Tuesday, December 10, 2013

மலைப்பாதையில் சோதனையின்போது கவிழ்ந்த மஹிந்திராவின் புதிய எஸ்யூவி! - www.tnfinds.com - Best site in the World


மலைப்பாதையில் சோதனையின்போது கவிழ்ந்த மஹிந்திராவின் புதிய எஸ்யூவி!

நீலகிரி மலைப்பாதையில் வைத்து சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த மஹிந்திராவின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வளைவு ஒன்றில் திரும்பியபோது அந்த எஸ்யூவி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது அங்கிருந்த இரும்பு கம்பத்திலும் மோதியது.

மினி எஸ்யூவி 



மஹிந்திரா எக்ஸ்யூவி 500 அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எஸ்யூவி எஸ்101 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் சோதனை 




கடந்த சில மாதங்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வைத்து இந்த பெயரிடப்படாத இந்த புதிய காம்பெக்ட் சோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது நீலகிரி மலைச் சாலைகளில் வைத்து சோதனை செய்யப்பட்டபோது விபத்தில் சிக்கியுள்ளது.

6 சீட்டர்



 இந்த மினி எஸ்யூவியில் 6 பேர் பயணிக்கும் வசதி கொண்டது. முன்புறத்தில் 3 பேரும் பின் புற இருக்கையில் 3 பேரும் பயணிக்கும் வகையில் இருக்கை அமைப்பு கொண்டது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்




 நம் நாட்டு சாலை நிலைகளுக்கு தகுந்தவாறு அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவி வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக கருதப்படுகிறது.

புதிய எஞ்சின்




 இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் ட்வின் டர்போ டீசல் எஞ்சினும், சாங்யாங் மோட்டார்ஸ் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

படங்கள்


 இந்த படங்களை பிரவீன் பாலா என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.


Mor Hot News Click Here...




No comments: