Friday, November 22, 2013

ஒரு சச்சினை வீட்டுக்கு அனுப்பிட்டு இன்னொரு சச்சினை நாட்டுக்கு அனுப்பிய 'கடவுள்'...! - www.tnfinds.com - Best Site in the World

ஒரு சச்சினை வீட்டுக்கு அனுப்பிட்டு இன்னொரு சச்சினை நாட்டுக்கு அனுப்பிய 'கடவுள்'...!

கவாஸ்கர் போனபோது நிறையப் பேர் கவலைப்பட்டார்கள். ஆனால் சச்சின் வந்து சேர்ந்தார். இப்போது சச்சின் போனபோதும் நிறையப் பேர் பெரும் கவலையுடன்தான் இருக்கிறார்கள். ஆனால்.. தோ... வந்தே விட்டார் அடுத்த சச்சின்.
15 வயதேயான பிருத்வி ஷா கிரிக்கெட்டில் பின்னி எடுக்கிறார். படு அதிரடியாக ஆடும் இந்தப் பொடியர், மும்பையில் நடந்த ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் 546 ரன்களைக் குவித்து அத்தனை பேரையும் விழி விரிய வைத்துள்ளார்.
வருங்கால சச்சின் என்றே பலரும் இவரைக் கூப்பிட ஆரம்பித்து விட்டனர்.


 பிருத்வி ஷா ஏற்கனவே மும்பையில் பிரபலமான பொடியர்தான். இவரது பேட்டிங் ஏற்கனே சிலாகிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் அவர் அதிரடியாக 546 ரன்களைக் குவித்த அத்தனை பேரையும் அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து்ளது.

ஹாரிஸ் ஷீல்டு தொடரில் இதுவரை ஒரு வீரர் குவித்த தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதானாம். இதற்கு முன்பு அர்மான் ஜாபர் என்பவர் 473 ரன்களைக் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

பிருத்வி, 16 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணியின் கேப்டானாகவும் உருவெடுத்துள்ளார்.

பிருத்வி பேட்டிங்கில் பின்னி எடுத்ததை மைதானத்தில் கூடியிருந்தோர் வியப்புடன் பார்த்து ரசித்தனர். மொத்தம் 85 பவுண்டரிகளை விளாசினார் பிருத்வி.

மொத்தம் 367 நிமிடங்கள் ஆடி, 330 பந்துகளைச் சந்தித்து, 85 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 546 ரன்களைக் குவித்து அவுட்டானார் பிருத்வி.

பிருத்வி, இங்கிலாந்திலும் ஆடியுள்ளாராம். அங்கு கிளவுசெஸ்டர்ஷயர் 2 அணிக்காக ஆடியுள்ளார்.
பிருத்விக்கு 16 வயது வரும்போதுதான் தெரியும்.. அவருக்கு ராசி இருக்கிறதா என்று.. சச்சினுக்குக் கூட 16 வயதில்தானே இந்திய அணியில் இடம் கிடைத்தது.

More News Click Here............. 


No comments: