Monday, December 23, 2013

துபாய்: வரும் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் கலந்து கொள்வதற்காக துபாயில் வாழ்ந்து வரும் தமிழக மாணவி ஒருவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். துபாய் மில்லியனியம் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் தமிழக மாணவி ஆர்யா ( வயது 11 ). சென்னையை சேர்ந்த இவர் 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இலட்சியத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே 12 வயதுக்குட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற இவர் கடந்த ஒன்பது வருட சாதனையை முறியடித்துள்ளார். அதேபோல், ஹரியனாவில் நடைபெற்ற போட்டியில் 10 டிகிரி செல்சியஸ் நீரில் நீந்தி சாதனை படைத்துள்ளார். சில பயிற்சிகள் கடினமாக இருந்தாலும் தனது பெற்றோர் லட்சுமிநாராயணன் - ஸ்ரீவித்யா, பயிற்சியாளர் பென்னி ஜோசப் மற்றும் பள்ளி முதல்வர், நிர்வாகத்தினர் தனக்கு பெரும் உற்சாகமும், ஆதரவும் அளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நீச்சல் பயிற்சிகளுக்கான உடை உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க தனது பெற்றோரே செலவு செய்து வருவதாகவும், நீச்சல் பயிற்சிகளுக்கு ஏதேனும் பெரிய நிறுவனங்கள் உதவிட முன்வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனவும் அம்மாணவி தெரிவித்துள்ளார் - wwww.tnfinds.com - Best site in the world..


டிச. 24ல் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்.... கமிஷன் தொகை உயர்வு கோரி!

சென்னை: அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி வரும் 24ஆம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க் மூடப்படும் என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் எம்.ஹைதர் அலி கூறியதாவது:

''விற்பனை கமிஷனை உயர்த்துவது, ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மத்திய அரசு அபூர்வ சந்திரா கமிட்டியை நியமித்தது.


இந்தக் கமிட்டி ஆய்வுகளை மேற்கொண்டு கடந்த 2011 ஜனவரியில் தனது பரிந்துரைகளை சமர்ப்பித்தது. அதில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 6 மாதங்களுக்கு ஒரு முறை கமிஷன் தொகையை மாற்றியமைப்பது, பெட்ரோல், டீசல் ஆவியாதல் அளவை முறைப்படுத்துதல், ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பள விகிதத்தை வழங்க ஆவன செய்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன. 

ஆனால், இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதுதொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. எனவே, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 22, 23 தேதிகளில் பெட்ரோல் பங்குகளில் மின்விளக்குகளை அணைத்தும், டிசம்பர் 24ஆம் தேதி அனைத்து பங்குகளையும் மூடுவதற்கும் அகில இந்திய பெட்ரோலிய வணிகர்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்து கொள்வது என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 4,400 பங்குகளும் டிசம்பர் 24ஆம் தேதி இயங்காது. 

டிசம்பர் 22, 23 தேதிகளில் அனைத்து பங்குகளிலும் மின்விளக்குகள் அணைக்கப்படும்'' என்று எம்.ஹைதர் அலி கூறியுள்ளார்.

More Hot News Click Here...







No comments: