Saturday, November 16, 2013

தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி அதிரடி! - www.tnfinds.com - Best Site in the World

தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி அதிரடி!

அரசு கொடுக்கும் இலவச திட்டங்களால் தமிழக மக்கள் சோம்பேறியாக உள்ளனர். தாலிக்கு தங்கம் கொடுக்கும் அரசு முதலிரவுக்கு பெட் சீட் கொடுக்காமல் இருக்கிறது. அனைவருக்கும் இலவசக் கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்களை வழங்குவதே பா.ம.க.வின் குறிக்கோள் என்று பாமக இளைஞர் அணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேட்டுள்ளார்.
சென்னையில் இன்று செஞ்சி சட்டசபை உறுப்பினர் கணேஷ்குமார், கவிதா திருமணம் நடந்தது. இதில் கலந்து கொண்டார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
தாலிக்கு தங்கம் கொடுக்குறீங்ளே... முதலிரவுக்கு பெட்ஷீட் கொடுக்க வேண்டாமா??.. அன்புமணி அதிரடி!
அப்போது அவர் பேசுகையில், எம்.எல்.ஏ என்றாலே பெரிய மீசை, ரெளடி பயல் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. சினிமாவிலும் இப்படித்தான் எம்.எல்.ஏ.வை காட்டுகிறார்கள். ஆனால் இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களில் இளம் வயதுடைய உறுப்பினராக கணேஷ் குமார் உள்ளார்.
சட்டமன்றத்துக்குள் 110 விதியும், மன்றத்துக்கு வெளியே 144 விதியும் உள்ளது. 110ன் கீழ் முதல்வர் அறிக்கை படிக்கலாம். ஒவ்வொரு ஆட்சியிலும் ஆண்டுக்கு 5 முறை 110ன் கீழ் அறிக்கை வாசிக்கப்படும். ஆனால், 100 முறை 110 விதியின் படி முதல்வர் அறிக்கையை படித்துள்ளார். இதற்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கும் 144 விதி உள்ளது. சட்டசபையில் ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும். 47 ஆண்டுகளாக தமிழகத்தில் தேக்க நிலை உள்ளது.
தமிழக மக்கள் தொகையில் 2 கோடிக்கு மேல் வன்னியர்கள் இருந்தாலும் தமிழகத்தை வன்னியர்கள் ஆள முடியவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இந்த நிலை இல்லை. அடுத்த தேர்தலில தமிழகத்தில் பா.ம.க ஆட்சி அமைக்கும்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வித்தியாசமான தலைவர். மகாத்மா காந்திக்கு பிறகு சிறந்த தலைவராக ராமதாஸ் உள்ளார். பதவி ஆசை இல்லாதவர். தன்னலமற்ற தலைவர். அதிக கொள்கை உள்ள தலைவராக இருக்கிறார்.
பா.ம.க.வில், பொது இடங்களில் பிரமாண்டமாக பிறந்த நாள் விழா கொண்டாடினால் கட்சியினருக்கு பொறுப்பு பறிபோய் விடும். மதுவை ஒழிக்க வேண்டும் என்று 1984ல் இருந்தே பா.ம.க.வும், வன்னிய சங்கமும் குரல் கொடுத்து வருகிறது.
தீபாவளிக்கு ரூ.350 கோடிக்கு மக்கள் மது குடித்துள்ளனர். மது மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. பா.ம.க ஆட்சிக்கு வந்து போடும் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதாக இருக்கும்.
அரசு கொடுக்கும் இலவச திட்டங்களால் தமிழக மக்கள் சோம்பேறியாக உள்ளனர். தாலிக்கு தங்கம் கொடுக்கும் அரசு முதலிரவுக்கு பெட் சீட் கொடுக்காமல் இருக்கிறது. அனைவருக்கும் இலவசக் கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்களை வழங்குவதே பா.ம.க.வின் குறிக்கோள்" என்றார்.


More News Click Here......... 


No comments: