Saturday, November 16, 2013

சச்சின்.. சச்சின் என்ற வாழ்த்து மூச்சு நிற்கும் வரை காதில் ஒலிக்கும்: பிரிவுரையில் டெண்டுல்கர் - www.tnfinds.com - Best site in the World

சச்சின்.. சச்சின் என்ற வாழ்த்து மூச்சு நிற்கும் வரை காதில் ஒலிக்கும்: பிரிவுரையில் டெண்டுல்கர்

சச்சின்..சச்சின் என்ற ரசிகர்களின் வாழ்த்து எப்போதும் தமது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறும் டெண்டுல்கர் உருக்கமாக பேசினார்.
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் இன்றைய போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டார். மும்பை வாங்கடே மைதானத்தில் போட்டி முடிந்த பின்னரும் ரசிகர்கள் அனைவரும் சச்சினுக்காகவே அரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர்.
 நான் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறேன். 24 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை நிறைவு பெறுவது என்பதை நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் யார் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என்பதை ஒரு பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். சிலரது பெயர்கள் விடுபட்டு போயிருந்தால் என்னை மன்னிக்கவும்.
முதலில் என் தந்தையை பற்றி சொல்ல வேண்டும். அவர் 1999ஆம் ஆண்டு காலமானார். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அவருக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. அவர் எனக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார். அவர் ஒரு சிறந்த மனிதராக என்னை உருவாக்கினார். என் உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டவர் என் அம்மா. என் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே எனக்காகவே பிரார்த்திப்பார். அத்தகைய பிரார்த்தனைகளே எனக்கு பலம்.
என்னுடைய சகோதரிதான் எனக்கு முதலில் பேட் வாங்கிக் கொடுத்தார். சகோதர் அஜித்தான் என்னை பயிற்சியாளரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். நேற்று இரவு அவர் என்னிடம் நான் அவுட் ஆனது பற்றி பேசினார்.
1991ஆம் ஆண்டு என் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு. என் மனைவி அஞ்சலியை அப்போதுதான் சந்தித்தேன். அவர் மருத்துவராக இருந்தார். நாங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்த போது நீங்கள் விளையாட்டை பாருங்கள்..நான் வீட்டை பார்த்துக் கொள்கிறேன் என்றார். அவர் அப்படி சொல்லவில்லையெனில் நான் நீண்டகாலம் விளையாடியிருக்க முடியாது.
என் வாழ்க்கையின் இரு வைரங்களாக மகள் சாரா, மகன் அர்ஜூன் இருக்கின்றனர். அவர்கள்து பிறந்தநாட்களில் நான் இருந்ததில்லை. ஆனால் அவர்கள் என்னை புரிந்து கொண்டதற்காக நன்றி.
இந்த மைதானத்தில்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. அப்போதெல்லாம் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. என்னுடைய 16 வயதில் இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை தேர்வு செய்தது. எனக்கு சுதந்திரம் கொடுத்த கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி.
நான் மூத்த வீரர்கள் பலருடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். அவர்கள் எனக்கு பலவகைகளில் உதவியிருக்கின்றனர். ராகுல் டிராவிட், லக்ஸ்மன், கங்குலி போன்ற சக வீரர்களை நான் எனது குடும்பமாகவே பார்க்கிறேன். ஓய்வு அறையில் உங்களுடன் பகிர்ந்து கொண்டதை மறக்க இயலாது.
200வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு டோணி எனக்கு தொப்பி வழங்கினார். நீங்கள் நாட்டுக்காக தொடர்ந்து வெற்றிகரமாக விளையாடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் உட்பட என் மீது அக்கறை கொண்ட அனைவருக்குமே நான் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய நண்பர் மார்க்தான் என் முதல் மேனேஜர்.. அவர் இல்லாமல் இருந்தால் நான் சாதித்திருக்க முடியாது. அவர் இப்போது இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
 அதேபோல் மேனேஜர் வினோ நாயுடு என்னுடைய குடும்பத்தில் ஒருவர். அவர் தமது குடும்பத்தை விட்டு பெரும்பாலும் என்னுடனேயே இருப்பார். நான் 0 ரன் எடுத்த போதும் 100 ரன் எடுத்தபோதும் எப்போது என்னை ஆதரித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.
குறிப்பாக சச்சின்...சச்சின் என்ற உங்கள் வாழ்த்தொலி என் மூச்சு உள்ளவரை என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். நான் ஏதேனும் சொல்லாமல் விட்டிருந்தால் வருந்துகிறேன். குட்பை!
இவ்வாறு சச்சின் உரையாற்றினார்.

More News Click Here.............. 




No comments: