Thursday, October 17, 2013

டீச்சர் திட்டியதால் தோழியோடு தற்கொலைக்கு முயற்சித்த சினேகா.. - www.tnfinds.com - Best Site In The World


டீச்சர் திட்டியதால் தோழியோடு தற்கொலைக்கு முயற்சித்த சினேகா...

காஞ்சிபுரம்: குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக ஆசிரியர் திட்டியதாகவும், அதனால் தனது தோழியோடு சேர்ந்து தற்கொலைக்கு முயன்றதாகவும், காஞ்சிபுரம் பள்ளி வளாகத்தில் தீக்குளித்த மாணவியின் பெற்றோர் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளனர். காஞ்சீபுரம் அருகே தூசியை அடுத்த அப்துல்லாபுரம் தோப்பு தெருவில் வசித்து வரும் கன்னியப்பனின் 11 வயது மகளான சினேகா பெரிய காஞ்சீபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 15-ந்தேதி காலை பள்ளிக்கூடம் சென்ற சினேகா, பள்ளியின் கழிவறையில் வைத்து தீக்குளித்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சினேகாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளது உடலில் 40 சதவீத தீக்காயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் தற்கொலை முயற்சியில் அவரது தோழிக்கும் பங்கிருப்பதாக பரபரப்புத் தகவல்களை தெரிவித்துள்ளனர் அவளாது பெற்றோர்கள். இது குறித்து ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது , ‘ சினேகாவும், அவளது தோழியும் சேர்ந்தே தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளனர். முன்யோசனையாக வாட்டர் பாட்டிலில் தேவையான அளாவு மண்ணெண்ணெய், தீப்பெட்டி போன்றவற்றை எடுத்து வந்துள்ளனர். பள்ளியில் இடைவேளை நேரத்தில் கழிவறைக்குச் சென்ற தோழிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். ஆனால், தீக்காயம் பட்டு சினேகா அலறுவதைக் கண்ட அவளது தோழி பயந்து வெளியே ஓடி விட்டாள்' எனத் தெரிவித்துள்ளனர். இதனை சினேகாவே தனது தாயிடம் கூறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்த சினேகா, ‘புதிய பள்ளி பிடிக்கவில்லை. பெற்றோர் வேறு பள்ளிக்கு மாற்ற மறுத்ததே தனது தற்கொலைக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது' குறிப்பிடத்தக்கது. மாணவி சினேகா, இந்த வருடம்தான் இந்த பள்ளிக்கூடத்தில் சேர்ந்து உள்ளாள். இந்த சம்பவம் குறித்து காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, விசாரணை நடத்தி வருகிறார். மாணவி தீக்குளித்த சம்பவத்தை தொடர்ந்து 15-ந்தேதி பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மறுநாள் பக்ரீத் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. நேற்று காலை பள்ளிக்கூடத்துக்கு வந்த அனைத்து மாணவிகளின் புத்தக பைகளையும் நன்றாக சோதனை செய்த பின்னரே அவர்களை வகுப்பறைக்குள் செல்ல ஆசிரியர்கள் அனுமதித்தனர். பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் சரியான, தெளிவான பேச்சுவார்த்தை உள்ளிட்ட உறவு இல்லாதே இது போன்ற முடிவுகளுக்குக் காரணமாகிறது என இச்சம்பவம் குறித்து மன நல ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

More Hot News Click Here.....

No comments: