Monday, September 30, 2013

வரும் தேர்தலில் மதிமுகவுக்கு வாய்ப்பு கொடுங்கள் - வைகோ பிரசாரம் - www.tnfinds.com - Best Site in the world.

வரும் தேர்தலில் மதிமுகவுக்கு வாய்ப்பு கொடுங்கள் - வைகோ பிரசாரம்
சாத்தான்குளம்: நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு வாய்ப்பு தாருங்கள் என சாத்தான்குளத்தில் நடந்த வாகன பிரசாரத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசினார். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் மதிமுக பொது செயலாளர் வைகோ வாகன பிரசாரத்தை தொடங்கினார். கருங்குளம், சேரக்குளம், பேய்குளம் வழியாக சாத்தான்குளம் பஸ் நிலையம் வந்தார். 
 
அங்கு திறந்த வேனில் நின்று வைகோ பேசியதாவது, மக்கள் நலனுக்காக போராடிய தகுதியோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன். பெரியார் சொன்ன பண்பாட்டை மதித்து எங்கள் தன்மானத்தை விட்டு கொடுக்காமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை இருந்த போதிலும் மக்களுக்காக ஓய்வில்லாமல் பல போராட்டங்களை நடத்தினோம். வரும் தேர்தலில் மதிமுகவுக்கு வாய்ப்பு கொடுங்கள் - வைகோ பிரசாரம் கேரள அரசு தண்ணீர் தர மறுத்தபோதும உரிமையோடு போராடியது மதிமுகதான். 
 
காமராஜர் மணி மண்டபம் அமைக்க மறுத்த போது அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் பேசி அனுமதி வாங்கி கொடுத்தேன். காமராஜர், அண்ணா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மது இல்லை. இப்போதுள்ள அரசு அதைபற்றி கவலைப்படவில்லை. ம்க்களி்ன் வாழ்வாரத்திற்காக போராடி வருவதால் எங்களுக்கு தகுதி இருக்கிறது. நேர்மை, உண்மை, உழைப்பு ஆகியவற்றுடன் வாக்கு கேட்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுங்கள் என்றார் அவர்.

More News click here.........

Sunday, September 29, 2013

நைஜீரியா: வேளாண் கல்லூரியில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு… 50 மாணவர்கள் பலி - www.tnfinds.com - Best Site in the World

நைஜீரியா: வேளாண் கல்லூரியில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு… 50 மாணவர்கள் பலி
அபுஜா: நைஜீரியாவில் வேளாண் கல்லூரிக்குள் புகுந்து தீவிரவாதிகள், சரமாரியாக சுட்டதில் 50 மாணவர்கள் பலியானார்கள். நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோப் மாகாணத்தில் குஜ்பா நகரில் ஒரு வேளாண் கல்லூரி உள்ளது. 
 
அங்குள்ள விடுதியில் நள்ளிரவில் மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது போகோ ஹராம் தீவிரவாதிகள் கும்பலாக திடீரென்று புகுந்தனர். ஒவ்வொரு அறையாக சென்று சரமாரியாக சுட்டனர். தப்பி ஓடிய மாணவர்களையும் இறக்கமின்றி சுட்டு தள்ளினர். வகுப்பறைகளுக்கும் தீ வைத்தனர். 
 
இதில் 50 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். தகவல் கிடைத்ததும் ராணுவத்தினர் சென்று பலியான 26 மாணவர்களின் உடல்களை மீட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. கல்லூரியில் படித்த சுமார் 1,000 மாணவர்கள் தப்பி ஓடி விட்டதாக கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறினார். நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு, தனி நாடு கேட்டு போராடி வருகிறது. 
 
இவர்கள் அப்பாவி மக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் போகோ ஹராம் தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் 143 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் ராணுவ உடை அணிந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.


உயிருடன் இருக்கும் தமிழக அமைச்சர்க்குஇறப்புச்சான்றிதழ் - www.tnfinds.com - Best site in the world

உயிருடன் இருக்கும் தமிழக அமைச்சர்க்குஇறப்புச்சான்றிதழ்
மதுரை மாநகராட்சி சார்பில் தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு இறப்புச்சான்றிதழ் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்துள்ள நிலையில், இந்த பிரச்னை எழுந்துள்ளது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி இறந்துவிட்டதாக கடந்த மாதம் 23 ஆம் தேதி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை 2006 ஆம் ஆண்டு இறந்துவிட்டதாக கடந்த மாதம் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மதுரை மாநகராட்சி சார்பில் அளிக்கபட்டுள்ள புகாரில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் கணினி பிரிவில் டிஜிட்டல் கையெழுத்தினை தவறாக பயன்படுத்தி போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுமி மீட்கப்பட்டும் பலனில்லை..சிகிச்சை பலனின்றி மரணம் - www.tnfinds.com - Best site in the World.....

ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுமி மீட்கப்பட்டும் பலனில்லை..சிகிச்சை பலனின்றி மரணம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுமி பத்துமணி நேர போராட்டத்திற்குப்பின்னர் மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அடுத்த, ஆரணி அருகேயுள்ள புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி தேவி. எல்.கே.ஜி. படித்து வரும் தேவி, சங்கர் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நிலத்தில் இருந்த 300 அடி ஆழமும், 1 அடி விட்டமும் உள்ள ஆழ்துளை கிணற்றை வைக்கோல் மற்றும் செடிகளை போட்டு தார் பாயால் மூடி வைத்திருந்தனர். ஆழ்துளைக் கணறு இருப்பதை அறியாத தேவி, அதன் மீது உட்கார்ந்து உள்ளாள். அப்போது அச்சிறுமி அந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து மாட்டிக் கொண்டாள். 
 
 தேவியை, மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலெக்டரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணியை பார்வையிட்டார். 10 மணி நேர போராட்டம் 30 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சிறுமி தேவி, தனது பெற்றோரின் குரல்களுக்கு பதில் அளித்தாள். மேலும், ஆழ்குழாய் கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. குழாயின் அருகில் மேலும் ஒரு குழி தோண்டி சிறுமி தேவியை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஜே.சி.பி. இயந்திரம் மூலம் 25 அடி பள்ளம் தோண்டப்பட்டது. குழந்தைக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வந்தது. சில நிமிடங்களுக்கு முன்பு சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள். 
 
சிறுமிக்கு சிிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மீட்கப்பட்டு சிகிச்சை பின்னர் 10 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நில உரிமையாளர் கைது இந்நிலையில் சம்பவம் குறித்த தகவலறிந்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்ச் முக்கூர் சுப்பிரமணியம் மற்றும் ஆரணி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. பாபு முருகவேல் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு, மேலும் துரிதமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். இதனிடையே ஆழ்துளை கிணறு தோண்டிய நில உரிமையாளர் சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஏற்கனவே ஆழ்துளை கிணற்றி் குழந்தைகள் விழுந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 2012 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் கைலாசநாதபுரம் கிராமத்தில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுதர்ஷன் உயிரிழந்தான். 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே 520 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த குணா என்ற 3 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதியன்று கரூர் மாவட்டம் சூரிபாளி என்ற இடத்தில், 7 வயது சிறுமி முத்துலட்சுமி, ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். 16 மணிநேர போராட்டத்திற்குப்பிறகு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
More news click here

மோடிக்கு வரும் கூட்டத்தால் எந்த மாற்றமும் வராது -திருமாவளவன் - www.tnfinds.com - Best site in the world

மோடிக்கு வரும் கூட்டத்தால் எந்த மாற்றமும் வராது -திருமாவளவன்
திண்டுக்கல்: திருச்சியில் நரேந்திர மோடிக்கு வந்த கூட்டத்தை வைத்து தமிழக அரசியலிலோ, லோக்சபா தேர்தலிலோ எந்த மாற்றமும் வந்து விடும் என்று கூற முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து வத்தலகுண்டு வந்த அவர் அங்கு மாலைமலருக்கு அளித்த பேட்டியில், லோக்சபா உறுப்பினர்கள் கூடி பிரதமரை தேர்வு செய்யும் நடைமுறைதான் இதுவரை வழக்கத்தில் இருந்து உள்ளது.
 
 பாரதீய ஜனதா தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவித்து உள்ளது மரபை மீறிய செயல். தற்போது திருச்சியில் நடந்த பாரதீய ஜனதா கட்சி மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கூடிய கூட்டம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளுக்கும், மதச்சார்பற்ற சக்திகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல் ஆகும். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இடம் பெறலாம். 
 
கொள்கை உடன்பாடு உள்ள கட்சிகள் மட்டுமே ஒரே கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று நினைக்க முடியாது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றாலும் அந்த கூட்டணியில் நாங்கள் இருப்போம். அதற்காக கொள்கைகளை விட்டு கொடுக்க மாட்டோம். குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி பறிப்பில் இருந்து காப்பாற்றும் மத்திய அரசின் அவசர சட்டத்தினை வரவேற்கிறோம். ஏனெனில் தலித், பழங்குடியின சமூகத்தினர் மீதுதான் 90 சதவீதம் பொய் வழக்குகள் தொடரப்படுகின்றன. 
 
அதனால் அவசர சட்டம் கொண்டு வராமல் இருந்தால் இந்த வழக்குகளை காட்டி ஒடுக்கப்பட்ட மக்களை பதவிக்கு வரவிடாமல் செய்து விடுவர். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. தர்மபுரி இளவரசன்- திவ்யா காதல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம் என்றார் திருமாவளவன்.

லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடனும் பாமக கூட்டணி இல்லை- தனித்தே போட்டி: அன்புமணி - www.tnfinds.com - best site inthe world.

லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடனும் பாமக கூட்டணி இல்லை- தனித்தே போட்டி: அன்புமணி

Saturday, September 28, 2013

'முட்டாள்தனமான அவசர சட்டம்'- ராகுல் விமர்சனத்தால் பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா? - www.tnfinds.com - Best site in the World

'முட்டாள்தனமான அவசர சட்டம்'- ராகுல் விமர்சனத்தால் பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா?
அவசர சட்டத்தை முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளதால் பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தமக்கு ஏற்பட்ட அவமானம் என்று கருதுவதால் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
 
 இதற்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி ஆளும் காங்கிரஸிலும் எதிர்ப்பு எழுந்தது. 'முட்டாள்தனமான அவசர சட்டம்'- ராகுல் விமர்சனத்தால் பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா? அதுவும் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தி, அவசரச் சட்டம் கொண்டு வந்தது முட்டாள்தனம் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 
 
இது தமக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமானமாக மன்மோகன் சிங் கருதியதால் உடனடியாக சோனியாவுடன் அவர் பேசினார். பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொள்ள விரும்புவதாக கூறியிருக்கிறார். இதை கேட்டதும் சோனியா கடும் அதிர்ச்சி அடைந்தார். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ராகுல்காந்தி அவசரம், அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு இ-மெயில் செய்தி அனுப்பினார். ஆனாலும் மன்மோகன்சிங் மிகுந்த தர்ம சங்கடத்திலும், வருத்தத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. ராகுல் பேச்சால் எதிர்க் கட்சிகளிடமும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பிரதமர் உடனே பதவி விலகுவது நல்லது என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள். இதனால் மன்மோகன்சிங் சட்ட நிபுணர்களுடன் பதவி விலகுவது பற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.


தண்டவாளத்தில் விரிசல்! பெரும் விபத்தில் இருந்து தப்பியது வைகை எக்ஸ்பிரஸ்!! - www.tnfinds.com - Best site in the world

தண்டவாளத்தில் விரிசல்! பெரும் விபத்தில் இருந்து தப்பியது வைகை எக்ஸ்பிரஸ்!!
மணப்பாறை: ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் இருப்பது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுவிட்டதால் பெரும் விபத்தில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தப்பியது. மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 6.45 மணிக்கு புறப்பட்டு திருச்சி வழியாக சென்னை செல்கிறது. இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.


மணப்பாறையை ரயில் நெருங்கி வந்த போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை பராமரிப்பு ஊழியர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்

 
உடனே வைகை எக்ஸ் பிரஸ் டிரைவருக்கு தகவல் தெரிவித்து ரயிலை நிறுத்துமாறு கூறினர்.

ஆனால் வைகை எக்ஸ்பிரஸோ தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தின் அருகே வந்து விட்டது. இதையடுத்து டிரைவர் உடனே பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் ஏறியபடி நின்றது.

 
தண்டவாள விரிசல் குறித்து ஊழியர்கள் சரியான நேரத்தில் தெரிவித்து ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 30 நிமிட நேர தாமதத்துக்குப் பின் ரயில் புறப்பட்டுச் சென்றது.

6 தேமுதிக எம்.எல்.ஏக்களின் 6 மாத சஸ்பென்ட் காலம் முடிந்தது! - www.tnfinds.com - Best site in the World

6 தேமுதிக எம்.எல்.ஏக்களின் 6 மாத சஸ்பென்ட் காலம் முடிந்தது!
சென்னை: சட்டசபையில் இருந்து 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 மாத காலம் முடிவடைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் சட்டசபை கூட்டத்தின் கடைசி நாளன்று தேதி தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழழகன் சட்டசபையில் பேசினார். அப்போது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் எங்கள் வழியை பின்பற்றுங்கள்' என்றார். இதற்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது தேமுதிக எம்.எல்.ஏக்கள் தமிழழகனுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாய்த்தகராறு முற்றி கை கலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சட்டசபை ஒழுங்கு நடவடிக்கை குழு எடுத்த முடிவின்படி, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், நல்லதம்பி, அனகை முருகேசன், பார்த்தசாரதி, செந்தில் குமார், அருள் செல்வன் ஆகிய 6 பேர் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

பின்னர் நடந்த சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் தடைகாலம் 6 மாதமாக குறைக்கப்பட்டது.

இந்த தடை காரணமாக அவர்கள் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. அவர்களுக்கான சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்த 6 பேருக்கும் விதிக்கப்பட்ட தடை காலம் கடந்த 24-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இனி அவர்கள் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். சலுகைகளை பெற முடியும்.



More news click here.....


7 முறை விலை ஏறிய பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைய வாய்ப்பு?

டெல்லி: தொடர்ந்து 7 முறை விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பெட்ரோல் விலை இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.2 அளவுக்குக் குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாய்க்கு நிகராக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்த போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலின் விலையை அடிக்கடி உயர்த்தின. கடந்த சிலமாதங்களில் மட்டும் பெட்ரோல் விலை 7 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்வை அடைந்து வருவதன் பலனாக இன்னும் ஓரிரு நாட்களில் பெட்ரோல் விலையை ரூ.2 அளவுக்குக் குறைக்க வாய்ப்பிருப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 30ம் தேதி விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் அவர் சூசகமாகக் கூறினார். ஒரு வேளை வரும் திங்கள் அன்று பெட்ரோல் விலை குறைக்கப்பட்டால், 7 முறை விலை ஏற்றப்பட்டு, மே மாதத்துக்குப் பிறகு நடைபெறும் முதல் விலை குறைப்பு என்பது குறிப்பிடத்தக்கது

More NEWS click here....