Sunday, November 3, 2013

யாழ்ப்பாணம் சிறையில் சிறிய அறையில் 40 பேரை அடைத்து வைத்த இலங்கை அரசு - www.tnfinds.com - Best site in the World


யாழ்ப்பாணம் சிறையில்
சிறிய அறையில் 40 பேரை அடைத்து வைத்த இலங்கை அரசு
சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள் கண்ணீர் பேட்டி




 
புதுக்கோட்டை, நவ.4-தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 40 பேரை யாழ்ப்பாணம் சிறையில் சிறிய அறையில் இலங்கை அரசு அடைத்து வைத்திருந்ததாக மீனவர்கள் கண்ணீருடன் கூறினார்கள்.சிறைபிடிப்புபுதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடித்தளங்களில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 18-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 19 பேரை 5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேரையும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த 19 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டு 42 நாட்கள் ஆன நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி நேற்று முன்தினம் காலை இந்திய கடற் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அங்கிருந்து மாலை காரைக்கால் வந்து பின்னர் கார் மூலம் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர்.சிறிய அறையில் அடைத்தனர்இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தீபாவளி நாளில் வீடு திரும்பியதால், அந்த மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். சொந்த ஊர் திரும்பிய ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் கந்தசாமியின் மகனும், மீனவருமான குழந்தைவேலு ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நான் உள்ளிட்ட மீனவர்கள் 19 பேரை இந்திய கடல்பகுதிக்கே வந்து இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட எங்களை கோர்¢ட்டில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அந்த சிறையில் நாங்கள் 19 பேர், ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உள்பட 40 பேரை ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்தனர். இடநெருக்கடியால் எங்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இரவில் பாதிப்பேர் கொஞ்ச நேரம் தூங்குவார்கள். பின்னர் அவர்கள் விழித்துக்கொண்டு மீதிப்பேர் தூங்குவார்கள். இப்படியாக ஒவ்வொரு நாளும் பொழுது கழிந்தது. நடவடிக்கை எடுக்க வேண்டும்கடந்த 30-ந் தேதி எங்கள் 19 பேரையும் கோர்¢ட்டு விடுதலை செய்தது. நாங்கள் காரைக்கால் வழியாக ஜெகதாப்பட்டினம் வந்தோம். நாங்கள் சென்ற படகை இலங்கை அரசு விடுவிக்காததால் எங்களால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை உள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எங்களது விசைப்படகு இலங்கை கடற்பகுதியில் வீணாகி வருகிறது. எனவே மத்திய-மாநில அரசுகள் இவ்விஷயத்தில் தலையிட்டு இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட எங்களின் விசைப்படகு உள்ளிட்ட அனைத்து படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படகு எங்களுக்கு கிடைக்காவிட்டால் நாங்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் தற்கொலைதான் செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மீனவர்கள் எதிர்பார்ப்புஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 34 பேரில் 19 பேர் விடுவிக்கப்பட்ட சம்பவம் அவர்களின் குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படாததால், மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

More News Click Here................ 

No comments: