Monday, December 30, 2013

பதைபதைக்க வைத்த இளவரசன் மரணம்.... மறக்க முடியாத - www.tnfinds.com - Best Site In The World


பதைபதைக்க வைத்த இளவரசன் மரணம்.... மறக்க முடியாத 2013!


சென்னை:


 சில நிகழ்வுகளை நிச்சயம் நம்மால் நீண்ட காலத்துக்கு மறக்க முடியாது. அப்படிப்பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் தர்மபுரி இளவரசனின் மரணம். 2013ம் ஆண்டின் மறக்க முடியாத நிகழ்வுகளில் இது முக்கியமானது. 

அதேபோல இயக்குநர் மணிவண்ணனின் திடீர் மரணமும் அனைவரையும் அதிர வைத்தது. 

மூத்த திராவிடத் தலைவர் கருணாநிதி இந்த ஆண்டில்தான் தனது 90வது வயதில் காலடி எடுத்து வைத்தார்.

ரஜினி - கமல் உண்ணாவிரதம்

 ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலரும் திரண்டு வந்து பங்கேற்றனர்.


கோவை வணிக வளாகத்தில் பயங்கர தீ - 4 பேர் பலி

 கோவையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மறைந்தார் மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி 

மெல்லிசை மன்னர்களில் ஒருவரான டி.கே.ராமமூர்த்தி சென்னையில் மரணமடைந்தார்.


பா.சிவந்தி ஆதித்தன் மரணம் 

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் சென்னையில் மரணமடைந்தார்.

பவர் ஸ்டார் கைது

 பவர் ஸ்டார் என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டு அகில உலகப் புகழ் பெற்றவரான டாக்டர் சீனிவாசன் ரூ. 50 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் தமிழ்த்தாய்க்கு ரூ. 100 கோடியில் சிலை

 அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போல மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு சிலை வைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

கருணாநிதி 90

 இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திமுக தலைவர் கருணாநிதி தனது 90வது பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாடினார்.


மணிவண்ணன் திடீர் மரணம்

 இயக்குநர், நடிகர், தமிழ் ஆர்வலரான நடிகர் மணிவண்ணன் திடீரென சென்னையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகை மட்டுமல்ல, தமிழ் ஆர்வலர்களையும் உலுக்கி விட்டது.

கடும் பரபரப்புக்கு மத்தியில் வென்ற கனிமொழி



 தமிழகத்தில் ராஜ்யசபாவுக்கு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட கனிமொழி கடும் பரபரப்புக்கு மத்தியில் வெற்றி பெற்றார்


அதிமுகவுக்குத் தாவிய பரிதி இளம்வழுதி



திமுகவின் பிரசார பீரங்கிகளில் ஒருவராகத் திகழ்ந்த பரிதி இளம்வழுதி திடீரென அதிமுகவில் போய்ச் சேர்ந்தார்.

தந்தி செத்துப் போச்சு


 நூறு வருடமாக நாட்டு மக்களோடு ஐக்கியமாகிப் போயிருந்ததந்திக்கு விடை கொடுத்தது தேசம்.. கடைசியாக ஜூலை 14ம் தேதியுடன் தனது மூச்சை நிறுத்திக் கொண்டது தந்தி.


இளவரசனின் திடீர் மரணம்



 தர்மபுரி இளவரசனின் திடீர் மரணம் அனைவரையும் பதை பதைக்க வைத்து விட்டது. தர்மபுரியில், ரயில் தண்டவாளம் அருகே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடே இந்த மரணத்தால் தவித்துப் போய் விட்டது. ஜாதிக் கொடூரத்திற்கு அநியாயமாக பலியான இளவரசனுக்கு அஞ்சலி செலுத்தாத தமிழ் உள்ளங்களே இல்லை.


கட்டிலிலிருந்து விழுந்து மஞ்சுளா மரணம்



 நடிகை மஞ்சுளா, கட்டிலிலிருந்து கீழே விழுந்து பலத்த அடிபட்டு மரணமடைந்தார்.

More Hot News Click Here...





No comments: