Monday, December 9, 2013

வியக்க வைக்கும் கிறிஸ்துமஸ் பற்றிய 5 கட்டுக்கதைகள்!!! - www.tnfinds.com - Best site in the world...


வியக்க வைக்கும் கிறிஸ்துமஸ் பற்றிய 5 கட்டுக்கதைகள்!!!

பொறுமையின் திலகமான இயேசு பிரான் இவ்வுலகில் அவதரித்த திருநாளைதான் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றோம். தொடக்க காலத்தில் வெவ்வேறு முறைகளில் கொண்டாடி வந்தாலும் சில நூற்றாண்டுகளாக ஒரே முறையை வழிவகுத்து கொண்டாடி வருகின்றனர். பண்டிகையை வரவேற்க நமது வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தை வாங்கி அலங்கரித்து பரிசுப்பொருட்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் என்றாலே அழகான அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம், பாரம்பரிய அலங்காரங்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கொண்டாட்டங்கள் தான் நினைவிற்கு வரும். இந்த சந்தோஷம் நிறைந்த கிறிஸ்துமஸ் பண்டிகை பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதை பற்றி பல புனைக்கதைகள் வந்திருந்தாலும் இவற்றையெல்லாம் தாண்டி பல நல்ல உறவுகளை இணைக்கும் பண்டிகையாகவே இருந்து வருகின்றது. இப்பொழுது கிறிஸ்துமஸ் பற்றிய சில புனைக்கதைகளைப் பற்றி இப்பொழுது படித்து அதில் இருக்கும் உண்மையை கண்டறியலாம்.


சாண்டா கிளாஸ் என்பவர் ஒரு குண்டான வெள்ளை தாடியுடைய நபர்

சாண்ட என்றாலே நாம் அறிந்தது இது ஒன்றுதான். எனினும், அவரின் உண்மையான தோற்றம் பற்றி யாரும் அறிந்திருக்க வில்லை. சாண்டாவை பற்றிய உண்மை என்னவென்றால், 4 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சென்ட் நிக் என்னும் மதகுரு குழந்தைகள் மீது அன்பு கொண்டு ஒரு பை நிறைய பரிசுபொருட்களையும் விளையாட்டுப் பொருட்களையும் எடுத்து வந்து அவர்களுக்கு கொடுப்பார் என்பதுதான். பிறகு வந்த தகவல்களின்படி, சாண்டா நமது வீட்டிற்கு சிம்னி வழியாக குதித்து வருவார் என்று கூறி வந்தனர். இவை அனைத்திற்கும் மாறாக, சாண்டா வை தாடி இல்லாத ஒல்லியான மனிதர் என்றும் விவரிக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் மரங்கள் எளிதில் தீப்பிடிக்கக்கூடும்

நம்மில் பலர் கிறிஸ்துமஸ் மரங்கள் எளிதில் தீப்பிடிக்கக்கூடும் என்றே நம்பி வந்துள்ளோம். ஆனால், இது உண்மையல்ல. உண்மையான மரமோ அல்லது பொய்யான மரமோ, இந்த கிறிஸ்துமஸ் மரங்கள் மற்ற எல்லா மரங்களை போலவும் தீப்பிடிக்காது. எனினும், பொய்யான மரங்கள் நிச்சயம் தவறான மின்தொடர்பால் தீப்பிடிக்கக்கூடும்.


கிறிஸ்துமஸ் பண்டிகையைக்காட்டிலும் ஈஸ்டர் பண்டிகையே பிரபலமானது

கிறிஸ்துமஸ் கதைகள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்புகளை விவரித்தாலும், கிறிஸ்டியன் நாள்காட்டி இதற்கு வேறு ஒரு கதையை கூறுகின்றது. இதில் ஏசுபிரான் உயிர்பித்த நாளான ஈஸ்டர் பண்டிகையே உலகம் முழுவதிலும் உள்ள கிறித்துவர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகின்றது என்று கூறுகின்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வாழ்த்து அட்டைகள் அனுப்புவது என்பது பாரம்பரியமாகும்

ஒவ்வொரு வருடமும் நீங்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று உங்கள் குடும்பத்துடன் இல்லையென்றால் அவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அனுப்ப மறக்கக்கூடாது. பலருக்கு இது பாரம்பரியமா இல்லையா என்று தெரியாது. உண்மை என்னவென்றால், 19 நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் வாழ்ந்த ஒரு வர்த்தக நபர் இதனை தொடங்கி வைத்தார் என்பது தான்.

கிறிஸ்துமஸ் மரம் பாரம்பரியம் மிக்கது

இந்த பண்டியை கொண்டாட நமது இல்லங்களில் கண்டிப்பாக கிறிஸ்துமஸ் மரங்களை வைப்போம். இது தான் பாரம்பரியமான முறையும் கூட. எனினும், 18 நூற்றாண்டில் ஜெர்மனியில் இருந்து வந்த சிலர் அங்குள்ள சர்ச்களில் கிறிஸ்துமஸ் மரங்களை கொண்டு வந்து வைத்தனர். பிறகு 19 நூற்றாண்டில் விக்டோரியான்ஸ் இதனை பழக்கமான பின்பற்ற தொடங்கி இன்று வரை பராம்பரியமாக பின்பற்றி வருகின்றது. இந்த புனைகதைகளும் கட்டுக்கதைகளும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்க செய்கின்றது. இந்நன்னாளில், கிறிஸ்துமஸ் கரோலஸ் பாடி நண்பர்களுடனும் உறவினர்களுடனும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.


























No comments: