Sunday, November 3, 2013

‘டாஸ்மாக்’ கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள் கூட்டம்: தீபாவளியையொட்டி மது விற்பனை ரூ.330 கோடியை தாண்டியது - www.tnfinds.com - Best site in the World


‘டாஸ்மாக்’ கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள் கூட்டம்:
தீபாவளியையொட்டி மது விற்பனை ரூ.330 கோடியை தாண்டியது
கடந்த ஆண்டை விட ரூ.80 கோடி அதிகம்


 
சென்னை, நவ.4-தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. 3 நாட்களில் மட்டும் ரூ.330 கோடிக்கு மேல் மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.80 கோடி அதிகம் ஆகும்.மதுபிரியர்கள் கொண்டாட்டம்தமிழகத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 696 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 450-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.67 கோடிக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் ரூ.90 கோடிக்கு மேலும் மது விற்பனையாகி வருகிறது.பண்டிகை காலங்கள் என்றால் மதுப்பிரியர்களுக்கு மனதில் கூடுதல் உற்சாகம் பிறந்து விடுகிறது. நண்பர்கள், உறவினர்களுடன் மது அருந்தி பண்டிகைகளை கொண்டாடுவதை விரும்புகிறார்கள்.இதனால் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது டாஸ்மாக் கடைகளில், ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க வரிசையில் நிற்பதை போன்று மதுபிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி செல்வதை பார்க்க முடியும்.ரூ.330 கோடிக்கு விற்பனைபண்டிகை நாட்களில் மதுபிரியர்கள் ஓட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளை நோக்கி படை எடுப்பதால் ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.330 கோடிக்கு மேல் மது வகைகள் விற்பனையாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் சுமார் ரூ.43 கோடி மது விற்பனையாகி உள்ளது. தீபாவளி பண்டிகை அன்று மட்டும் ரூ.150 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது.பிராந்தி ரூ.200 கோடிக்கு விற்பனைகடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, தமிழகத்தில் ரூ.250 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மது விற்பனை ரூ.80 கோடி அதிகரித்து உள்ளது. தீபாவளி பண்டிகை மது விற்பனையில், பிராந்தி மது வகைகள் மட்டும் ரூ.200 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. பீர் சுமார் ரூ.50 கோடிக்கும், ரம், விஸ்கி, வோட்கா போன்ற மற்ற மதுபான வகைகள் ரூ.70 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது. 


More News Click here................ 

No comments: