Tuesday, October 29, 2013

111 கிமீ மைலேஜ் காருக்கு ஏக டிமான்ட்: விழி பிதுங்கி நிற்கும் ஃபோக்ஸ்வேகன் - www.tnfinds.com - Best Site in the World

111 கிமீ மைலேஜ் காருக்கு ஏக டிமான்ட்: விழி பிதுங்கி நிற்கும் ஃபோக்ஸ்வேகன்


லிட்டருக்கு 111 கிமீ மைலேஜ் தரும் ஃபோக்ஸ்வேகன் ஹைபிரிட் காருக்கு எதிர்பார்க்காத அளவு முன்பதிவு வருகிறதாம். இதனால், ஃபோக்ஸ்வேகன் செய்வதறியாது திக்குமுக்காடி நிற்கிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த கார் பார்வையாளர்களை மட்டுமின்றி உலக அளவில் ஆட்டோமொபைல் துறையினரையும், கார் ஆர்வலர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த காருக்கான வரவேற்பை ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே எதிர்பாராத வகையில் இருக்கிறது.

அலுமினியம் மற்றும் சிஆர்எஃப்பி எனப்படும் பிளாஸ்டிக் பாகங்கள் பயன்படுத்தி கைகளால் தயாரிக்கப்படுகின்றன. எனவே, ஜெர்மனியின் ஓஸ்னாபுரூக் ஆலையில் மொத்தம் 200 எக்ஸ்எல்1 கார்களை மட்டுமே தயாரிக்க ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த காரை வாங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டு முன்பதிவு நடக்கிறதாம். எனவே, முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கார்களை தயாரித்து கொடுக்க இயலாத நிலையில் ஃபோக்ஸ்வேகன் உள்ளது.

முன்பதிவை பார்த்து திகைப்பில் ஆழ்ந்துள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களை தேர்வு செய்து கார்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை துவங்க உள்ளது.

அதிக மைலேஜ் தருவதற்காக தங்கு தடையின்றி செல்லும் விதத்தில் பிரத்யேக ஏரோடைனமிக் டிசைனை கொண்டிருக்கிறது. இலகு எடை கொண்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இந்த கார் வெறும் 795 கிலோ மட்டுமே எடை கொண்டது.

இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தில் சீராக செல்வதற்கு 8.4 பிஎஸ் பவர் போதுமானது. அந்த அளவுக்கு சிறப்பான காற்றியக்கவியல் தத்துவத்தில் வடிவமைத்துள்ளனர்.

இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். 0-100 கிமீ வேகத்தை 12.7 வினாடிகளில் கடந்துவிடும்.

ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இந்த மைலேஜை எக்ஸ்எல்1 தருகிறது. 48 பிஎஸ் பவரை அளிக்கும் 2 சிலிண்டர் டீசல் எஞ்சினும், 27 பிஎஸ் பவரை அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளன.

ஹைபிரிட் நுட்பத்தின் அடிப்படையில், கணக்கீடுகளின்படி 0.9 லிட்டர் டீசலுக்கு 100 கிமீ மைலேஜை இந்த கார் சாத்திப்படுத்தியுள்ளது.

இந்த கார் கிலோமீட்டருக்கு வெறும் 21 கிராம் மட்டுமே கார்பனை வெளியிடும் என்பதால் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக கருதலாம்.

3,888 மிமீ நீளம், 1,665 மிமீ அகலம் மற்றஉம் 1,153 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போலோவைவிட குறைவான உயரத்தை கொண்டிருக்கும்.

கடந்த 2002ம் ஆண்டு முதன்முறையாக கான்செப்ட் மாடலாக ஃபோக்ஸ்வேகன் இந்த காரை அறிவித்தது. கடந்த மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில்தான் இந்த கார் உற்பத்தி நிலைக்கு செல்ல இருப்பதாக அறிவித்தது.

No comments: