Saturday, December 21, 2013

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்று 3 துண்டுகளாக்கி வீசிய கணவர் கைது - www.tnfinds.com - Best site in the world..


நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்று 3 துண்டுகளாக்கி வீசிய கணவர் கைது

திருவள்ளூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கொலை செய்து மூன்று தூண்டுகளாக்கி வீசிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசிரியை காந்திமதி (வயது 38).

 இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர் காந்திமதி சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பரமசிவம் (40) என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். பரமசிவம் தனியார் கம்பெனியில் தலைமை கணக்காளராக வேலை செய்து வருகிறார்.

 பணியிட மாறுதல் காரணமாக காந்திமதி பொன்னேரி அருகே உள்ள நெடும்பரம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு மாறுதலாகி அங்கு வேலையில் சேர்ந்தார். 45 நாட்களுக்கு முன்னர் பொன்னேரி அருகே உள்ள காரனோடை பஜார் தெருவில் வாடகை வீட்டில் குடியேறினார். 2 நாட்களாக காந்திமதியிடம் இருந்து போன் வரவில்லை என்று சந்தேகப்பட்ட அவரது உறவினர்கள் காரனோடைக்கு வந்தனர்.

 அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டை திறந்து பார்த்தபோது குளியல் அறையில் எரிந்த நிலையில் இரு கால்கள் மட்டும் இருந்தது. இதுபற்றி அவர்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

 விசாரணையில் மனைவியை அடித்துக் கொலை செய்து 3 துண்டுகளாக் கியதை பரமசிவம் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் பரமசிவத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவி யின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததாலும், தன்னுடைய தாயாரை தரக்குறைவாக பேசியதாலும் கொலை செய்ததாக தெரிவித்தார்.

 போலீசாரிடம் பரமசிவம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது: நான் காந்திமதியை கந்தகோட்டம் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். இருவரும் கை நிறைய சம்பாதித்து வந்தோம். என் வீட்டுக்கு எனது தாயார் சிவசங்கரி வரும் போதெல்லாம் என் மனைவி ஆபாசகமாக திட்டுவார்.

 5 குழந்தைகளை விட்டு உன் அப்பா பிரிந்த பிறகு உனது அம்மா என்ன தொழில் செய்து உங்களை காப்பாற்றினார் என்று ஆபாசமாக பேசி வந்தார். மேலும் அடிக்கடி அவள் திருவண்ணாமலைக்கு சென்று வருவாள் அதுகுறித்து நான் கேட்பேன். இதை நீ கேட்க தேவையில்லை என்பாள். அவளது செல்போனுக்கு 7 நம்பரில் இருந்து அடிக்கடி போன் வரும்.

 அப்போது வீட்டில் இருந்து வெளியேறி ரகசிய மாக பேசுவாள். இதுபற்றி கேட்கும்போது இதை கேட்க உனக்கு உரிமையில்லை என்பாள். இதனால் அவளது நடத்தை யில் சந்தேகப்பட்டேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம் போல் எனது மனைவிக்கு போன் வந்தது. இதுகுறித்து எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவள் ஆபாசமாக திட்டினாள். இதனால் ஆத்திரம் அடைந்து அவளது தலையை பிடித்து சுவற்றில் அடித்தேன்.

 இதில் அவள் மயங்கி விழுந்து இறந்தாள். நான் அருகே உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்தேன். அவள் மீது ஊற்றி கொளுத்தினேன். பின்னர் உடலை அப்புறப்படுத்த முயற்சி செய்தேன். அதற்காக சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து உடலை துண்டு துண்டாக வெட்டி பாலிதீன் பையில் அடைத்தேன். 

ஒவ்வொரு துண்டாக அப்புறப்படுத்த முடிவு செய்தேன். முதலில் கழுத்து, வயிறு அடங்கிய பகுதியை எடுத்துக் கொண்டு சென்னை செல்ல பஸ் ஏறினேன். செம்புலிபுரம் வரும்போது பையில் இருந்து கசிந்த ரத்தக்கறையை பார்த்து கண்டக்டர் பையில் என்ன இருக்கிறது என்று கேட்டார். நான் மாட்டு இறைச்சி என்று கூறினேன். அவர் தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருந்ததால் நான் செம்புலிவரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி விட்டேன். 

சிறிது தூரம் நடந்து சென்று அங்கிருந்த புதரில் வீசி விட்டு வீட்டுக்கு திரும்பினேன். மறுநாள் தலையை மட்டும் பையில் எடுத்துக் கொண்டு யானைகவுணி அருகே உள்ள கால்வாயில் தலையை வீசினேன். அதன் பிறகு 2 கால்கள் அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. அதை வீச முயற்சி செய்து கொண்டு இருந்த போதுதான் போலீசில் சிக்கி கொண்டேன்.

 பல ஆண்களுடன் போனில் தொடர்பு வைத்து பேசி கொண்டு இருந்ததாலும் எனது தாயாரை அசிங்கமாக பேசியதாலும் மனைவியை கொன்றேன்''என்று கூறினார். போலீசார் பரமசிவத்தை அழைத்துக் கொண்டு சென்னை யானைக்கவுனி பாலத்தின் கீழ் பிளாஸ்டிக் பையில் இருந்த தலையையும், செம்புலிவரத்தில் இருந்த உடல் பகுதியையும் மீட்டனர். வீட்டில் இருந்த கால் பகுதியையும் போலீசார் கைப்பற்றினர். 

துண்டுகளாக்கப்பட்ட 3 பகுதிகளையும் பிரேத பரிசோதனைக் காக பொன்னேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



No comments: