Monday, December 16, 2013

400 கிலோ கிராம் இரும்புப் பாதணியுடன் நடக்கும் நபர்... - www.tnfinds.com - Best site in the world....


400 கிலோ கிராம் இரும்புப் பாதணியுடன் நடக்கும் நபர்... 

சீனாவைச் சேர்ந்த பாதணி உற்பத்தியாளர் ஒருவர் 400 கிலோ கிராம் இரும்புப் பாதணியை அணிந்துகொண்டு நடந்து ஆச்சரியப்படுத்துகிறார். 52 வயதான ஷங் புக்ஸிங் என்பவரே இவ்வாறு பாரம் கூடிய இரும்புப் பாதணியுடன் நடக்கின்றார். இவர் கடந்த 7 வருடங்களாக இந்த இரும்புப் பாதணியுடன் நடந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.... 


கைகளினாலேயே தூக்குவதற்கு மிகக் கடினமான இந்த பாரத்தை ஷங் புக்ஸிங் கால்களினால் தூக்கி சுமார் 15 மீற்றர் வரை தினமும் நடக்கிறார். இது குறித்து ஷங் புக்ஸிங் கூறுகையில், தொலைக்காட்சியில் இரும்புப் பாதணிகளை அணிவது தொடர்பில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. இதன் மூலம் மூலநோய் மற்றும் முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்த முடியும் எனக் கூறப்பட்டது.... 

அப்போது முதுகுவலியால் நான் அவதிப்பட்டு வந்தேன். இதனால் நானும் இரும்புப் பாதணியை அணிய ஆரம்பித்தேன். ஒரே மாதத்தில் எனது முதுகு வலி குணமாகிவிட்டது. நீங்களும் இதனை முயற்சித்துப் பாருங்கள்.

 எனது பாதணியின் நிறையை அதிகரித்து 400 கிலோ கிராம்களாக மாற்றியபோது நான் பெருமையடைந்தேன். மேலும் 50 கிலோ கிராம் அதிகரிக்கவுள்ளேன். இதுவே சீனாவில் அணிப்படும் பாரமான இரும்புப் பாதணியாக இருக்கலாம்.

 உடல் பலத்தினால் இதனை அணிய முடியாது. மன பலத்தினாலேயே இதனை தூக்கி நடக்கமுடியும் எனக் கூறியுள்ளார்.

ஆனால் சீனாவில் இது போன்று இரும்புப் பாதணிகள் அணிவது புதிதில்லையாம். ஏற்கனவே உலக சாதனை முயற்சிக்காகவும் இரும்புப் பாதணி அணிந்து நடந்துள்ளனர். எனவே புக்ஸிங் உலக சாதனையில் இடம்பெற பெரும் போட்டியாக இருக்கும் என சில வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.... 

More Hot News Click Here....







No comments: