Friday, December 13, 2013

ஹனிமூனில் பலாத்காரம், இயற்கைக்கு புறம்பாக உறவு: கணவர் மீது இளம்பெண் புகார் - www.tnfinds.com - Best site in the world...


ஹனிமூனில் பலாத்காரம், இயற்கைக்கு புறம்பாக உறவு: கணவர் மீது இளம்பெண் புகார்

தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் இயற்கைக்கு புறம்பான முறையில் உறவு கொண்டதாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

டெல்லியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கு எம்.என்.சி.யில் புராஜெக்ட் மேனேஜராக பணிபுரியும் புனித் பரத்வாஜ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த மாதம் 29ம் தேதி திருமணமும் நடந்தது. 

இதையடுத்து கடந்த 1ம் தேதி புதுமண தம்பதிகள் தேனிலவுக்கு தாய்லாந்தில் உள்ள பாங்காக் சென்றுவிட்டு 8ம் தேதி ஊர் திரும்பினர். இதையடுத்து அந்த பெண் தனது குடும்பத்தோடு வந்து நேற்று இரவு காவல் நிலையத்தில் கணவர் பரத்வாஜ் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது.

நாங்கள் தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு செல்ல திட்டமிட்டோம். ஆனால் அவர் என்னை பாங்காக் அழைத்துச் சென்றார். தேனிலவின் போது அவர் என்னை உடல் மற்றும் மன ரீதியில் கொடுமைப்படுத்தினார்.

 என்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு இல்லாமல் இயற்கைக்கு புறம்பான முறையில் உறவு கொண்டார் என்று தெரிவித்திருந்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பரத்வாஜை தேடி வருகின்றனர். பரத்வாஜை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


No comments: