போர்ப்ஸ் பிரபலமானவர்கள் பட்டியலில் ஷாரூக் முதலிடம்... கமலுக்கு 47வது இடம்!
டெல்லி: இந்த ஆண்டு பிரபலமான இந்தியர்கள் 100 பேர் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடம் பிடித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான்.
தமிழ் நடிகர் கமல் ஹாஸனுக்கு 47 வது இடம் கிடைத்துள்ளது. தமிழிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நடிகர் கமல்தான். கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்தவரும், பாலிவுட் நடிகை என்று தன்னை சொல்லிக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுபவருமான ஸ்ரீதேவிக்கு இப்பட்டியலில் 73-வது இடம் கிடைத்துள்ளது.
ஷாரூக்கான் முதலிடம்.
இப்பட்டியலில் முதலிடத்தை ஷாருக்கான் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். பிரபலம், வருவாய் என அனைத்து வகையிலும் அவர் இந்த முதலிடத்துக்கு உரியவராக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
டோனிக்கு இரண்டாமிடம்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
சல்மான்கான்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சல்மான்கான் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்.
சமீபத்தில் ஓய்வு பெற்ற சாதனை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 4-வது இடத்தைப் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு இவர் 6 வது இடத்திலிருந்தார்.
அமிதாப் பச்சன்.
சாதனை நடிகர் அமிதாப் பச்சன் இந்த முறை 5-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டும் அவர் இதே இடத்தில் இருந்தார்.
அக்ஷய் குமார்.
அக்ஷய் குமாருக்கு இந்த ஆண்டு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அவருக்கு வெற்றிப் படங்கள் ஏதுமில்லாததால் இந்த நிலை.
விராத் கோஹ்லி.
கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லிக்கு இந்த முறை ஏழாவது இடம் கிடைத்துள்ளது.
ரன்பீர் கபூர்.
ரன்பீர் கபூர் முதல் முறையாக போர்ப்ஸ் டாப் 10-ல் வந்திருக்கிறார். அவருக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.
கத்ரினா கைப்.
போர்ப்ஸ் டாப் டென்னில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியப் பெண் கத்ரினாதான். அவருக்கு 9வது இடம் கொடுத்துள்ளனர்.
ஹ்ரித்திக் ரோஷன்.
ஹ்ரித்திக் ரோஷன் முதல் முறையாக டாப் டென்னுக்குள் வந்திருக்கிறார். காரணம் அவரது க்ரிஷ் 3-ன் அபார வெற்றி.
கமல்ஹாஸன்.
கமல்ஹாஸனுக்கு இந்தப் பட்டியலில் 47வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் நடிகர். காரணம் விஸ்வரூபம் படத்தின் வெற்றி.
அஜீத் இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்ற நடிகர் அஜீத் குமார், அஸ்வினி சாங்கி, பொம்மன் இரானி உள்பட 26 பேருக்கு இந்த ஆண்டு பட்டியலில் இடம்கிடைக்கவில்லை.
No comments:
Post a Comment