Saturday, January 11, 2014

'டவுட்' தனபாலு - www.tnfinds.com - Best site in the world...

'டவுட்' தனபாலு

மத்திய தலைமை வழக்கறிஞர், வாஹன்வதி: நிலங்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சில தவறுகள் நடந்திருப்பது உண்மையே; அரசின் கொள்கை முடிவு காரணமாக, விதிகள் தளர்த்தப்பட்டதும் உண்மை தான்.
டவுட் தனபாலு: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பான சி.பி.ஐ., விசாரணை அறிக்கையில் திருத்தம் நடந்துச்சு... முக்கிய ஆவணங்கள் மாயமாச்சு... இதை எல்லாம் சாக்குப்போக்கு சொல்லி, பிரதமரும், மத்திய அரசும் தட்டிக்கழிச்சாங்க... இப்ப ஒரு வழியா, ஒரு தவறை அரசு ஒப்புக்குச்சு... இனி, இன்னும் நிறைய பூதங்கள் வெளிவரும் என்பதில், 'டவுட்'டே இல்லை...!

காங்., மூத்த தலைவர், குலாம் நபி ஆசாத்: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்; கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.
டவுட் தனபாலு: 'கூட்டணியில் இருந்து, தி.மு.க., வெளியேறியதன் மூலம், காங்கிரசுக்கு இப்போது தான், சுதந்திரம் கிடைச்சு இருக்கு'ன்னு உங்க கட்சியின் மாநிலத் தலைவர்கள் பேசிட்டு வர்றாங்க... 'அது அப்படியில்லை; நீங்க இருந்தால் தான், எங்களுக்கு மரியாதை'ன்னு விளக்கறதுக்குத் தான், இந்த மரியாதை நிமித்தமான சந்திப்புங்கறது, நீங்க சொல்லித்தான் தெரியணுங்கற அவசியமில்லே; மக்களே புரிஞ்சுக்குவாங்கங்கறதுல, 'டவுட்'டே இல்லே!

புதிய தமிழகம் கட்சித் தலைவர், கிருஷ்ணசாமி: இந்திய அளவில் மாற்றம் வேண்டும் என, ஜெயலலிதா நினைக்கிறார்; பேசுகிறார். தமிழகத்திலேயே, அவரால் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாதபோது, எப்படி இந்திய அளவில் மாற்றத்தை உருவாக்க முடியும்?
டவுட் தனபாலு: 'ஜெயலலிதாவால் தான், மாற்றத்தை கொண்டு வர முடியும்'னு, சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் முழங்கியதை நீங்க மறந்துட்டீங்களா... 'சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னாடி, என்னை சீந்தக்கூட மாட்டேங்குறாங்க'ங்குற விரக்தியில் இருக்கீங்க என்பது, 'டவுட்'டே இல்லாமத் தெரியுது...!

More Hot News Click Here...


No comments: