு எந்த வித திறன்களையும் அளிப்பதில்லை என கருத்து நிலவுகிறது. நகைச்சுவை நடிகர் கூறுவது போல "என்னத்த படிச்சு... என்னத்த கிழிக்கபோராங்களோ" என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது இந்த ஆய்வு அறிக்கை.
 
 அஸ்பைரிங் மைன்ட்ஸ் (Aspiring Minds) என்ற வேலைத்திறன் தீர்வு நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் 2013 ஆம் ஆண்டில் தேர்வுற்ற பட்டதாரிகளில் ஏறக்குறைய 47 சதவிகிதம் பேர் ஆங்கில மொழி அறிவு மற்றும் அறிவாற்றல் திறன்கள் உள்ளிட்ட திறமைகளின் அடிப்படையில் எந்த வேலையும் செய்யத் திறனற்றவர்களாக இருப்பது ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலாக வெளிவந்துள்ளது.

தகுதி பெற்றவர்கள்.


ஆய்வில் பங்கேற்றவர்களில் 2.59 சதவிகிதம் பேர் கணக்குப் பதிவியல் போன்ற செயலாற்றுத் துறைகளிலும், 15.88 சதவிகிதம் பேர் விற்பனை தொடர்பான வேலைகளிலும் மற்றும் 21.37 சதவிகிதம் பேர் பீபிஒ எனப்படும் வர்த்தக நடைமுறைகள் வெளிப்பெரும் துறைகளுக்கும் பொருத்தமானவர்களாக இருப்பதாகவும் அந்த ஆயவரிக்கை தெரிவித்துள்ளது.

இதிலும் பெண்கள் முதல் இடம்!!!


அதிகமாக பெண்கள் மூன்று வருட பட்டப்படிப்பை மேற்கொள்வதாகவும், வேலைக்கு பொருத்தமானவர்கள் எனும்போது, ஆண்களுக்கு இணையாகவோ அல்லது சற்று அதிகமாகவோ பொருந்துவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
 

குறைப்பாடுகள்.


மூன்று வருட பட்டப் படிப்புகளில் 100 பெண்களுக்கும் சராசரியாக 109 ஆண்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. வேலை பெறுவதில் குறைந்த ஆங்கில மொழி அறிவு, கணினித் திறன் குறைபாடு மற்றும் அறிந்து கொள்ளும் திறன் ஆகியவை பெரும் தடைகளாக இருக்கிறது.

சிறு நகரங்களின் நிலை!!


ஆங்கில மொழி அறிவு மற்றும் கணினித் திறன் குறைபாடுகள் சிறிய நகரங்களில் பெரும்பாலும் வேலை வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் சிறிய நகரங்களில் வசிக்கும் அல்லது படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் இந்த கணினி மற்றும் ஆங்கிலத் திறன் குறைபாடுடன் காணப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

 

தகுதியான மாணவர்கள் மிகவும் குறைவு.

 


 


 
 

 




 
 

 

 
 

 

 


புத்தாண்டு.. மூணு நாளைக்கு 'கடைய' மூடுங்க! - ராமதாஸ் - www.tnfinds.com - Best site in the world...

புத்தாண்டு.. மூணு நாளைக்கு 'கடைய' மூடுங்க! - ராமதாஸ்

சென்னை: புத்தாண்டையொட்டி இரண்டு நாட்களில் மட்டும் ரூ.250 கோடிகளுக்கு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், எனவே புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தவிர்க்க டிசம்பர் 31 முதல் வரும் ஜனவரி 2ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட மக்கள் தயாராகிவரும் நிலையில், டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் மட்டும் ரூ.250 கோடிகளுக்கு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தாராளமாக மது விற்பனை செய்ய வசதியாக ஒவ்வொரு கடையிலும் 15 நாட்களுக்கு தேவையான மது இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
 
 
 தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தேவையான அளவுக்கு இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டாத அரசு, மது வகைகளை இருப்பு வைப்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது. 
 
 
ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்த பிறகுதான் இளைஞர்கள் மது அருந்தும் வழக்கமும் அதிகரித்திருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 14 முதல் 19 வயது வரையுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களில் 65 விழுக்காட்டினர் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று அசோசெம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி, 20 வயது முதல் 29 வயது வரையுள்ளவர்களில் 25 விழுக்காட்டினர் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மது அருந்துவதற்காக மட்டும் ரூ.1000 முதல் ரூ.10,000 வரை செலவழிக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.
 
 
 இந்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன என்ற போதிலும் இந்த உண்மைகளை எவரும் மறுக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிக அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலமாகவும், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதுதான் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களில் சென்னையில் சாலையோர நடைபாதைகளில் இருந்த குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழக்கக் காரணமான 2 பயங்கர சாலை விபத்துக்களுக்கு காரணம் மதுபோதை தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், புத்தாண்டையொட்டி நிகழும் பாலியல் குற்றங்களுக்கும் மது தான் காரணமாக விளங்குகிறது. 
 
இத்தனைத் தீமைகளுக்கும் காரணமான மதுவை கட்டுப்படுத்துவது தான் மக்கள் நலன் விரும்பும் ஓர் அரசின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே புத்தாண்டின் போது இலக்கு நிர்ணயம் செய்து மதுவை விற்பனை செய்வது வெட்கக்கேடான ஒன்றாகும். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று ஒருபுறம் அறிவுறுத்தும் அரசு, இன்னொரு புறம் மதுக்கடைகளை திறந்து வைத்து, இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வது முரண்பாடுகளின் உச்சமாகும். 
 
மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள் அதிகம் வாழும் அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கூட புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துக்களைத் தவிர்க்கவும், மற்றவர்களுக்கு தொல்லையில்லாத கொண்டாட்டங்களை உறுதி செய்யவும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது கலாச்சாரத்திற்கும், ஒழுங்குக்கும் பெயர்பெற்ற தமிழ்நாட்டில் அரசே அதிக அளவில் மது விற்பனை செய்வது சரியல்ல. 
 
எனவே, மக்களின் நலன்கருதி புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்" என இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.


 

 

முழுமையான பிரம்மச்சர்யம் உணர்ந்து வாழ்வேன்!- 'மா ஆனந்தமயி' ரஞ்சிதா! - www.tnfinds.com - Best site in the world..

முழுமையான பிரம்மச்சர்யம் உணர்ந்து வாழ்வேன்!- 'மா ஆனந்தமயி' ரஞ்சிதா! 

பெங்களூர்: முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் பிடதி ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன், என்று மா ஆனந்தமயியாக மாறியுள்ள நடிகை ரஞ்சிதா கூறினார்.
 
 தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு நித்யானந்தா சாமியாருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ பட காட்சிகள் சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. நித்யானந்தாவின் மடாலயங்கள் தாக்கப்பட்டது. ரஞ்சிதா தலைமறைவானார். நித்யானந்தா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். ரஞ்சிதாவும் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளிப்பட்டு ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல என்று அறிவித்தார். தன் மீது அவதூறு பரப்பி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 
 
 
இந்த நிலையில் தற்போது சன்னியாசியாகியுள்ளார். நித்யானந்தாவின் 37-வது பிறந்தநாள் விழா பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் நடந்தது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் சன்னியாசியாக விரும்புகிறவர்களுக்கு நித்யானந்தா தீட்சை வழங்குவது உண்டு. இந்த பிறந்த நாளிலும் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் தீட்சை பெற்றனர். 
 
அதில் ஒருவர் நடிகை ரஞ்சிதா. இதனால் பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆபாச வீடியோ சர்ச்சைக்கு பின்னரும் நித்யானந்தா ஆசிரமத்திலேயே ரஞ்சிதா தங்கி இருந்தார். ஆன்மீக சுற்றுப் பயணங்கள், தியான கூட்டங்களில், குண்டலினி எழுப்புதல் என அனைத்து நிகழ்வுகளிலும் நித்யானந்தாவுடனே காணப்பட்டார். 
 
 
தற்போது சன்னியாசியாகி உள்ளார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து ருத்ராட்சை மாலைகள், மற்றும் காவி உடை அணிந்து சன்னியாசியாக தீட்சை பெற்றார். பின்னர் மேடையில் அவர் பேசும்போது, "உண்மை, அமைதி, அகிம்சை போன்றவற்றை நான் புரிந்து கொண்டேன். இதன் மூலமே சன்னியாசி ஆகி இருக்கிறேன்.
 
 இனி எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன்," என்றார்.
 
 ஏற்கெனவே நடிகை ராகசுதாவும் இதே நித்யானந்தா மூலம் சன்னியாசம் பெற்றது நினைவிருக்கலாம்.


 


தமிழ்நாட்டில் எனக்குக் கொஞ்சம் பிரச்சினை இருக்கு, அதான் நடிக்கல!- அஞ்சலி - www.tnfinds.com - Best site in the world..

தமிழ்நாட்டில் எனக்குக் கொஞ்சம் பிரச்சினை இருக்கு, அதான் நடிக்கல!- அஞ்சலி

ஹைதராபாத்: தமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு.. அதான் தமிழில் இப்போதைக்கு நடிக்க முடியாத சூழல் உள்ளது, என்று நடிகை அஞ்சலி கூறினார்.
 
 தமிழில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படம் ஆந்திராவிலும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. 
 
ஹைதராபாதில் நடந்த இதன் வெற்றி விழாவில் பங்கேற்ற அஞ்சலி தமிழ் படங்களில் தான் நடிக்க முடியாத சூழல் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

விழாவில் அவர் பேசுகையில், "ஆதலால் காதல் செய்வீர்' படம் தயாரான போது அதில் கதாநாயகியாக நடிக்க என்னைத்தான் அழைத்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எனக்கு சில பிரச்சினைகள் உள்ளன. 
 
அது எல்லோருக்கும் தெரியும். எனவேதான் தமிழ் படங்களில் நடிக்காமல் உள்ளேன். ‘ஆதலால் காதல் செய்வீர்' படத்திலும் இதனால்தான் நடிக்க முடியவில்லை. இந்த படம் ஆந்திராவில் ரிலீசாகி பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
 
 இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை



 


பெங்களூரு வந்த நான்டேட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ; 26 பேர் பலி- 3 தமிழர்கள் உயிரிழப்பு - www.tnfinds.com - Best site in the world..

பெங்களூரு வந்த நான்டேட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ; 26 பேர் பலி- 3 தமிழர்கள் உயிரிழப்பு

அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயம் அடைந்துள்ளனர். 
 
மகராஷ்டிரா மாநிலம் நான்டேட் பகுதியில் இருந்து நேற்று இரவு பெங்களூர் புறப்பட்ட நான்டேட் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 3.45 மணியளவில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே உள்ள சென்று கொண்டிருந்தது. கொத்தசேவூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. ரயிலின் வேகம் அதிகமாக இருக்கவே தீ மளமளவென பற்றியது.
 


அதிகாலை நேரம் என்பதால் உறக்கத்தில் இருந்த பயணிகள் பலர் எரிந்து சாம்பலாயினர். மூச்சுத் திணறியும் பலர் பலியாகினர். இதுவரை 26 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அனந்தபூர் மற்றும் தர்மாவரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
5-க்கும்மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தும் விதமாக ரயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். 
 
ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் ஏறபட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சகம் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.
 
 விபத்து குறித்து விசாரணை நடத்தவும் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில் தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் சுதா, லீலா, ராமநாதன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. 
 
அதேபோல ரயிலில் பயணம் செய்த குரோம்பேட்டையைச் சேர்ந்த நடேஷ், குழந்தை தனுஸ்ரீ ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. தீக்காயமடைந்த இருவருக்கும் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரயிலில் பயணித்த தனியார் வங்கி ஊழியரான நடேஷின் மனைவி விஜிதா பற்றி தகவல் இல்லை. 
 
குரோம்பேட்டையில் நியூ காலனி 4-வது மெயின் ரோட்டில் வசித்து வருகிறார் நடேஷ். நான்டேட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை நடைபெற்ற தீ விபத்து அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 
 
ரயிலில் பயணம் செய்தவர்கள் பற்றி தெரிந்து கொள்ள ரயில்வே நிர்வாகம் உதவி தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது ஹைதராபாத்: 040 - 23310680 பெங்களூரு: 080 - 22354108, 22259271, 080 2235 4108, 080 2225 9271, 080 2215 6554

 

Friday, December 27, 2013

காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் - www.tnfinds.com - Best Site In The World


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ்

நம்ம அப்பா அம்மா காலத்துலலாம் போலீஸ்னு சொன்னாவே அப்படி பயப்படுவாங்க ஆனா இப்பவே போலீஸ் தான் மக்கள பாத்து பயப்படுது காரணம் அந்த அளவுக்கு ஊடகங்கள் வளர்ந்திருக்கிறது. 

பேஸ்புக், ட்விட்டர் என நிறைய சமூக வலைத்தளங்களும் இருக்கிறது ஒரு சிறிய பிரச்சனையை மிக சுலபமாக அனைவரிடமும் கொண்டு சேர்த்து விடலாம். 

சரி அத விடுங்க இங்க சில காவல் குறை நண்பர்கள் இருக்காங்க ஓ... சாரிங்க காவல் துறை நண்பர்கள் இருக்காங்க அவங்கள பாருங்க எப்படி கெத்தா இருக்காங்கன்னு...

1


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் என்ன ஒரு தத்ரூபமான காட்சி மொத போட்டோவே செம...

2


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் குருநாதா என்ன மூஞ்சிய காணோம் குருநாதா.

3


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் சட்டம் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது

4


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் இது என்னாது புதுசா இருக்கு

5


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் உள்ள இருக்கறது மொம்மை மாதிரி இல்ல தெரியறது இத கூட அரெஸ்ட் ப்ண்ணுவாளா இவாள்

6


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் போலீசா இருந்தாலும் அவளும் பெண் தானே...

7


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் வாவ்

8


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் சார் சார் கீழே என்னமொ ஓடுது பாருங்க.

9


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் விளையாட்டு...ம்ம்ம்

10


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் கருப்பன் குசும்பு காரன்...

11


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் வாவ் போலீஸ் நாய்....

12


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் நாங்க டியூட்டில ரொம்ப ஸ்டிட்டு

13


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் போலீசே இப்படியா சூப்பரு

14


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் ஆளே இல்லாத ஆத்துல அப்படி என்னத்த சார் பாக்குறீங்க

15


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் இவருதாங்க நெஜ போலீஸ்

16


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் டியூட்டி பாக்கறாரு

                                             17


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் அருமை...


18


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் கலவரத்த அடக்குங்க ஆபிஸர்ன்னு சொன்னா இங்க வந்து போட்டோக்கு போஸ் கொடுக்கறாரு
19

காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் சட்டத்தின் முன் அனைவரும் சமம்

20


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் யாருப்பா இந்த வேலைய பாத்தது

21


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் ஹலோ ஹலோ இது ஒன் வே ங்க

22


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் இப்படி ஒரு போலீஸ் நம்ம நாட்டுல ஏன் இல்லாம போய்ட்டாங்க

23


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் ஒருவேளை டிரெயின்ங்கா இருக்குமா

24


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் சார் சார் நீங்க தான் சார் என்னோட ஒடிப்போன பொண்டாட்டிய கண்டுபிடிச்சு தரணும்

25


காவல் துறை நம் நண்பன்... இதோ சில போட்டோஸ் தலைவர் ரஜினி பேன் போல...


More Hot News Click Here...