Sunday, November 3, 2013

செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சி ‘மங்கள்யான்’ விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது - www.tnfinds.com - Best Site in the World


செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சி ‘மங்கள்யான்’ விண்கலம்
நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது
இறுதிக்கட்ட பணிகள் தொடங்கின
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான, ‘கவுண்ட்டவுன்’ எனப்படும் இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் நேற்று தொடங்கின.
சென்னை, நவ.4-‘சிவப்பு கிரகம்’ எனப்படும் செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்வதில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளன.செவ்வாய் கிரக ஆராய்ச்சிபூமிக்கு அடுத்தபடியாக, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுவதே இதற்கு காரணம் ஆகும். செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பி உள்ளன. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் ஒரு விண்கலத்தை அனுப்பி இருக்கிறது.விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்தியாவும், இப்போது செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்ப இருக்கிறது.மங்கள்யான்விண்கலம்சந்திரனை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்’ விண்கலத்தை ஏவி அதில் வெற்றி கண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), அடுத்த கட்டமாக செவ்வாய்கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக ‘மங்கள்யான்’ என்ற விண்கலத்தை அனுப்புகிறது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி அந்த கிரகத்தின் மேற்பரப்பு பற்றியும், அங்கு மீத்தேன் வாயு இருக்கிறதா? என்பது பற்றியும் ஆய்வு செய்து தகவல்களை அனுப்பும்.1,350 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தில் 14.49 எடைகொண்ட ஆராய்ச்சி கருவிகள், புகைப்பட கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. விண்கலம் தயாரிப்பு மற்றும் விண்கலத்தை ஏவுவதற்கான மொத்த திட்ட செலவு ரூ.450 கோடி ஆகும்.நாளைஏவப்படுகிறதுசென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி 36 நிமிடத்திற்கு மங்கள்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-25 மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை கடந்த 31-ந் தேதி நடந்தது. ராக்கெட்டின் எந்திரங்கள், மின் இணைப்பு உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா? என்று அப்போது ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அவை அனைத்தும் சரியாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.இறுதிக்கட்ட பணிகள் இதைத்தொடர்ந்து, விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான 56½ மணி நேர ‘கவுண்ட்டவுன்’ (இறுதிக்கட்ட ஆயத்த பணிகள்) நேற்று காலை 6 மணி 8 நிமிடத்திற்கு தொடங்கியது.பி.எஸ்.எல்.வி. சி-5 ராக்கெட் மூலம் நாளை ஏவப்படும் மங்கள்யான் விண்கலம் 300 நாட்கள் விண்வெளியில் பயணம் செய்து அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி செவ்வாய் கிரகத்தின் அருகே செல்லும். செவ்வாய் கிரகத்தை நீள்வட்ட பாதையில் சுற்றியபடி, அந்த கிரகத்தை பற்றி ஆய்வு செய்து தகவல் களை பூமிக்கு அனுப்பும். 


More NewsClick Here............... 

No comments: