Sunday, November 3, 2013


வேன் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை-மகள் உள்பட 4 பேர் சாவு
கோவிலுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
தர்மபுரி, நவ.4-கோவிலுக்கு சென்று திரும்பிய போது வேன் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை-மகள் உள்பட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.ஆன்மிக சுற்றுலாகோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது61). வியாபாரியான இவர் தீபாவளி பண்டிகையையொட்டி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 15 பேருடன் ஆன்மிக சுற்றுலா சென்றார். அவர்கள் சென்ற வேனை பரமசிவம் (36) என்பவர் ஓட்டி சென்றார்.திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலை தர்மபுரி அருகே உள்ள மேல்மாட்டுக்கானூர் என்ற இடத்தில் வந்த போது திடீரென வேனின் டயர் பஞ்சரானது. இதனால் அதன் டிரைவர் பரமசிவம் வேனை நிறுத்தி டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.4 பேர் சாவுஅப்போது ஆந்திராவில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்த லாரி ரோட்டில் நின்றிருந்த வேனில் பின்புறம் பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் வேன் 25 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இந்த விபத்தில் வேனின் பின்புறம் நொறுங்கியது. இந்த விபத்தில் கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த வேன் டிரைவர் பரமசிவம், திருப்பூர் மங்களம் காலனியை சேர்ந்த கமலநாதன்(34), தாராபுரத்தை சேர்ந்த மோகன்(52), இவரது மகள் ஐஸ்வர்யா(18) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 


விபத்தில் இறந்த ஐஸ்வர்யா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். 8 பேர் படுகாயம்மேலும் இந்த விபத்தில் திருப்பூரை சேர்ந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியை சேலம் மாவட்டம் காமலாபுரம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். அரியானாவை சேர்ந்த டிரைவர் ஜிலேசிங்(53), கிளீனர் பவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

More News Click Here................ 

No comments: