Tuesday, November 26, 2013

திங்கிட்கிழமை காலை 8 முதல் 9 மணி வரை இதயம் பத்திரம்! - www.tnfinds.com - best site in the world

திங்கிட்கிழமை காலை 8 முதல் 9 மணி வரை இதயம் பத்திரம்!

 திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் தான் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறதாம்.
இதயம் என்றால் உயிர் துடிப்பும், காதலும் தான் பலரின் நினைவுக்கு வரும். ஆனால் இதயம் பற்றி பல சுவாரய்ஸமான தகவல்கள் உள்ளன. அவை பற்றி கேள்விப்பட்டால் அப்படியா, உண்மையாகவா என்று பலர் கேட்கக்கூடும்.
அத்தகைய சுவாரஸ்யமான தகவல்களில் சிலவற்றை பார்ப்போம்.

72 முறை

சராசரி மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும், ஒரு நாளைக்கு 1 லட்சம் முறையும், ஆண்டுக்கு 3 கோடியே 6 லட்சம் முறையும், வாழ்நாளில் 2.5 பில்லியன் முறையும் துடிக்கும்.

டிரக்

இதயம் உருவாக்கும் சக்தியானது ஒரு டிரக்கை 20 மைல் தொலைவு வரை ஓட்ட போதுமானதாகும். ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் உருவாக்கப்படும் சக்தி நிலவுக்கு சென்று திரும்பி வர போதுமானது

ரத்தம்

மனிதனின் வாழ்நாளில் இதயம் 1.5 மில்லியன் பேரல் ரத்தத்தை வெளியேற்றுகிறதாம்.

சிரிப்பு

சிரிப்பது இதயத்திற்கு மிகவும் நல்லது. சிரிக்கும் போது நம் இதயம் 20 சதவீதம் கூடுதலாக ரத்தத்தை உடலுக்கு அனுப்புகிறதாம். அதனால் முடிந்த வரை சிரித்து வாழ வேண்டும்.

ஸ்டெதஸ்கோப்


ஸ்டெதஸ்கோப்பை பிரான்ஸ் நாட்டு டாக்டர் ரெனி லேனெக் கண்டுபிடித்தார். பெண்களின் மார்பு மீது காதை வைத்து இதயத் துடிப்பை கேட்பது சரியில்லை என்று நினைத்து அவர் ஸ்டெதஸ்கோப்பை கண்டுபிடித்தார்.

பெண்ணின் இதயம்

ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் இதயம் வேகமாகத் துடிக்கும். ஆண்களின் இதயம் நிமிடத்திற்கு 70 முறை துடித்தால், பெண்களின் இதயம் 78 முறை துடிக்குமாம்.

திங்கட்கிழமை

திங்கட்கிழமை காலை இந்த வாரம் துவங்கிவிட்டதே வேலை செய்ய வேண்டுமே என்ற நினைப்பு தான் இதயத்தை பெரிதும் பாதிக்குமாம். திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் தான் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறதாம்.

More Hot News Click Here...







No comments: