Wednesday, November 6, 2013

கூகுள் கூகுள், வாங்கண்ணா வணக்கங்கண்ணா..அடுத்த நெக்ஸ்ட் ....! - www.tnfinds.com - Best site in the World

கூகுள் கூகுள், வாங்கண்ணா வணக்கங்கண்ணா..அடுத்த நெக்ஸ்ட் ....!


விஜய் ஜில்லா படத்தில் படத்தில் கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலை பாடியுள்ளார். கூகுள், வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலையும் ஹிட்டாக்க கிளம்பியுள்ளார் விஜய். மேற்சொன்ன இரு பாடல்களுமே விஜய் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானவை. குறிப்பாக குழந்தைகளின் வாய்களில் இந்தப் பாடல்கள்தான் புழங்கிக் கொண்டிருக்கின்றன. இப்போது கண்டாங்கி சேருகிறது.

பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

 
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கிறது. பட வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார். அந்த பாடலுக்கு கண்டாங்கி கண்டாங்கி என்று பெயர் வைத்துள்ளனர்.

முன்னதாக துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடல், அதைத் தொடர்ந்து தலைவாவில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் ஆகியவற்றை விஜய் பாடியிருந்தார்.

அந்த இரு பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கண்டாங்கி கண்டாங்கி பாடலும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: