Monday, December 23, 2013

இது மீனவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த அக்கிரமச் செயலைக் கண்டித்து நாகை மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். நேற்று முன்தினம் முதல் நாகை தாலுகா பகுதியை சேர்ந்த நாகூர் மேலத்தெரு, நாகூர் ஆரியநாட்டுத் தெரு, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், சாமந்தான்பேட்டை, கல்லார், நாகை ஆரியநாட்டுத் தெரு ஆகிய 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நாகை தலைமை தபால் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் மீனவ சமுதாயப் பிரதிநிதிகள் குழு சந்தித்துப் பேசியது. பின்னர் வெளியில் வந்த அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், மீனவ்ர்கள் விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். எனவே அவரது விளக்கத்திற்கு மதிப்பளித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தனர். - www.tnfinds.com - Best site in the world...


சென்னையில் பிறந்தது ஆம் ஆத்மி.. தலா 10 ரூபாய் கொடுத்து 700 பேர் சேர்ந்தனர்!

சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் சென்னை கிளை 700 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் தற்போது கிளை பரப்ப ஆரம்பித்துள்ளது. அதன் தலைவர் கேஜ்ரிவால், டெல்லியிலேயே உலா வந்தாலும் கூட அவரது ஆதரவாளர்கள் தத்தமது மாநிலங்களில் கிளைகளைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். 

இந்த நிலையில் தலைக்கு 10 ரூபாய் கட்டணம் கொடுத்து 700 பேர் அக்கட்சியில் இணைந்துள்ளனர் சென்னையில். மேற்கு மாம்பலத்தில் வைத்து இக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. பெருமளவிலான பெண்களும் ஆர்வத்தோடு மெம்பராவதற்காக வந்திருந்தனர். 

இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியின் இணை அமைப்பாளர் லெனின், பொருளாளர் ஆனந்த் ஆகியோர் கூறுகையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஆம்ஆத்மி கட்சி செயல்படுகிறது. சென்னை, கோவை, மதுரையில் உறுப்பினர் சேர்க்கை நடத்தியதுபோல் மற்ற மாவட்டங்களிலும் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள்.

 தமிழக மக்கள் அரசியலில் ஒரு மாற்று இயக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்று இயக்கம் ஆம்ஆத்மி கட்சிதான் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றனர்.

More Hot News Click Here...



No comments: