Friday, January 10, 2014

பேச்சு, பேட்டி, அறிக்கை - www.tnfinds.com - Best site in the world....

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நம் பேச்சை, நம்ம கட்சிக்காரங்கக் கூட மதிக்க மாட்டேங்கிறாங்களே...' என்ற வேதனையில், காங்., பொதுச் செயலர், திக்விஜய் சிங் பேட்டி: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், தங்களை உயர்வானவர்கள் என, எண்ணிக் கொள்கின்றனர். மற்றவர்களின் கருத்துகளை, அவர்கள் கேட்பதே இல்லை.

'கோளாறாகிக் கிடக்கும் நம்ம மதிப்பை, எப்படி பேசினால் தூக்கி நிறுத்தலாம்' என்ற சிந்தனையில், தினமும் அறிக்கை வெளியிட்டாலும், அதனால் இந்த முறை பலன் ஏற்படப் போவதில்லை என்பது அறியாமல், தி.மு.க., தலைவர், கருணாநிதி அறிக்கை: பராமரிப்புப் பணியால், மத்திய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, முன்பு, மின் வினியோகம் குறைந்திருந்தது. மத்திய அரசும், தி.மு.க.,வும் சேர்ந்து, வேண்டுமென்றே மின் வினியோகத்தைக் குறைத்ததாக, ஜெயலலிதா பழி சுமத்தினார். தற்போது, பராமரிப்புப் பணி முடிந்து, தமிழகத்தின் மின் வினியோகம் அதிகரித்துள்ளது. தான் முதலில் கூறிய குற்றச்சாட்டு தவறு என, ஜெயலலிதா ஒப்புக் கொள்வாரா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் பேட்டி: வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., தலைமையில், அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் இணைந்த, வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும். இதில், தே.மு.தி.க.,வும் இடம்பெற வேண்டும். பலமான கூட்டணி அமைக்க, தி.மு.க., தலைமை எடுக்கும் முயற்சிக்கு, நாங்கள் துணை நிற்போம்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், வீரமணி பேச்சு: அரசு பள்ளி மாணவர்களின், தமிழ் வாசிப்புத்திறன் குறைந்திருப்பது, வேதனைக்குரியது. இத்தகைய மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் நாளிதழ்களை, மாணவர்கள் படித்தாலே, வாசிப்புத்திறன் நன்றாக வளரும். இதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர், சரத்குமார் பேட்டி: கடந்த தி.மு.க., ஆட்சியில், மின் உற்பத்திக்கான தொலைநோக்கு திட்டம் ஏதும் செயல்படுத்தப்படாததால், மின் பற்றாக்குறை ஏற்பட்டது. மத்திய அரசு, மின்தொகுப்பில் இருந்து, போதிய மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்காமல் வஞ்சித்தது. தற்போதைய ஆட்சியில், மின்உற்பத்தி, படிப்படியாக சீர் செய்யப்பட்டுள்ளது.

More Hot News Click Here..

No comments: