அஜீத் மொட்டை போட்டுக் கொண்டது ஏன் தெரியுமா?
சென்னை: வீரம் படத்தின் வெற்றிக்காகவே இந்த மொட்டை என அஜீத் தெரிவித்துள்ளார். நரைத்த தலை, தாடியுடன் படங்களில் நடித்து வந்த அஜீத், திடீரென இன்று மொட்டையடித்து போஸ் கொடுத்தார்.
வீரம் படத்துக்குப் பிறகு கவுதம் மேனனின் புதுப்படம் தொடங்க நான்கு மாதங்கள் இடைவெளி இருப்பதால் அவர் மொட்டை போட்டுக் கொண்டு, வெளிநாடு செல்லப்போவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் தனது வீரம் படம் பெரும் வெற்றியைப் பெறவேண்டும் என்பதற்காகவே மொட்டை போட்டதாக தெரிவித்துள்ளார். மொட்டை போட்டுக் கொண்டு திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசித்த அஜீத், தன் படத்துக்காக வேண்டிக் கொண்டாராம். அவருடன் படத்தின் இயக்குநர் சிவாவும் மொட்டை போட்டுக் கொண்டார். வேண்டுதலுக்கு வேண்டுதலுமாச்சு... விளம்பரத்துக்கு விளம்பரமுமாச்சு!
No comments:
Post a Comment