Tuesday, December 24, 2013

தந்தை பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு தினம்: அரசியல் கட்சித்தலைவர் அஞ்சலி - www.tnfinds.com - Best site in the world..


தந்தை பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு தினம்: அரசியல் கட்சித்தலைவர் அஞ்சலி


சென்னை: தந்தை பெரியார், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆகியோரின் நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

 திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இன்று தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடங்களுக்குச் சென்று மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். 

தந்தை பெரியாரின் 40-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக, மார்க்சிஸ்ட், மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஸ்டாலின் மரியாதை.


சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை தலைவர் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

ஜி.ராமகிருஷ்ணன்.


இதேபோல், சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பெரியார் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மதிமுக அஞ்சலி.


தாயகத்தில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருஉருவச் சிலைக்கு, மலர் மாலை அணிவித்தும், கழக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மரியாதை செலுத்தினார். உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், மாவட்டச் செயலாளர்கள், வடசென்னை-சு.ஜீவன், திருவள்ளூர் -டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், குமரி விஜயகுமார், வழக்கறிஞர் அருணாசலம், மற்றும் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன், கோமகன் கோட்டைச்சாமி,எழும்பூர் தென்றல் நிசார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆர் நினைவு தினம்.


இதபோல், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 26வது நினைவு தினம் இன்று தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டது.

ஜெயலலிதா அஞ்சலி.


எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார்.

எஸ்.வி.சேகர்.


எம்.ஜி.ஆர்.நினைவு நாளை முன்னிட்டு நடிகர் எஸ்.வி.சேகர், வெளிநாட்டினரோடு மரியாதை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவில் இருந்த எஸ்.வி.சேகர் மயிலாப்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். பின்னர் கட்சியில் இருந்து வெளியேறிய அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

மதிமுக – அதிமுக.


மதிமுக சார்பில் மல்லை சத்யா தலைமையில் ஏராளமானோர் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விஜயகாந்த் அஞ்சலி.


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், தந்தை பெரியாரின் 40வது நினைவு நாளை முன்னிட்டும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாளை முன்னிட்டும் அவர்களது திருவுருவப் படத்திற்கு தேமுதிக தலைவர், விஜயகாந்த்மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோ, தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் மாவட்டம், பகுதி, வட்ட, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Hot News Click Here...



















































No comments: