Saturday, January 11, 2014

பக்க வாத்தியம் - www.tnfinds.com - Best site in the world...

பக்க வாத்தியம்

எல்லாரையும் 'கவர்' பண்ணுங்க!

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின், முன்னோடி திட்டங்கள் குறித்து, கால்நடைத் துறை அமைச்சர், சின்னையா தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில், விவாதிக்கப்படும் திட்டங்கள் குறித்து, செய்தி மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக, பத்திரிகையாளர்கள் சென்றனர்; அனுமதி மறுக்கப்பட்டது.பின், அமைச்சர் பேசும் போது, 'அனைத்து பத்திரிகையாளர்களும், உள்ளே செல்லலாம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளே சென்ற பத்திரிகையாளர்கள், அமைச்சரை புகைப்படம் எடுத்தனர். அப்போது, கால்நடைத் துறை அமைச்சர் சின்னையா, 'அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும், 'கவர்' பண்ணி, படம் எடுங்கள்' என்றார்.இதைக் கேட்ட அரசு அதிகாரிகள் சிலர், 'பத்திரிகைகளில் வரும் படங்களில், இடம் பெறாத, எம்.எல்.ஏ.,க்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என, முதல்வர், கட்சியை விட்டு துாக்கிடுவாங்க போலிருக்கு... அதான், அமைச்சர், பயந்து போய், அனைவரையும், 'கவர்' பண்ணுங்க'ன்னு சொல்றாரு...' என்றனர்.
இதைக் கேட்ட மூத்த நிருபர்கள் சிலர், சிரித்து விட்டுச் சென்றனர்.

அலட்சியப்படுத்திய அதிகாரிகள் வறுத்தெடுத்த பெரியவர்!

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, ஒரு ரேஷன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதி, சமீபத்தில் துவக்கி வைத்தார். சென்னை மேயர், சைதை துரைசாமி, கலெக்டர் சுந்தரவள்ளி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.விழா முடியும் முன்னரே, மேயர் துரைசாமி மேடையை விட்டு இறங்கினார். அப்போது, தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின், 'பாரத பாக்ய விதாதா' என்ற வரியில் இருந்து, தேசிய கீதம் மீண்டும் ஒலிபரப்பப்பட்டது. மேடையில் இருந்த அமைச்சர் உட்பட, யாரும் இதை கண்டு கொள்ளவில்லை.கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர், 'அரசு விழாவுல, அரசியல்வாதிகள் மட்டுமில்லாம, அதிகாரிகளும் கூட, தேசிய கீதத்தை, இப்படி அலட்சியம் செய்றாங்களே... இந்த அதிகாரிங்களோட, 'சீட்'டை கிழிக்க, சட்டம் வரணும்...' என, கோபத்தில் கொப்பளிக்க, அவ்வழியே வந்த அரசு அதிகாரி ஒருவர், பெரியவரின் பேச்சைக் கேட்டு பயந்து, அப்படியே, 'ரிவர்ஸ்' எடுத்து, வந்த வழியே, அசடு வழியச் சென்றார்.

More Hot News Click Here...

No comments: