Friday, December 13, 2013

எடையை குறைக்கும் தேன்! இதை கவனத்தில் வச்சுக்கங்க!! - www.tnfinds.com - Best site in the world...


எடையை குறைக்கும் தேன்! இதை கவனத்தில் வச்சுக்கங்க!!

எளிதில் கெட்டுப்போகாத மிகவும் சுத்தமான பொருள் தேன். சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட, சுவாசக்கோளாறு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள்,தாகம், தீப்புண், விக்கல் போன்றவையும் குணமாக்குகிறது. 

தேனில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும். குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது.

 இரவில் உறங்கும் முன்பு சுடுநீரில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் உடல் எடை குறையும் என்று ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

தேன் டயட்.


விளையாட்டு வீரர்கள் தேன் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உடலுக்குத் தேவையான சத்துக்குள்ள ஃப்ரக்டோஸ் ஆக மாறி கிடைக்கிறது. உடலின் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்புக்களை தேன் கரைக்கிறது. மனித உடலில் உள்ள கல்லீரல் மூலம் குளுக்கோசினை உற்பத்தி செய்ய தேன் உதவி செய்கிறது. இது மூளையில் சர்க்கரை அளவை அதிகரித்து வேகமாக கொழுப்பை கரைக்கும் ஹார்மோன்கள் விடுவிக்கிறது.

தவிர்க்க வேண்டியவை.


உடல் கொழுப்பை கரைக்க தேன் டயட்டில் இருப்பவர்கள் சில விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தேன் சாப்பிடும் போது உடற்பயிற்சி செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உறங்கும் போது.


படுக்கைக்குப் போகும் முன்பாக ஒரு டம்ளர் சுடுநீரில் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் தேவையற்ற கொழுப்புக்கள் எரிக்கப்படுகின்றன. இரவில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சர்க்கரையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

உடனடி உணவுகள்.


தேன் டயட்டினை பின்பற்றுபவர்கள், பொரித்த, வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். முதற்கட்டமாக ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட்களை தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் கொழுப்புகளை கரைக்க முடியும்.

மாவுச்சத்துக்கள்.


கார்ப்போ ஹைடிரேட் எனப்படும் மாவுச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் போது அது ரத்தச் சர்க்கரை அளவினை அதிகரிக்கும். எனவே அரிசி, பாஸ்தா போன்ற உணவுகளை கட்டுக்குள் வைக்க வேண்டுமும்.

பழங்கள்.


உணவில் புரதச்சத்துக்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் சர்க்கரை அதிகமுள்ள பழங்களை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.


உருளைக்கிழங்கு வேண்டாமே.


தேன் டயட்டில் இருக்கும் போது உருளைக் கிழங்கை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் உருளைக்கிழங்கு உடலின் ரத்தச் சர்க்கரை அளவினை அதிகரிக்கும் என்பதால்தான் உருளைக்கிழங்கை தவிர்க்கச் சொல்கின்றனர் நிபுணர்கள்

More Hot News Click Here...





































No comments: