Tuesday, December 24, 2013

டன் கணக்கிள் தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகள்!!!.. கண்ணு கட்டுது முடியல..- www.tnfinds.com -Best site in the world...


டன் கணக்கிள் தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகள்!!!.. கண்ணு கட்டுது முடியல..

சென்னை: தங்கம் இந்த வார்த்தையை கேட்டாலே பெண்கள் கண்களில் மகிழ்ச்சியும், சில ஆண்களில் கண்களில் பயத்தையும் பார்க்க முடியும். தங்கம் முதலில் ஒரு தாது பொருளாக உருவாகியது, பின்பு அதை சவகிடங்குகளில் உபயோகப்படுத்தப்பட்டது, அதனை தொடர்ந்து நாணயங்களாகவும், அணிகலன்களாகவும் உருவானது, ஆனால் இப்பொழுது தங்கம் ஒரு நாட்டின் வளம் என்னும் அளவுக்கு உருவெடுத்துள்ளது. இந்த அளவிற்கு எந்தொரு உலோகமும் வளர்ந்ததில்லை. 

இதனால் தங்கத்தின் விலை அல்லது மதிப்பு ஒரு காலங்களிலும் உயர்ந்த வண்ணமே உள்ளது. வரலாற்றில் எந்த ஒரு இடத்திலும் தங்கத்தின் விலை குறைந்ததில்லை, அப்படி குறைந்தாலும் பெருமளவில் இல்லை, அது நிண்ட நாட்களுக்கு நீடிக்காது.

 மேலும் தங்கத்தின் விலை கடந்த இரண்டு வருட அளவில் குறைந்து, தற்போது மறுபடியும் உயர்ந்து வருகிறது. பல விற்பனையாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கத்தை வாங்குகின்றனர். ஒரு பக்கம் இப்படி இருக்க மறுபக்கம் சந்தை மற்றும் பொருளாதார நிபுணர்கள் இத்தகைய ஏற்றம் கெட்ட செய்தி என்று கருதுகின்றனர். 

குளோபல் கோல்டு கவுன்சில் தரும் புள்ளி விவரத்தின் படி, 2013-ம் ஆண்டின் தொடக்கத்தில் 31,694.8 டன் தங்கம் இருந்தது. தங்கம் மிக பெரிய அளவில் சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நிலையில், உலகளவில் தங்கத்தை அதிகளவில் இருப்பு வைத்துள்ள நாடுகளை பற்றி பார்ப்போம்.

அமெரிக்கா.


உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிக அளவு தங்கம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 1952 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்த தங்க இருப்பின் அடிப்படையில் உலகிலேயே அதிகமாக இருந்தது. தற்போது அமெரிக்காவின் அதிகாரபூர்வமாக தங்க இருப்பு 8,133.5 டன்களும் மற்றும் அதில் 75.1 சதவிகிதம் வெளிநாட்டு நாணய இருப்புகளாக உள்ளன.

ஜெர்மனி.


ஜெர்மனியின் டச் பண்டேஸ் வங்கி 3,391.3 டன்கள் தங்கம் வைத்துள்ளது. இது 125.01 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாகும். உலக தங்க கவுன்சிலின் தகவல் படி இந்நாட்டின் தங்க இருப்புகள் 72.1 சதவிகிதம் அளவிற்கும் மேலாக வெளிநாட்டு நாணய இருப்புகளாக உள்ளது.

இத்தாலி.


2,451.8 டன்கள் தங்கத்துடன் உலகிலேயே மூன்றாம் இடத்தில் உள்ள நாடாக இத்தாலி உள்ளது. இது 89.92 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாகவும் மற்றும் 71.3 சதவிகிதம் வெளிநாட்டு இருப்புகளிலும் உள்ளது.

பிரான்ஸ்.


பிரான்ஸிலுள்ள மத்திய வங்கியின் தங்க ஒப்பந்தத்தின் படி 572 டன்கள் தங்கத்தை பிரான்ஸ் விற்றும், ஜரோப்பிய நாடுகளின் தங்க விற்பனையை கட்டுப்படுத்தியும் வருகிறது. பிரரெஞ்சு மத்திய வங்கி, பாங்க் டி பிரான்ஸ் போன்றவை வங்கிகள் நாட்டின் தங்க இருப்பில் கால் பாகத்தை கொண்டுள்ளன. இதன் மதிப்பு தோராயமாக 146 பில்லியன் டாலர்களாகும். அதிகாரப்பூர்வ தங்க இருப்பு 2,435.4 டன்கள் ஆகும். இந்நாட்டின் வெளிநாட்டு தங்க நாணய இருப்புகளாக 69.5 சதவீதம் உள்ளது.

சீனா.


அதிகாரபூர்வ தங்க இருப்பு 1054.1 டன்கள், இதில் 1.6 சதவிகிதம் வெளிநாட்டு நாணய இருப்புக்களில் உள்ளது. சீனா 2011ஆம் ஆண்டு தங்க விற்பனையை துரிதப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதன் மூலம் அமெரிக்க கருவூலங்களிலில் தங்களின் வெளிநாட்டு இருப்பை பிரிக்க சீனா முயற்சி செய்தது.

சுவிட்சர்லாந்து.


சுவிட்சர்லாந்து உலகிலேயே பாதுகாப்பான பண வர்த்தகம் நடைபெறும் நாடாகும். சுவிஸ் தேசிய வங்கி 1300 டன்கள் தங்கத்தை 2000-2005ல் விற்பனை செய்தது. 2010ஆம் ஆண்டின் தங்க இருப்பு அதன் மொத்த இருப்பில் கால் பாகுதியை அடைந்தது. சுவிஸ் தேசிய வங்கி, அந்நாட்டின் நிதிக்கொள்கையை பின்பற்றி, அந்நாடடின் 1,040.1 டன்கள் தங்கத்தை பாதுகாத்து வருகிறது. இதன் மதிப்பு தோராயமாக 62 பில்லியன் டாலர்களாகும்.

ரஷ்யா.


அதிகாரப்பூர்வ தங்க இருப்பு: 976.9 டன்கள், 9.5 சதவிகிதம் வெளிநாட்டு இருப்புக்களில் உள்ளது. ரஷ்யா 2011 ஆம் ஆண்டு 15 டன்கள் தங்கத்தை வாங்கியது. ரஷ்யாவின் மத்திய வங்கி பெரும்பாலான தங்கத்தை உள்நாட்டு சந்தையிலும், ரஷ்யாவின் புல்லியன் வங்கிகளிலுமே வாங்குகிறது. ரஷ்யாவின் தங்க இருப்பின் மதிப்பு தோராயமாக 50 பில்லியன் டாலர்களாகும்.

ஐப்பான்.


சுனாமி மற்றும் அனுகுண்டு அழிவிற்கு பிறகு பாங்க ஆஃப் ஐப்பான் 20 ட்ரில்லியன் யென்னிற்கு (ஜப்பானிய நாணயம்) தங்கத்தை விற்பனை செய்து முதலீட்டார்களை அமைதிப்படுத்தியது. ஐப்பான் தங்கள் இருப்புக்களில் கனிசமான அளவுக்கு அமெரிக்க டாலர்களையும் வைத்துள்ளது.

நெதர்லாந்து.


1991 ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்து இதுவரை 1,100 டன்கள் தங்கத்தை விற்பனை செய்துள்ளது. ஆனாலும் அந்நாடு தங்கத்தையே பெரும் சேமிப்பாகவும், வர்த்தக வீழ்சியின் போது நம்பிக்கையின் நங்கூரமாகவும் கருதி வருகிறது என ஜீரோ ஹெட்ஜ் தெரிவித்துள்ளது.

இந்தியா.


அதிகாரப்பூர்வ தங்க இருப்பு: 557.7 டன்கள் 9.6 சதவிகிதம் வெளிநாட்டு நாணய இருப்புகளாக வைத்து உள்ளது. உலகிலேயே அதிக அளவில் தங்கம் உபயோகிக்கும் நாடு இந்தியாவாகும். இந்திய அரசு மக்களின் தங்க மோகத்தை தடுத்து நிறுத்த பாடுபட்டு வருகிறது. ஏனெனில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் நாட்டின் தற்போதைய நடப்பு கணக்கு பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.



























































No comments: