Sunday, November 3, 2013

ஏற்காடு சட்டசபை தொகுதியில் காரில் ரூ.41¾ லட்சத்துடன் பாத்திர வியாபாரி சிக்கினார் - www.tnfinds.com - Best site in the World


ஏற்காடு சட்டசபை தொகுதியில்
காரில் ரூ.41¾ லட்சத்துடன் பாத்திர வியாபாரி சிக்கினார்
சேலம், நவ.4-ஏற்காடு சட்டசபை தொகுதியில் நடந்த வாகன சோதனையில் காரில் ரூ.41¾ லட்சத்துடன் சென்ற பாத்திர வியாபாரி சிக்கினார்.தேர்தல் விதிகள் அமல்ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் டிசம்பர் 4-ந்தேதி இடைத்தேர்தல் நடப்பதால் தொகுதி முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. வாக்காளர்களுக்கு இலவச பரிசு பொருட்கள் மற்றும் பணம் எடுத்துச் செல்லப்படுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் பறக்கும் படை, கண்காணிப்புக்குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.ரூ.50 ஆயிரத்துக்கு மேல்ஏற்காடு தொகுதிக்குள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால், அது வாக்காளர்களை முறையற்ற விதத்தில் தூண்டும் நோக்கில் எடுத்துச் செல்லப்படுவதாக கருதப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் மகரபூஷணம் எச்சரித்துள்ளார்.ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணத்தை எடுத்து செல்லும்போது அதற்கான ஆவணங்கள், ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் என்றும், உரிய ஆவணங்கள் இல்லையெனில் அப்பணம் கைப்பற்றப்படும் என்றும், பணத்தை எடுத்துச் செல்லும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.ரூ.41¾ லட்சம் சிக்கியதுநேற்று முன்தினம் தனிப்படையினர் ஏற்காடு தொகுதிக்குட்பட்ட ஆச்சாங்குட்டப்பட்டி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக அரூரில் இருந்து திருப்பூர் சென்ற காரை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் திருப்பூரை சேர்ந்த ராமசுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் இருந்தனர். அப்போது ராமசுந்தரத்திடம் 1000 ரூபாய் கட்டுகள், 500 ரூபாய் கட்டுகள் என மொத்தம் ரூ.41 லட்சத்து 74 ஆயிரத்து 700 இருந்தது தெரியவந்தது. விசாரணையில், ராமசுந்தரம் திருப்பூரில் பாத்திரக்கடை நடத்தி வருவதும், அரூர், திருப்பத்தூர் போன்ற ஊர்களில் பாத்திரம் விற்றதற்கான பணத்தை வசூல் செய்துவிட்டு திரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால், அதற்கான ஆவணம் எதுவும் இல்லாததால் பணமும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக தொகை இதுதான்ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட அதிக தொகை இதுதான். இதுவரை மொத்தம் ரூ.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


More News Click here................. 

No comments: