Monday, December 16, 2013

கின்னஸ் சாதனை படைத்த இஞ்சிப் பாண் வீடு... - www.tnfinds.com - Best site in the world....


கின்னஸ் சாதனை படைத்த இஞ்சிப் பாண் வீடு... 

22அடி நீளமான உலகிலேயே மிகப்பெரிய இஞ்சிப்பாண் வீட்டை உருவாக்கி அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள பிரையன் நகரைச் சேர்ந்த மக்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

 5 பேரைக் கொண்ட குடும்பம் வசிக்கக்கூடிய அளவு பெரிதான இந்த உண்ணக்கூடிய வீடு 35மில்லியன் கலோரி சக்திப் பெறுமானம் உடையதாகும். 

மேற்படி இஞ்சிப்பாண் வீட்டை அமைப்பதற்கு 4,200 இறாத்தல் மா, 3,000 இறாத்தல் சீனி, 1, 800 இறாத்தல் வெண்ணெய், 7,200 முட்டைகள், 22,304 இனிப்புகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.... 






இதனை உலகின் மிகவும் பெரிய இஞ்சிப்பாண் இல்லமாக அங்கீகரித்து கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் பதிந்து சான்றிதழை வழங்கியுள்ளனர். இந்த வீட்டைப் பார்த்து இரசிப்பதற்கு ஒவ்வொரு இரவும் 600 ற்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி வீடானது காட்சிக்கு வைக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் குறைந்த காலப் பகுதியில் 150,000 அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளது. இந்தப் பணம் அந்நகரிலுள்ள சென் ஜோசப் சுகாதார முறைமைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது. மேற்படி வீடு 39,201.8 கன சதுர அடி அளவானதாகும்... 

More Hot News Click Here...








No comments: