Wednesday, December 4, 2013

காதலிகளுடன் உறவு வைத்துக் கொண்டதே இல்லை: சல்மான் கான் - www.tnfinds.com - Best site in the world.

காதலிகளுடன் உறவு வைத்துக் கொண்டதே இல்லை: சல்மான் கான்

மும்பை: தனது காதலிகளுடன் தான் உறவு வைத்துக் கொண்டதே இல்லை என்று இந்தி நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
நடிகர் சல்மான் கானுக்கு சங்கீதா பிஜ்லானி, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப் என்று பல காதலிகள் இருந்தனர். ஆனால் அனைவரும் அவரை பிரிந்து சென்றுவிட்டனர்.
தற்போது சிங்கிளாக இருக்கும் சல்மான் கான் இந்தி இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் டிவி நிகழ்ச்சியான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் தனது காதல் மற்று காதலிகள் பற்றி மனம் திறந்து பேசினார்.

கன்னிப் பையன்


நான் இன்னும் கன்னிப் பையனாக தான் உள்ளேன். எனது காதலிகள் யாருடனும் நான் உறவு வைத்துக் கொள்ளவில்லை. என்னை திருமணம் செய்யப் போகும் பெண்ணுக்காக நான் கன்னித்தன்மையுடன் உள்ளேன் என்று சல்மான் தெரிவித்தார்.

திருமணம்


ஒரு காலத்தில் நான் திருமணம் செய்ய விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. எனக்கும் சங்கீதா பிஜ்லானிக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது. பத்திரிக்கை எல்லாம் அடித்தாகிவிட்டது. ஆனால் நான் வேறு பெண்ணுடன் இருப்பதை பார்த்த அவர் திருமணத்தை நிறுத்திவிட்டார் என்றார் சல்மான்.

முன்னாள் காதலிகள்


எனது முன்னாள் காதலிகளில் சிலரை நான் கண்டுகொள்வதே இல்லை. சிலரை கண்டாலே நான் ஓட முயற்சிப்பேன். அவர்களை நான் நேருக்கு நேர் சந்திப்பதில்லை என்று சல்மான் தெரிவித்தார்.

சங்கீதா


முன்னாள் காதலிகளை சந்திப்பதை தவிர்க்கும் சல்மான் சங்கீதா பிஜ்லானியை மட்டும் கண்டால் ஓடுவது இல்லை. ஏனென்றால் சங்கீதா தற்போது குடும்பத்தில் ஒருவர் போன்று என்று சல்மான் கருதுகிறார்.

More Hot News Click Here...


No comments: