Saturday, December 21, 2013

உயிரைக் கொன்ற வேலை... 30 மணி நேரமாக விடாமல் டிவிட் செய்த பெண் பரிதாப மரணம்!- www.tnfinds.com - Best site in the world...


உயிரைக் கொன்ற வேலை... 30 மணி நேரமாக விடாமல் டிவிட் செய்த பெண் பரிதாப மரணம்!

ஜகார்தா: இந்தோனேசியாவைச் சேர்ந்த இளம் காப்பிரைட்டர் ஒருவர் தொடர்ந்து 30 மணி நேரமாக டிவிட் செய்து கடைசியில் உயிரையே இழந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. அவர் கடைசியாக போட்ட போஸ்ட்டிங் - 30 மணி நேரமாக வேலை பார்க்கிறேன்..

 இன்னும் ஸ்டிராங்காக இருக்கிறேன் என்பது. வேலையில் அப்படியே மூழ்கிப் போய் நேரம் காலம் பார்க்காமல் விழுந்து கிடப்பவர்களுக்கு இந்தப் பெண்ணின் மரணம் ஒரு பாடமாக அமைந்துள்ளது. மிதா திரான் என்ற அந்தப் பெண் தனது அலுவலகத்தில், தனது இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.

 உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அடுத்த நாள் மரணித்துப் போனார் மிதா.

ஏன் மரணம்.


மிதாவின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் நீண்ட நேரம் பணியில் ஈடுபட்டிருந்ததே அவரது மரணத்திற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.


சீனாவிலும் இப்படி ஒரு மரணம்.


சீனாவிலும் சமீபத்தில் இ்ப்படித்தான் 24 வயதான பிஆர் ஊழியை கேப்ரியல் லீ மாரடைப்பு ஏற்பட்டு பணியிலேயே மரணமடைந்தார். தனது டெஸ்க்கிலேயே அவர் பிணமாகிக் கிடந்ததார்.

திறமையான காப்பிரைட்டர்.

மிதா குறித்து அவர் பணியாற்றி வந்த விளம்பர நிறுவனத்தின் பொது மேலாளர் எனி வித்யாத்தி கூறுகையில், மிகவும் திறமையான காப்பிரைட்டர் மிதா. அவர் என்றென்றும் எங்களது இதயங்களில் வாழ்வார் என்றார். மேலும் அவர் கூறுகையில், இது எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு. அதிர்ச்சிச் சம்பவமாக இது அமைந்துள்ளது. மிதாவின் குடும்பத்தினருக்கு எப்படி இரங்கல் சொல்வது என்றே தெரியவில்லை என்றார் அவர்.

படு வேகமாக தேடி வந்த மரணம்.


30 மணி நேரமாக பணி தொடர்பாக டிவிட் செய்து கொண்டிருந்த மிதா, தனது டிவிட் செய்திகளில் எல்லாம் உற்சாகத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.

அலுவலக அழுத்தம்.


கடந்த அக்டோபர் மாதம் அவர் வெளியிட்டிருந்த ஒரு டிவிட் செய்தியில், எவ்வளவு நேரம் நீங்கள் அலுவலகத்தில் செலவிடுகிறீர்களோ அதே போல படுக்கையையும் உங்களது இருக்கைக்கு பக்கத்திலேயே கொண்டு வந்து விட வேண்டியதுதான்.

3 நாள் லீவு.. 12 மணி நேர வேலை.


இன்னொரு செய்தியில், நான் 3 நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று பணிக்கு வந்தேன். தொடர்ந்து 12 மணி நேரமாக வேலை பார்த்துக் கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

More Hot News Click Here...











No comments: