Thursday, December 12, 2013

ஓரினச் சேர்க்கை சரியே என்ற டெல்லி ஹைகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட் - www.tfinds.com -Best site in the World


ஓரினச் சேர்க்கை சரியே என்ற டெல்லி ஹைகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்


டெல்லி:




 ஆண், பெண் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஓரினச் சேர்க்கை சரியே என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. வயது வந்தோர் மனம் ஒத்து சேர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோபத்யாய ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சிலர் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் சுமார் ஓராண்டு மற்றும் 9 மாதங்கள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் ஓரினச் சேர்க்கை சரியே என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377ன் படி இயற்கைக்கு புறம்பான உறவு சட்டவிரோதமானது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான சிங்வி இன்று ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Hot News Click Here...

No comments: