Tuesday, December 24, 2013

செல்போன் எஸ்.எம்.எஸ். அரசு அத்தாட்சியாகிறது....- www.tnfinds.com - Best Site in The World


செல்போன் எஸ்.எம்.எஸ். அரசு அத்தாட்சியாகிறது...

டெல்லி: செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் அரசு சேவைகள் தொடர்பான தகவல்களை அத்தாட்சியாக ஏற்றுக் கொள்ளும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

ரயில்வே துறையில் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளின் அச்சு பிரதி களுக்குப் பதிலாக செல்போன் எஸ்.எம்.எஸ்., இ-மெயில் தகவல்களை காண்பித்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 

அதுபோல் மத்திய அரசின் 100 துறைகளில் செல்போன் சேவை திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றது.


இதைத் தொடர்ந்து "மொபைல் சேவை" என்று பெயரில் மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் செல்போன் மூலம் சேவை வழங்கும் திட்டம் இப்போது தொடங்கப் பட்டுள்ளது. 

இதன் தொடக்க விழா டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பச் செயலாளர் சத்திய நாராயணா, மொபைல் சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: 

இந்தியாவில் சுமார் 90 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

இந்த அடிப்படை கட்டமைப்பு வசதியை மையமாக வைத்து நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களது வீட்டு வாசலிலேயே அரசு சேவையை வழங்கும் வகையில் மொபைல் சேவை திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. 

இதன் மூலம் அரசு சேவைகளை துரிதமாகவும் விரை வாகவும் வழங்க முடியும் என்றார். 

241 சேவைகளில் அமல் 


முதல்கட்டமாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம், சுகா தாரம், ஆதார் அட்டை, கல்வி உள்ளிட்ட 241 சேவைகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. படிப்படியாக மத்திய, மாநில அரசுகளின் 830 துறைகளுக்கும் மொபைல் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. 

துறையின் துணைச் செயலாளர் ராஜேந்திர குமார் கூறியதாவது: 

மின்னணு சேவையில் டிஜிட்டல் கையெழுத்து தற்போது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. இதுபோல் செல்போனிலும் டிஜிட்டல் கையெழுத்து முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

இதற்காக 2014-ம் ஆண்டின் முதல் காலாண்டில் அனைத்து அரசு துறைகளுக்கும் டிஜிட்டல் கையெழுத்து வசதியை அளிக்கும் வசதிகள் செய்து கொடுக் கப்படும். வருங்காலத்தில் காகித சான்றிதழ்களுக்குப் பதி லாக செல்போன் டிஜிட்டல் ஆவணங் களையே சான்றிதழாகப் பயன்படுத் தலாம். 

செல்போன் எஸ்.எம்.எஸ். தகவல் பரிமாற்றமும் வெகு விரை வில் அரசு அத்தாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும். மொபைல் சேவை திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து செல்போன் இயங்குதளங்களிலும் செயல்படும் வகையில் சிறப்பு தகவல் தொழில்நுட்பம் அரசு துறை களுக்கு வழங்கப்படும் என்றார்.

More Hot News Click Here...





No comments: