Tuesday, October 29, 2013

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் முகேஷ் அம்பானி முதல் இடம்!! அப்ப அனில் அம்பானி?? - www.tnfinds.com - Best Site in the World

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் முகேஷ் அம்பானி முதல் இடம்!! அப்ப அனில் அம்பானி??

டெல்லி: இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைவாக இருந்தாலும், பண பணகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. உலக அளவில் பெரும் பணக்காரர் வரிசையில் கார்லோஸ் சிலிம், பில் கேட்ஸ், வாரன் பஃபெட் போன்றவர்கள் இருந்தாலும், இந்த வரிசையில் நம் இந்தியர்கள் சிலர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இங்கு நாம் பார்க்க போவது இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள், சீனாவை சேர்ந்த ஹருண் என்ற சர்வே நிறுவனம், இந்திய ரிச் லிஸ்ட் என்ற ஒரு சர்வே பட்டியலை வெளியிட்டது. இதில் முதல் இடத்தை பிடித்திருப்பது ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இவரது சொத்து மதிப்பு 18.9 பில்லியன் டாலராகும்

முகேஷ் அம்பானி 
அம்பானி பொருள்வளம் 2% குறைந்த போதிலும், அவர் தொடர்ந்து இரண்டாவது வருடமாக தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

எல். என். மிட்டல் 
லண்டனை சேர்ந்த ஸ்டீல் பரோன் L .N .மிட்டல் 15.9 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மிட்டல் அவர்களின் பொருள்வளம் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 6% குறைந்தது. இருந்தது.


திலிப் சங்கவி 
சன் பார்மாகியுடிகல்ஸின் நிறுவனர் திலிப் சங்கவி முதன் முறையாக முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளார். இவரின் பொருள்வளம் இந்த வருடம் 66% எழுச்சிப் பெற்றுள்ளது.

அசிம் பிரேம்ஜி 
மென்பொருள் துறையில் பெரும் புள்ளியாக விளங்கும் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி நான்காம் இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு $ 12 பில்லியன் டாலராகும்.

சிவ நாடார் 
மென்பொருள் துறையில் மற்றோரு ஜம்பவானாக விளங்கும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர் சிவ நாடார் ஐந்தாம் இடத்தில் 8.6 பில்லியன் டாலர் மதிப்புடன் இருக்கிறார்

குமார் மங்கலம் பிர்லா 
பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா ஆறாம் இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 8.4 பில்லியன் டாலராகும்

ஆதி கோத்ரேஜ் 
கோத்ரேஜ் குழுமத்தின் தலைவர் ஆதி கோத்ரேஜ் 8.1 பில்லியன் டாலர் மதிப்புடைய சொத்துகளுடன் ஏழம் இடத்தில் இருக்கிறார்.

பல்லோஞ்சி மிஸ்ட்ரி 
பல்லோஞ்சி ஷபூர்ஜி பல்லோஞ்சி & கோ வின் தலைவர் பல்லோஞ்சி மிஸ்ட்ரி 8ஆம் இடத்தில் இருக்கிறார்.

சசி & ரவி ருயா 
எஸ்ஸார் எனர்ஜி நிறுவனத்தின் தலைவரான சசி & ரவி ருயா ($ 7.6 பில்லியன்) 9 வது இடத்தில் இருக்கிறனர்.

சுனில் மிட்டல் 
தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் மிட்டல் 7.3 பில்லியன் டாலர் மதிப்புடன் 10வது இடத்தில் இருக்கிறார்.

அனில் அம்பானி 
அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் அனில் அம்பானி $ 7.1 பில்லியன் டாலர்களுடன் 11 ஆவது இடத்தை பிடித்தார்.

ஷாருக் கான் 
ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் அமைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், 114 வது இடத்தை பிடித்தார். மேலும் அவரின் சொத்துக்கள் மதிப்பு 400 மில்லியன் டாலராகும்.

பெண்களின் ஆதிக்கம் குறைவு 
பணக்கார பட்டியலில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம். பெண்களின் ஆதிக்கம் வெறும் 4% தான்.

சாவித்ரி ஜிண்டல் 
ஓபி ஜிண்டல் குழுவின் நிர்வாக தலைவரான ஸ்டீல் பரோனஸ் சாவித்ரி ஜிண்டல் இந்தியாவின் பணக்கார பெண்மணி. அவரின் தனிப்பட்ட சொத்துக்கள் 5.1 பில்லியன் டாலர் ஆகும்.

நான்கு பெண்கள் 
அவரை தொடர்ந்து இரண்டாவதாக அனு அகா, கிரண், மசும்தர்-ஷா மற்றும் ஷோபனா பார்டியா மூன்றாவது நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும் பிடித்தார்கள்.

பொருளாதார வளர்ச்சி 
பொருளாதார வளர்ச்சி 5% மந்தம் அடைந்தாலும், ஹுருண் இந்தியா ரிச் லிஸ்டின் மில்லியனர்களின் சராசரி நிகர மதிப்பு 2012 ஆம் ஆண்டைக்காட்டிலும் 2013 ஆண்டில் 100 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் இந்த கடினமான நாட்களிலும் கூட தனது மீளும் திறனை காட்டியுள்ளது என ஹுருண் ரிப்போர்ட் இந்தியாவின் வெளியிட்ட அனாஸ் ரஹ்மான் ஜூனாயிட் அவர்கள் தெரிவித்தார்.

No comments: