Wednesday, November 6, 2013

4 பெட்டிகளுடன் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்.. ஜெ. தொடங்கி வைத்தார் - www.tnfinds.com - Best site in the World

4 பெட்டிகளுடன் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்.. ஜெ. தொடங்கி வைத்தார்

4 பெட்டிகளுடன் இன்று சென்னையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள பணிமனையில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஜெயலலிதா வருகை தந்ததால் அவரைக் காணவும், சோதனை ஓட்டத்தைக் காணவும் பெருமளவில் மக்கள் திரண்டு விட்டனர். ஆனால் யாரும் பணிமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. 800 மீட்டர் தூரத்திற்கு சோதனை ரயில் ஓட்டிப் பார்க்கப்பட்டது. 4 பெட்டிகளுடன் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்.. ஜெ. தொடங்கி வைத்தார் சென்னையில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக்கு குறைக்கும் வகையில் ரூ. 14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த திமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. இந்தப் பணிகள் 2 வழித்தடங்களில் படு வேகமாக நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரை ஒரு பாதையும், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரை இன்னொரு பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்டிரல் வழியாக சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும், சைதாப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் வரை மேம்பாலத்திலும் ரயில்கள் இயக்கப்படும். அதேபோல மற்றொரு வழித்தடத்தில் சென்டிரலில் இருந்து திருமங்கலம் வரை சுரங்கப்பாதையிலும், திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை மேம்பாலத்திலும் ரயில்கள் ஓடும். பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் கடந்த ஜூலை மாதம் சென்னை வந்து சேர்ந்தது. அந்த பெட்டிகள் கோயம்பேடு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலை இயக்குவதற்கான மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. பெட்டிகளின் தரம் பாதுகாப்பு இயக்கம் போன்றவை சோதனையிடப்பட்டன. 4 பெட்டிகளுடன் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்.. ஜெ. தொடங்கி வைத்தார் பிரேசில் நாட்டு பொறியாளர்கள் தங்கள் ஆய்வுப் பணியை சென்னை மெட்ரோ ரயில் பொறியாளர்களுடன் இணைந்து செய்தனர். ரயில் என்ஜின்களை இயக்குவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதையடுத்து மெட்ரோ ரயிலின் முறைப்படியான சோதனை ஓட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்வர் வருகையைத் தொடர்ந்து பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. முதல்வருக்கு மெட்ரோ ரயில் இயக்கம் குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கினர். அதை அவர் உன்னிப்பாக கவனித்தார். 4 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரயில் 800 மீட்டர் தூரத்திற்கு தனது முதல் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது.

No comments: