Wednesday, August 31, 2016

Friday, January 23, 2015

Wednesday, June 11, 2014

Puthiya Thodakkam E Magazine - 11-06-2014

புதிய தொடக்கம் இதழின் 5ம் வெளியீடு
உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட இணைய முகவரியில் புத்தகத்தை படித்துவிட்டு இங்கே பதியவும்.

Saturday, January 11, 2014

60 ஆண்டுகளாக குளிக்காத ஈரானின் அழுக்கு மனிதர்’: உடம்பில் தண்ணீரே பட்டதில்லை! - www.tnfinds.com - Best site in the world...


60 ஆண்டுகளாக குளிக்காத ஈரானின் அழுக்கு மனிதர்’: உடம்பில் தண்ணீரே பட்டதில்லை!

டெஹ்ரான்: ஈரானில் 60 ஆண்டுகளாக ஒரு மனிதர் குளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த கப்பு மனிதர் விலங்குகளின் சாணத்தை பைப்பில் அடைத்து புகைக்கும் விசித்திர பழக்கமும் கொண்டுள்ளார்.

 தினந்தோறும் குளிப்பது மனிதர்களின் இயல்பு, தண்ணீர் பஞ்சத்தைப் பற்றியும் கவலைப்படாமல், இருவேளை குளிப்பார்கள். 

ஈரானின் தெற்கு மாகாணமான ஃபர்ஸ் பகுதியில் உள்ள டெஜ்கா என்ற கிராமத்தை சேர்ந்த அமோவ் ஹாஜி. கடந்த 60 ஆண்டுகளாக உடம்பில் தண்ணீரே படாமல் வாழ்ந்து வருகிறார். 

இளம் வயதில் தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இவர், இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்து, பற்றற்ற துறவியின் நிலையில் வாழ்ந்து வருகிறார்.


உலகின் அழுக்கான மனிதர்.


நீராவியால் இயங்கும் ரெயிலின் டிரைவரைப் போல் உடல் முழுவதும் பட்டைப்பட்டையாய் புழுதி மண்ணுடனும், கன்னங்கரேலென்ற அழுக்கு துணிகளுடனும் அந்த கிராமத்திலேயே சுற்றிச்சுற்றிவரும் இவரை மடக்கிப்பிடித்து குளிப்பாட்ட பலர் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல், விரையத்தில் தான் முடிந்துள்ளது.


கெட்டுப்போன இறைச்சி.

இவர் விரும்பி சாப்பிடுவது என்ன தெரியுமா? கெட்டுப்போன இறைச்சியும், செத்துக் கிடக்கும் உயிரினங்களின் மாமிசமும்தான்.

விலங்குகளின் சாணம்.

'செயின் ஸ்மோக்கர்' ஆன தனது 'ஸ்மோக்கிங் பைப்'பில் (புகை பிடிக்க பயன்படுத்தும் உறிஞ்சு குழல்) புகையிலைக்கு பதிலாக விலங்குகளின் சாணத்தை அடைத்து, 10 நிமிடத்திற்கு ஒரு முறையாவது பைப்பை பற்றவைத்து ‘தம்' அடிக்காவிட்டால் தலை வெடித்து விடுவது போல் அமோவ் ஹாஜி துடித்துப்போய் விடுகிறார்.

கிடைத்த இடத்தில் உறக்கம்.

இவருக்கு உரிமையான உபயோகப் பொருட்கள் என்று ஏதுமில்லாததால் ‘மடியில கனமில்லே.. வழியில பயமில்லே' என்ற சித்தாந்தத்தின்படி, பயமறியாத இளங்கன்றாக கடந்த 60 ஆண்டுகளாக குளித்தே அறியாமல் இவர் டெஜ்கா கிராமத்தில் வலம் வருகிறார்.


சாதனை முறியடிப்பு.

இந்த சாதனையை இவர் எட்டுவதற்கு முன்னர் வரை 66 வயதான ஒரு நபர் 38 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்தது தான் பெரிய சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையை தற்போது அமோவ் ஹாஜி முறியடித்து விட்டார்.

இந்தியாவின் கைலாஷ்சிங்.

முந்தைய சாதனைக்கு சொந்தக்காரர், இந்தியாவின் வாரணாசி பகுதியை சேர்ந்த கைலாஷ் சிங் என்பவர்தான். 'உயிரே போனாலும் இனி குளிக்கப்போவது இல்லை' என 1974-ம் ஆண்டில் சபதமேற்றுக் கொண்ட இவர் 2012 வரை 38 ஆண்டுகளாக குளித்ததே கிடையாது. 

அதற்கு பிறகாவது அவர் குளித்தாரா? இல்லையா? என்பது தொடர்பாக இவரைப்பற்றி உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.












இந்தியாவின் அழகிய தோட்டங்கள் - www.tnfinds.com - Best Site In The orld


இந்தியாவின் அழகிய தோட்டங்கள்


முன்னாட்களில் இயற்கையாக ஆங்காங்கு பூத்துச் சிரிக்கும் மலர்ச் செடிகளும், குளங்களும், அழகிய தாவரங்களும் நம் வாழும் சூழ்நிலையின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தன. ஆனால் நாளடைவில் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் கட்டும் பொருட்டு குளங்கள் தூர்க்கப்பட்டும், மரங்கள் வெட்டப்பட்டும் இந்த இயற்கை வளங்களை இழக்க நேர்ந்தது. எனவே இதை ஈடுசெய்யும் நோக்கத்துடன் செயற்கையான தோட்டங்கள் ஆங்காங்கு உருவாக்கப்படுகின்றன. அதேவேளையில் மன்னர் காலத்து தோட்டங்கள் சிலவும் நம்மிடையே இன்று எஞ்சியுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் காணப்படும் சில குறிப்பிடத்தக்க அழகிய தோட்டங்களை பற்றி காண்போம்.

இந்திரா காந்தி துலிப் தோட்டம், ஸ்ரீநகர் 




தால் ஏரிக்கருகில் ஸபர்வான் மலைச்சிகரங்களில் உள்ள இந்திரா காந்தி துலிப் தோட்டம் ஸ்ரீ நகரிலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் ஒரு வார பண்டிகையான துலிப் திருவிழாவிற்காக இந்த இடம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த தோட்டத்தில் பூக்களுக்கான பருவத்தில் ஒரே சமயத்தில் 1.3 மில்லியன் துலிப் பூ மொட்டுக்கள் பூக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்தோட்டம் ஷாலிமார் தோட்டம், சஸ்ம்-இ-ஷாஹி, நிஷாத் தோட்டம் மற்றும் பிற முகலாய தோட்டங்களுக்கு மிகவும் அருகிலேயே அமைந்துள்ளது.


பிருந்தாவன் கார்டன், மைசூர் 



காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாகர் என்ற அணைக்கு கீழே இந்த பூங்கா தோட்டம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பூங்காவின் மையத்தில் அமைந்துள்ள சிறு குளத்தில் காவேரி தெய்வத்தின் சிலை அமைந்துள்ளது. இக்குளத்தில் பயணிகள் படகு பயணம் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. 

ஷாலிமார் தோட்டங்கள், ஸ்ரீநகர் 



ஸ்ரீ நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஷாலிமார் தோட்டங்கள், ஸ்ரீ நகரின் புகழ் பெற்ற முகலாய தோட்டங்களில் ஒன்றாகும். ஷாலிமார் என்ற வார்த்தைக்கு 'காதலின் இருப்பிடம்' என்று பொருளாகும். இந்த தோட்டம் ஷாலிமார் பூங்கா, பைய்ஸ் பக்ஷ், சார் மினாரின் தோட்டம் மற்றும் ஃபாரா பக்ஷ் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகிறது. முகலாய மன்னர் ஜஹாங்கீர் தனது மனைவி நூர் ஜஹானுக்காக 1619-ம் ஆண்டு இந்த தோட்டத்தை உருவாக்கினார். பெர்சியாவில் உள்ள சஹார் பாக் தோட்டத்தின் வடிவத்தை போலவே ஷாலிமார் 

லால் பாக், பெங்களூர் 




லால் பாக் என்றால் ‘சிவப்பு தோட்டம்' என்பது பொருள். இந்த பூங்காத்தோட்டமானது புகழ் பெற்ற முகலாய தோட்டங்களை போன்று அமைக்கும் நோக்கத்துடன் ஹைதர் அலியால் துவங்கப்பட்டு அவரது மகன் திப்புசுல்தானால் முழுதும் உருவாக்கி முடிக்கப்பட்டது. 240 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் லால் பாக்கில் 1000 வகையான மலர்ச்செடிகளும் பலவகைப்பட்ட வறண்ட பிரதேச வகைத் தாவரங்களும் காணப்படுகின்றன. இந்த பூங்காத்தோட்டத்தின் உள்ளே பீடபூமி போன்ற இயற்கையான பாறை அமைப்பு காணப்படுகிறது. லால் பாக் பாறை என்று அழைக்கப்படும் இது 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

நிஷாத் பூங்கா, ஸ்ரீநகர் '





நிஷாத் பூங்கா' என்ற வார்த்தைக்கு 'மகிழ்ச்சியின் தோட்டம்' என்று அர்த்தமாகும். 1633-ம் ஆண்டு தால் ஏரியின் கிழக்கு கரையில் கட்டப்பட்ட இந்த பூங்காவில் அரிய வகையிலான பூக்கள், சினார் மரங்கள் மற்றும் சைப்ரஸ் மரங்கள் ஆகியவை உள்ளன.


தொங்குதோட்டம், மும்பை 



மும்பை மாநகரில் உள்ள பூங்காக்களில் மிகவும் பழமையான பூங்காவாக தொங்குதோட்டம் அறியப்படுகிறது. இந்தத் தோட்டத்தின் கவர்ந்திழுக்கும் அம்சமான ராட்சஸ மூதாட்டியின் காலணியை காண்பதற்காகவே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இங்கு அலைமோதுகிறது. இங்கிருந்து அரபிக்கடலின் பின்னணியில் சூரிய அஸ்த்தமனத்தை ரசிப்பது ஒரு அலாதியான அனுபவம்.



'டவுட்' தனபாலு - www.tnfinds.com - Best site in the world...

'டவுட்' தனபாலு

மத்திய தலைமை வழக்கறிஞர், வாஹன்வதி: நிலங்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சில தவறுகள் நடந்திருப்பது உண்மையே; அரசின் கொள்கை முடிவு காரணமாக, விதிகள் தளர்த்தப்பட்டதும் உண்மை தான்.
டவுட் தனபாலு: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பான சி.பி.ஐ., விசாரணை அறிக்கையில் திருத்தம் நடந்துச்சு... முக்கிய ஆவணங்கள் மாயமாச்சு... இதை எல்லாம் சாக்குப்போக்கு சொல்லி, பிரதமரும், மத்திய அரசும் தட்டிக்கழிச்சாங்க... இப்ப ஒரு வழியா, ஒரு தவறை அரசு ஒப்புக்குச்சு... இனி, இன்னும் நிறைய பூதங்கள் வெளிவரும் என்பதில், 'டவுட்'டே இல்லை...!

காங்., மூத்த தலைவர், குலாம் நபி ஆசாத்: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்; கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.
டவுட் தனபாலு: 'கூட்டணியில் இருந்து, தி.மு.க., வெளியேறியதன் மூலம், காங்கிரசுக்கு இப்போது தான், சுதந்திரம் கிடைச்சு இருக்கு'ன்னு உங்க கட்சியின் மாநிலத் தலைவர்கள் பேசிட்டு வர்றாங்க... 'அது அப்படியில்லை; நீங்க இருந்தால் தான், எங்களுக்கு மரியாதை'ன்னு விளக்கறதுக்குத் தான், இந்த மரியாதை நிமித்தமான சந்திப்புங்கறது, நீங்க சொல்லித்தான் தெரியணுங்கற அவசியமில்லே; மக்களே புரிஞ்சுக்குவாங்கங்கறதுல, 'டவுட்'டே இல்லே!

புதிய தமிழகம் கட்சித் தலைவர், கிருஷ்ணசாமி: இந்திய அளவில் மாற்றம் வேண்டும் என, ஜெயலலிதா நினைக்கிறார்; பேசுகிறார். தமிழகத்திலேயே, அவரால் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாதபோது, எப்படி இந்திய அளவில் மாற்றத்தை உருவாக்க முடியும்?
டவுட் தனபாலு: 'ஜெயலலிதாவால் தான், மாற்றத்தை கொண்டு வர முடியும்'னு, சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் முழங்கியதை நீங்க மறந்துட்டீங்களா... 'சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னாடி, என்னை சீந்தக்கூட மாட்டேங்குறாங்க'ங்குற விரக்தியில் இருக்கீங்க என்பது, 'டவுட்'டே இல்லாமத் தெரியுது...!

More Hot News Click Here...


பக்க வாத்தியம் - www.tnfinds.com - Best site in the world...

பக்க வாத்தியம்

எல்லாரையும் 'கவர்' பண்ணுங்க!

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின், முன்னோடி திட்டங்கள் குறித்து, கால்நடைத் துறை அமைச்சர், சின்னையா தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில், விவாதிக்கப்படும் திட்டங்கள் குறித்து, செய்தி மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக, பத்திரிகையாளர்கள் சென்றனர்; அனுமதி மறுக்கப்பட்டது.பின், அமைச்சர் பேசும் போது, 'அனைத்து பத்திரிகையாளர்களும், உள்ளே செல்லலாம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளே சென்ற பத்திரிகையாளர்கள், அமைச்சரை புகைப்படம் எடுத்தனர். அப்போது, கால்நடைத் துறை அமைச்சர் சின்னையா, 'அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும், 'கவர்' பண்ணி, படம் எடுங்கள்' என்றார்.இதைக் கேட்ட அரசு அதிகாரிகள் சிலர், 'பத்திரிகைகளில் வரும் படங்களில், இடம் பெறாத, எம்.எல்.ஏ.,க்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என, முதல்வர், கட்சியை விட்டு துாக்கிடுவாங்க போலிருக்கு... அதான், அமைச்சர், பயந்து போய், அனைவரையும், 'கவர்' பண்ணுங்க'ன்னு சொல்றாரு...' என்றனர்.
இதைக் கேட்ட மூத்த நிருபர்கள் சிலர், சிரித்து விட்டுச் சென்றனர்.

அலட்சியப்படுத்திய அதிகாரிகள் வறுத்தெடுத்த பெரியவர்!

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, ஒரு ரேஷன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதி, சமீபத்தில் துவக்கி வைத்தார். சென்னை மேயர், சைதை துரைசாமி, கலெக்டர் சுந்தரவள்ளி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.விழா முடியும் முன்னரே, மேயர் துரைசாமி மேடையை விட்டு இறங்கினார். அப்போது, தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின், 'பாரத பாக்ய விதாதா' என்ற வரியில் இருந்து, தேசிய கீதம் மீண்டும் ஒலிபரப்பப்பட்டது. மேடையில் இருந்த அமைச்சர் உட்பட, யாரும் இதை கண்டு கொள்ளவில்லை.கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர், 'அரசு விழாவுல, அரசியல்வாதிகள் மட்டுமில்லாம, அதிகாரிகளும் கூட, தேசிய கீதத்தை, இப்படி அலட்சியம் செய்றாங்களே... இந்த அதிகாரிங்களோட, 'சீட்'டை கிழிக்க, சட்டம் வரணும்...' என, கோபத்தில் கொப்பளிக்க, அவ்வழியே வந்த அரசு அதிகாரி ஒருவர், பெரியவரின் பேச்சைக் கேட்டு பயந்து, அப்படியே, 'ரிவர்ஸ்' எடுத்து, வந்த வழியே, அசடு வழியச் சென்றார்.

More Hot News Click Here...

ஜில்லா- விமர்சனம் - www.tnfinds.com -Best Site In the World


ஜில்லா- விமர்சனம்

நடிப்பு - விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, மகத், சம்பத், பூர்ணிமா ஜெயராம் 

இசை - டி இமான் 

ஒளிப்பதிவு - கணேஷ் ராஜவேலு 

தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி 

இயக்கம் - ஆர்டி நேசன் 

ஆக்ஷன் கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஆனால் அதற்காக இப்படியா? என்ற கேட்க வைக்கிற, கற்பனையை தோற்கடிக்கும் போலீஸ் ஸ்டோரி, விஜய் - மோகன்லால் நடித்துள்ள ஜில்லா. 

மதுரையின் அசைக்கமுடியாத தாதா மோகன்லால். தன்னை எதிர்க்க வேண்டும் என்ற நினைக்கு ஒருவனுக்கு எழுந்தாலே அவனை அழித்துவிடும் சிவன்.



(ஜில்லா படங்கள்) 

அவரது வளர்ப்பு மகன்தான் விஜய். தன் ஒரிஜினல் அப்பாவை கண்ணெதிரிலேயே போலீஸ் சுட்டுக் கொன்றதைப் பார்த்த பிறகு, காக்கிச் சட்டை என்றாலே மகா வெறுப்பு.. எந்த அளவு தெரியுமா, தான் விழுந்து விழுந்து காதலிப்பவள் ஒரு போலீஸ் என்று தெரிந்ததும், அவளைக் கைகழுவும் அளவுக்கு. ஆனால் சூழ்நிலை, விஜய்யை காக்கிச் சட்டை போட வைக்கிறது. தன் அப்பாவுக்கு சாதகமான போலீசாக ஜாலியாக சுற்றும் விஜய், ஒரு கோர விபத்தைப் பார்த்த பிறகு அப்பாவின் தாதாயிசத்தை அடியோடு ஒழிக்க முடிவு கட்டுகிறார். மோகன்லாலுக்கும் விஜய்க்கும் இடையில் யுத்தம் ஆரம்பிக்கிறது... அது எப்படி முடிவுக்கு வருகிறது என்பதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள். பல லாஜிக் ஓட்டைகளில் சிக்கித் தவிக்கும் இந்தப் படத்தை கொஞ்சமேனும் காப்பாற்றுபவர்கள் இருவர்.. ஒருவர் விஜய். அடுத்தவர், சந்தேகமென்ன.. மோகன்லால்தான். இந்த இருவரையும் பார்ப்பதற்காக மட்டும்தான் கடைசி வரை இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது.


அதிலும் விஜய்... அல்டிமேட். இந்தப் படத்தில் தன் உடல் மொழியை மொத்தமாக மாற்றியிருக்கிறார் (ஆனால் அந்த வசன உச்சரிப்பு, சொதப்பிபைய்ங்!). சுழன்று சுழன்று அடிக்கும் அந்த சண்டைக் காட்சி, கற்பூரம் மாதிரி அடுத்து நடப்பதை யூகித்து வியூகம் வகுக்கும் மின்னல் வேகம்... என மாஸ் ஹீரோவுக்கான அத்தனை விஷயங்களையும் சர்வ சாதாரணமாய் செய்கிறார். அந்த கண்டாங்கி கண்டாங்கி பாடலில் விஜய் மனசை அள்ளுகிறார்... ஷங்கர் ஸ்டைல் பிரமாண்டம், அழகு... காஜலும், அந்த அட்டகாச லொகேஷனும் கூடத்தான்! சினிமாக்காரர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளான கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸுக்கெல்லாம் அர்த்தம் தெரியணும்னா... இந்தப் பாட்டைப் பார்க்கலாம்! மோகன் லால் கம்பீரமாக வருகிறார். மகனோடு விளையாடும் காட்சியிலும் சரி, மோதும் காட்சியிலும் சரி... மகா இயல்பு. ஆனால் இந்த மாபெரும் கலைஞனை, ஏதோ கோயில் யானையைப் போல ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் கட்டி முடக்கிவிட்டது போலத்தான் காட்சிகள் அமைந்துள்ளன. சும்மா சும்மா அவர் உறுமிக் கொண்டே இருந்தால் போதுமா... அவர் பலத்தை, புத்திசாலித்தனத்தைக் காட்டும் காட்சி, அட்லீஸ்ட் ஒன்றாவது வேண்டாமா?


இவருக்கு என்ன சிக்கலென்றாலும், அதைத் தீர்க்க விஜய் மட்டும்தான் வரவேண்டியிருக்கிறது. இது மோகன்லால் பாத்திரத்தை டம்மியாக்குகிறதே! துப்பாக்கிக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாகியிருக்கிறார் காஜல். கண்டாங்கி கண்டாங்கி பாடல், அந்த என்சிசி கேம்ப், அப்புறம் இரண்டு 'பேக் டு பேக்' மசாஜ் காட்சிகளில் மட்டும் மனசில் நிற்கிறார். மற்ற காட்சிகளில் முகத்தில் ஒரு முதிர்ச்சி.. அவரை விட விஜய் இளமையாகத் தெரிகிறார்! சூரிக்கு படம் முழுக்க வரும் காமெடியன் வேடம். ஆனால் அடிக்கடி முன்பக்கத்தில் அடிவாங்கி, வாயில் புகைவிடும் பரிதாப கேரக்டர். அவரது வேலையையும் விஜய்யே செய்துவிடுவதால், இவர் சும்மா வந்து போக வேண்டியுள்ளது. பூர்ணிமா பாக்யராஜ், இறுதிவரை ஒரு நல்ல அம்மாவாக வருகிறார். பெறாத மகன் என்றாலும் கடைசி வரை மாறாத பாசம் காட்டி மனதில் பதிகிறார். அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு பூர்ணிமா என்ற 'நல்ல அம்மாவை' தொடர்ந்து திரையில் பார்த்து நெகிழலாம். இப்படி ரசிக்கும்படியான காட்சிகள், திறமையான கலைஞர்களின் பங்களிப்பு இருந்தாலும்... மோசமான ஓட்டைகள் நிறைந்ததாக உள்ளது ஜில்லா.


ஒரு நேர்மையான கமிஷனர்... அவர் கையை நடுரோட்டில் வெட்டுகிறார் ரவுடியான விஜய். அவரை போலீஸ் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் அவரோ, ஜாலியாக போலீஸ் ஆகிறார். யாரை வெட்டினாரோ அவர் மூலம் பதவி உயர்வே பெறுகிறார்! ஒரே நேரத்தில் தந்தையைப் பறிகொடுத்த விஜய்யும் சம்பத்தும் மோகன்லால் வீட்டில் வளர்கிறார்கள். இளமையில் ஒரே வயதுக்காரர்களாய் இருக்கும் இவர்கள் வளர்ந்த பிறகு, சம்பத்துக்கு மட்டும் அவ்வளவு வயசாகிவிடுவது எப்படி என்று புரியவில்லை. என்னதான் மோசமான தாதாவாக இருந்தாலும், பெற்ற மகனை (மகன்) ஏவி நகரம் முழுக்க வன்முறையைத் தூண்டை வைப்பாரா.. அதுவும் அத்தனை சேனல்களிலும் பப்பரப்பே என படமெடுத்து வெளியிடும் அளவுக்கு? அடுத்தடுத்து இரண்டு டூயட்டுகள். அதில் ஒன்று ரசிக்க வைத்தாலும், அடுத்த பாடலில் (எப்ப மாமா ட்ரீட்), நடனத்தில் இணையற்ற விஜய்யை கேவலமாக, ஏதோ உடற்பயிற்சி செய்ய வைப்பது போல், ஆட வைத்து கடுப்பேற்றியிருக்கிறார் இயக்குநர் நேசன். அதை மன்னிக்கவே முடியாது!


3 மணி நேரம் படத்தை இழுப்பது இன்னொரு கொடுமை. இந்தப் படத்தை இரண்டே கால் மணி நேரத்துக்குள் சுருக்கியிருக்க முடியும். எடிட்டர் டான் மேக்ஸ் தூங்கிவிட்டார் போலிருக்கிறது. ஆர்கேவை வீணடித்திருக்கிறார்கள். அவரை வைத்து இன்னும் சுவாரஸ்யமான இரு காட்சிகளை வைத்திருக்கலாம், தனக்குக் கிடைத்திருக்கிற வாய்ப்பு எப்பேர்ப்பட்ட மகத்தானதென்ற நினைப்பு இயக்குநருக்கு இருந்திருந்தால்! விஜய்யின் தம்பி, தங்கையாக வரும் மகத், நிவேதிதா இருவரும் விஜய்க்கு ஆகாதவர்களைப் போல காட்டிவிட்டு, திடீரென்று இருவருக்கும் அவர் மீது பாசம் பொங்குவது எடுபடவில்லை. கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. அந்த நெடுஞ்சாலைக் காட்சிகள் பிரமாண்டமாக உள்ளது. கண்டாங்கி கண்டாங்கி பாடலில் வண்ணமயம். இமானின் இசையும் அந்தப் பாட்டில்தான் ஓஹோ. மற்றவற்றில் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், தலைவாவோடு ஒப்பிடுகையில் 100 சதவீதம் பார்க்கலாம் ரக படமே. பொங்கல் லீவில் வெட்டு வெட்டென்று உட்கார்ந்திருப்பதை விட அல்லது மொக்கையான டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு, இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம் (இப்போது 10 நிமிட காட்சிகளை தூக்கிவிட்டார்களாம்)!

More Hot News Click Here...







ஜில்லா, வீரம் வெளியீடு... கடும் ட்ராபிக்கால் சென்னையில் வாகன ஓட்டிகள் அவதி! - www.tnfinds.com - Best Site In The World


ஜில்லா, வீரம் வெளியீடு... கடும் ட்ராபிக்கால் சென்னையில் வாகன ஓட்டிகள் அவதி!


சென்னை: 


ஜில்லா, வீரம் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானதால் சென்னையில் கிண்டி கத்திப்பாரா தொடங்கி கே கே நகர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜில்லா மற்றும் வீரம் ஆகிய இரு படங்களும் சென்னை மற்றும் புறநகர்களில் ஏராளமான அரங்குகளில் வெளியாகின. சென்னை அண்ணா சாலையின் தென்பகுதியான கிண்டி கத்திப்பாராவில் உள்ள ஜோதி திரையரங்கில் இரு படங்களுமே வெளியிடப்பட்டுள்ளன.


அடுத்து இரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காசி திரையரங்கில் ஜில்லா திரையிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து சில மீட்டர் தூரத்தில் உள்ள உதயம் காம்ப்ளெக்சில் ஜில்லா, வீரம் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இந்த மூன்று அரங்குகளுமே கிட்டத்தட்ட நெடுஞ்சாலையில் உள்ளன. இந்தப் படங்களுக்கு அதிகாலையிலிருந்தே சிறப்புக் காட்சிகள் போடப்பட்டதால், விஜய், அஜீத் ரசிகர்கள் திரண்டு வந்து மேள தாளம், பாலாபிஷேகத்தோடு முதல் காட்சி பார்த்தனர். சாலைகளில் பட்டாசுகள் கொளுத்தினர். சாலையை அடைத்துக் கொண்டு ரசிகர்கள் நின்றதால் காலையில் 11 மணி வரை இந்த சாலை திணறியது.


More Hot News Click Here...







டீ கடை பெஞ்சு - www.tnfinds.com- Best site in the world...

டீ கடை பெஞ்சு

வருத்தத்தில் 'வருவாய்' துறையினர்!

''மதுரையில, போஸ்டர் கலாசாரம், என்னைக்கு தான் ஓயப் போகுதோ தெரியலை பா...'' என்ற அன்வர்பாய், வடையை எடுத்து கடித்தபடி, பெஞ்சில் வந்தமர்ந்தார்.
''எந்தக் கட்சியை சொல்றீங்க... 'யாரை' சொல்றீங்க... கொஞ்சம் விவரமா தான் சொல்லுங்க...'' என, ஆர்வமாய் கேட்டார், அந்தோணிசாமி.

''இது கட்சிக்காரங்க மேட்டர் இல்லை பா... மதுரை காமராஜ் பல்கலையிலும், கட்சிக்காரங்க மாதிரியே, போஸ்டர் கலாசாரம், தொற்றியிருக்கு... இப்போதைக்கு, இந்த விஷயம் தான், மதுரையில, சுவாரசியமா பேசப்படுது...

''துணைவேந்தரை பாராட்டி, 'தாயே... பெண்ணரசியே... அம்மாவே...' அப்படின்னு, அரசியல்வாதியை துதி பாடும், 'ரேஞ்சு'க்கு, பல்கலையை சுற்றியுள்ள சுவர்களில், அடிக்கடி போஸ்டர்கள் மின்னுது பா...

''இதெல்லாம், துணைவேந்தருக்கு தெரியாமலா நடக்கும் வே...'' என, பெரியசாமி அண்ணாச்சி இடைமறிக்க, ''தெரியாம எப்படிப்பா இருக்கும்... 'வேறு ஏதாவது இடமா இருந்தா கூட பரவாயில்லை... பல்கலையை சுற்றி தேவையா... கல்விக் கூடங்களில், இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்காம, துணைவேந்தர், 'தடா' போடணும்'னு, கல்வியாளர்கள் விரும்புறாங்க பா...'' என விவரித்தார் அன்வர்பாய்.

''வருவாய்த் துறை அதிகாரிகளும், போலீசாரும் புலம்புதாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.

''ஏங்க... பொங்கல் போனஸ் இன்னும் கிடைக்கலியாமா...'' என, இடைமறி்த்தார் அந்தோணிசாமி.

''அது இல்லை வே... ரேஷன் அரிசியை, யாரும் ஆந்திராவுக்கு கடத்துறது இல்லையாம்... அதான் புலம்புதாவ...'' என்ற அண்ணாச்சி, தொடர்ந்து, ''திருவள்ளூர் மாவட்டத்துல இருந்து தான், அதிகளவுல, ரேஷன் அரிசியை, ஆந்திராவுக்கு கடத்துதாவ...

''ரெண்டு மாசமா, கடத்தல் குறைஞ்சிடுச்சு... குறிப்பா, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுக்காவில் இருந்து, கடந்த ரெண்டு மாசமா, யாருமே, ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தலை...

''ஏன்னா, நகரி, புத்துார் பகுதிகள்ல, ரேஷன் அரிசியை வாங்குற முதலாளிகள், இப்போ, ஜெயில்ல இருக்காவ...

''ரேஷன் கடத்தலில் ஈடுபடும் பெண்களும், வியாபாரிகளும், ரெண்டு மாசமா, வீட்டில ஓய்வு எடுக்காவ...

''இதனால, 'வருவாய்' பாதிக்கப்பட்ட, வருவாய்த் துறை ஊழியர்களும், போலீசாரும் கவலைல இருக்காவ... கடத்தல்காரங்ககிட்ட, 'மீண்டும் எப்போ, தொழிலை ஆரம்பிக்கப் போறீங்க?'னு, கேக்காவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி. ''வேற ஒண்ணும் விஷயமில்லையே பா...'' என்ற அன்வர்பாய், ''நான் கிளம்பறேன்...'' என்றபடி, நடையைக் கட்டினார். மற்ற நண்பர்களும் கிளம்பவே, பெஞ்ச் அமைதியானது.

More Hot News Click Here..

இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் ஜில்லாவுக்குதான்!- ஆர்பி சவுத்ரி - www.tnfinds.com - Best Site In The World


இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் ஜில்லாவுக்குதான்!- ஆர்பி சவுத்ரி

சென்னை: 


விஜய் நடித்த படங்களிலேயே அதிக ஆரம்ப வசூல் விஜய் நடித்த ஜில்லா படத்துக்குத்தான் என்று தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி தெரிவித்தார். ஜில்லா படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்கள் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியும் இயக்குநர் ஆர் டி நேசனும்.


படத்தின் ரிசல்ட் குறித்து ஆர்பி சவுத்ரி கூறுகையில், "படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை வெளியான விஜய்யின் படங்களிலேயே மிகப் பெரிய ஆரம்ப வசூல் ஜில்லாவுக்குக் கிடைத்துள்ளது என்னை பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜில்லா மட்டுமல்ல, உடன் வெளியான அஜீத்தின் படமும் வெற்றியடைந்துள்ளது ஒரு தயாரிப்பாளராக என்னை சந்தோஷப்பட வைத்துள்ளது. ஆரம்ப காலங்களில் தியேட்டர் விசிட் போவேன். பின்னர் போவதை விட்டுவிட்டேன். ஆனால் 85 படம் எடுத்த பிறகு இப்போது இந்தப் படத்துக்கு ரசிகர்கள் செய்திருந்த ஏற்பாடுகளுக்காக போயிருந்தேன். அதிகாலையிலேயே அவ்வளவு பேர் திரண்டு வந்திருந்தனர். அந்த காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கும் போவதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல... கேரளாவில் நேரடி மலையாளப் படங்களை மிஞ்சும் அளவுக்கு நேற்று வசூல். எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்," என்றார்.


More Hot click here...




மாணவர்கள் ஆயுதம் எடுத்தால் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுப்பார்கள் - www.tnfinds.com - Best site in the world....

மாணவர்கள் ஆயுதம் எடுத்தால் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுப்பார்கள்

சிவகங்கை : "மாணவர்கள் கத்தி போன்ற ஆயுதம் எடுத்தால், ஆசிரியர்களும் துப்பாக்கி எடுக்க வேண்டிய சூழல் உருவாகும்,” என ஆங்கில மொழி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சேவியர் எச்சரித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பைரவ ரத்தினத்தை, பிளஸ்1 மாணவர், நேற்று முன்தினம் பாட்டிலால் தாக்கினார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் சில ஆசிரியர் கழகத்தினர் நேற்று சிவகங்கை சி.இ.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில், ஆங்கில மொழி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் சேவியர் பேசியதாவது:தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்கள் தாக்கப்படுகின்றனர். ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தர கல்வித்துறை தவறுகிறது. அரசியலை நாங்கள் தான் கற்றுத் தருகிறோம். எங்களுக்கும் 'ரவுடியிசம்' தெரியும். மாணவர்களை அடிக்கக்கூடாது என்றால், 'ரிசல்ட்' மட்டும் எதற்காக கேட்கிறீர்கள். திருப்புவனம் சம்பவத்திற்கு அங்குள்ள ஆசிரியர்கள் மட்டும் ஒருநாள் விடுப்பு எடுத்து வந்துள்ளனர். தலைமை ஆசிரியர் மட்டும் பணி செய்கிறார். பள்ளிக்கூடத்தை இழுத்து மூடியிருக்க வேண்டும்.கோழை, அடிமைத்தனம் ஆசிரியர்களுக்கு வேண்டாம். அரசின் இலவசம் என்ற பெயரில் செருப்புக்களை சுமக்கிறோம். பள்ளிக்கூடத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை எழுகிறது. மாணவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களை தூக்கினால், ஆசிரியர்களும் துப்பாக்கியை எடுக்கும் சூழல் உருவாகும், என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் சங்கம், ஆங்கில ஆசிரியர் கழகம், தமிழாசிரியர் கழகம், உயர், மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், வரலாறு ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் திருப்புவனம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த ஆசிரியர்களும் விடுப்பு எடுத்து பங்கேற்றனர். சி.இ.ஓ., கலெக்டரிடம் புகார் மனுக்கள் தரப்பட்டது.

More Hot News Click Here...