Sunday, November 3, 2013

சத்தீஷ்கார் மாநிலத்தில் சோனியா காந்தி, நரேந்திர மோடி 7-ந்தேதி போட்டி பிரசாரம் - www.tnfinds.com - Best Site in the World


சத்தீஷ்கார் மாநிலத்தில்
சோனியா காந்தி, நரேந்திர மோடி 7-ந்தேதி போட்டி பிரசாரம்
ராய்ப்பூர், நவ.4-சத்தீஷ்கார் மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி சோனியா காந்தியும், நரேந்திர மோடியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள்.சத்தீஷ்கார் தேர்தல்ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு வருகிற 11-ந்தேதியும், 19-ந்தேதியும் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சோனியா-மோடி போட்டி பிரசாரம்இந்த மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், குஜராத் முதல்-மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியும் போட்டி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். சோனியா காந்தி அன்று சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள கண்டகோன், தோங்கர்கார் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.அதே நாளில் நரேந்திர மோடி ஜக்தால்பூர், கங்கர் ஆகிய ஊர்களில் பிரசாரம் செய்கிறார். தோங்கார்காரிலும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.ராகுல் காந்திகாங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வருகிற 8-ந்தேதி கங்கர், தோங்கர்கோன் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி 9-ந்தேதி கஸ்தோல், பிலாஸ்பூர், படபாரா ஆகிய ஊர்களில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.சத்தீஷ்காரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 18 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும், 25 பேர் கோடீசுவரர்கள் என்று தெரியவந்து இருப்பதாகவும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது. டெல்லி70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதில் மிகவும் தீவிரமாக இருக்கும் பாரதீய ஜனதா, முதல்-மந்திரி வேட்பாளராக ஹர்ஷ வர்த்தனை அறிவித்து உள்ளது. அந்த கட்சி தனது வேட்பாளர் பட்டியலை அடுத்த வாரம் அறிவிக்கும் என்று தெரிகிறது. 


More News Click here................ 

No comments: