Friday, December 13, 2013

கருத்து வேறுபாடு- மனைவியைப் பிரிந்தார் ஹ்ரித்திக் ரோஷன் - www.tnfinds.com - Best site in the world..

கருத்து வேறுபாடு- மனைவியைப் பிரிந்தார் ஹ்ரித்திக் ரோஷன்

மும்பை: கருத்து வேறுபாடு காரணமாக இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் மனைவி சுசன்னேவைப் பிரிந்தார். இதனை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் உள்ளார். இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், சுசன்னேவை கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி திருமணம் செய்தார். சுசன்னே இந்தி நடிகர் சஞ்சய் கானின் மகள். இந்த தம்பதியினருக்கு ஹ்ரே கான்(வயது 7), ஹ்ருதான்(5) ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள்.
 

மாமனாரின் பிறந்த நாள் விழாவுக்கு லேட்.

இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 6 - ந் தேதி ஹ்ரித்திக் ரோசனின் தந்தை ராகேஷ் ரோஷன் தனது 64-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். அப்போது, ஹ்ரித்திக் ரோசனின் மனைவி சுசன்னே காலதாமதமாக வந்தார்.

விழாக்களுக்கு வருவதில்லை.

அவருடன் அவரது தாயார் சரைன் கான், தந்தை சஞ்சய் கான் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர். இதையடுத்து நடைபெற்ற ‘கிரிஷ் 3' படத்தின் வெற்றி விழா உள்பட எந்த நிகழ்ச்சிகளிலும் ஹ்ரித்திக் ரோஷன் தன் மனைவி சுசன்னேவுடன் கலந்து கொள்ளவில்லை.

ஆமா.. பிரிஞ்சிட்டோம்.

இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பதிலளித்து பேசுகையில், ‘‘எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. என்னை விட்டு பிரிய அவர் (சுசன்னே) தீர்மானித்துவிட்டார். இது எனது குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நேரத்தில் என்னையும், எனது குடும்பத்தினரையும் தனிமையில் அனுமதிக்குமாறு ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

மீண்டு வருவேன்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘இதன் காரணமாக எனது ரசிகர்கள் துவண்டுபோய் விடக் கூடாது என்றும், எனக்கு சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. நான் மீண்டுவர தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

பிரிந்து வாழ முடிவு.

ஹ்ரித்திக் ரோஷனின் மாமனாரும், சுசன்னேவின் தந்தையுமான சஞ்சய் கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "மற்ற தம்பதிகளை போலத்தான் ஹ்ரித்திக்-சுசன்னே தம்பதிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நன்கு படித்தவர்கள். அருமையான தம்பதியினர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சிறிது காலம் பிரிந்து வாழ தீர்மானித்து இருக்கிறார்கள். இதை முடிவு என்று கருதுவது தவறு. அவர்கள் இருவரும் நிரந்தரமாகப் பிரியவில்லை,'' என்றார்.

 

 

 

.

.



.


.

 
 


 

No comments: