Tuesday, October 22, 2013

கோவாவின் நைட் கிளப்புகளும், பார்ட்டி கொண்டாட்டங்களும்! - www.tnfinds.com - Best Site in the World

கோவாவின் நைட் கிளப்புகளும், பார்ட்டி கொண்டாட்டங்களும்!


இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று உங்களுக்கு பிடித்த இந்திய நகரம் ஒன்றை சொல்லுங்கள் என்றால் முக்கால்வாசி பேர் கோவா என்ற பெயரையே சொல்வார்கள். அதற்கு காரணம் 80 வயது முதியவர்களும் இங்கு வந்தால் 20 வயது இளைஞர்களை போல துள்ளி விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். 
கோவாவுக்கு அகராதியில் 'கேளிக்கை' என்றுதான் அர்த்தம் இருக்கின்றது போல! அந்த அளவுக்கு இரவுக்கும், பகலுக்கும் வேறுபாடு இல்லாமல் துள்ளல் இசையுடன் பயணிகளை சுண்டி இழுத்துக்கொண்டிருக்கின்றன கோவாவின் இரவு விடுதிகள். 
அதிலும் குறிப்பாக வடக்கு கோவா பகுதி கேளிக்கைக்கும், கொண்டாட்டத்துக்கும் குத்தகை விடப்பட்டதை போல எக்கச்சக்கமான இரவு விடுதிகளுடன் காட்சியளிக்கிறது. நீங்கள் கோவா வருவதற்கு பிளான் செய்தால் இதுதான் சரிதான சீசன். 
எனவே உங்கள் பெட்டிப் படுக்கையுடன் தயாராகுங்கள் கோவாவின் நைட் கிளப்புகளும், பார்ட்டி கொண்டாட்டங்களும் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன! 

கஃபே டிட்டோஸ் கோவாவின் பாகா 

கடற்கரையில் உள்ள கஃபே டிட்டோஸ் விடுதியின் தனிப்பெரும் புகழின் காரணமாக அந்த விடுதி அமைந்திருக்கும் சாலையே டிட்டோஸ் சாலை என்று அதன் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இந்த டிட்டோஸ் சாலையில் எண்ணற்ற பார்களும், இரவு விடுதிகளும் இருந்தாலும் அவற்றுக்கு மத்தியில் ராணித் தேனி போல கம்பீரமாக காட்சியளிப்பது கஃபே டிட்டோஸ் மட்டும்தான். இதன் உள்ளே நுழைவதற்கு கட்டணமாக 1500 ரூபாய் வசூலிக்கப்படுவதுடன் சரி, அதன் பிறகு நீங்கள் எவ்வளவு மதுவருந்தினாலும் அதற்காக ஏதும் பணம் செலுத்த வேண்டாம். எனினும் சில சமயங்களில் தனிநபர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. இங்கு நட்சத்திர டி.ஜேக்களை கொண்டு பாடல்கள் ஒலிபரப்பப்படுவதால் உங்களின் கொண்டாட்டம் ரெட்டிப்படைவது நிச்சயம். கஃபே மாம்போஸ் கோவாவின் புகழ்பெற்ற கஃபே டிட்டோஸ் சாலையில், பாகா கடற்கரையில் அமைந்திருக்கும் கஃபே மாம்போஸ், சுற்றுலாப் பயணிகளிடையே வெகு பிரசித்தம். இந்த விடுதிக்கு இணையாக வருபவர்களுக்கு 500 ரூபாயும், தனி நபருக்கு 800 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். 
 
ஆனால் இந்த கட்டணம் விடுதியின் உள்ளே நுழைவதற்கு மட்டும்தான். அதற்கு பிறகு நீங்கள் உள்ளே வாங்கும் பொருள் உணவு, மது என்று எதுவாக இருந்தாலும் தனியாக பணம் செலுத்த வேண்டும். கோவாவின் நைட் கிளப்புகளும், பார்ட்டி கொண்டாட்டங்களும்! அதுமட்டுமல்லாமல் இந்த விடுதியில் கடன் அட்டைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே தேவையான அளவு பணத்தை நீங்கள் எடுத்து வருவது மிகவும் அவசியம். கஃபே மாம்போஸ் விடுதியில் காக்டெயில்களுடன் கூடிய லா கார்டே விருந்து மிகவும் பிரபலம். அதோடு இங்கு கிடைக்கும் கோவான் பன்றி இறைச்சியை போல் நீங்கள் வேறெங்கும் சாப்பிட்டிருக்க முடியாது. 
 
 கஃபே மாம்போஸ் விடுதியில் உணவகங்களும், நடன மேடைகளும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே உணவகங்களில் இருப்பவர்களுக்கு, நடனம் ஆடுபவர்களால் எந்த தொந்தரவும் ஏற்படாது. அதோடு விடுதியை சுற்றி எந்நேரமும் பாதுகாவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடபட்டு கொண்டிருப்பதால் எவரும் வரம்பு மீறி செயல்பட முடியாது. கேப் டவுன் கஃபே டிட்டோஸ் சாலையில் இருக்கக்கூடிய விடுதிகளிலேயே பயணிகளிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கும் இரவு விடுதி இந்த கேப் டவுன் கஃபே தான். 
 
கேப் டவுன் கஃபேவின் உயரமான மேற்கூரையும், மிகப்பெரிய எல்.சி.டி திரைகளும், அதிரவைக்கும் இசையும், அற்புதமான கோவான் உணவும் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். கேப் டவுன் கஃபேவுக்கு வெளிப்புறம் உள்ள உணவகத்தில் மரத்தினால் ஆன மேசைகளில் நீங்கள் உங்கள் நண்பர்களுடனோ, குடும்பத்தினரிடமோ கூட்டமாக அமர்ந்து குதூகலமாக பேசிக்கொண்டே உணவருந்தலாம். 
 
குறிப்பாக இங்கு தயாரிக்கப்படும் செம்மறி ஆட்டுக்குட்டியின் தந்தூரி வெளிநாட்டு பயணிகளிடையே மிகப்பிரபலம். இது தவிர டிட்டோஸ் சாலையில் நீங்கள் எங்கு தேடினாலும் இந்த விடுதியில் கிடைப்பது போல் குறைந்த விலையில் வேறெங்கும் பீர் வாங்க முடியாது. கிளப் கபானா கோவாவில் உள்ள உல்லாச விடுதிகளில் எங்கு கேளிக்கையும், கொண்டாட்டமும் சிறப்பாக இருக்கிறது என்று யாரிடமாவது கேட்டால் கண்டிப்பாக எல்லோரும் ஒருமனதாக கிளப் கபானா என்றுதான் சொல்வார்கள். 
 
அதனால்தான் பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரும் விரும்பும் ஆசியாவின் மிகச் சிறந்த இரவு விடுதியாக கிளப் கபானா திகழ்ந்து வருகிறது. கோவாவின் நைட் கிளப்புகளும், பார்ட்டி கொண்டாட்டங்களும்! இது திறந்தவெளி இரவு விடுதியாக, கடற்கரையோரத்தில், குன்றின் மீது காட்சியளிக்கும் தோற்றமே தனித்துவமானது. அதோடு இரவு விடுதியின் நடுவே உள்ள மிகப்பெரிய நீச்சல் குளமும், ஜக்கூஸியும் பயணிகளின் கவனத்தை வெகுவாக கவர்வன. இந்த கிளப்பில் ஒரே நேரத்தில் 3000 மக்கள் வரை கேளிக்கையில் ஈடுபடலாம். 
 
அதனால் சில சமயங்களில் மூச்சு விடக் கூட கஷ்டமாக இருக்கும். எனினும் இதனாலெல்லாம் கேளிக்கையின் சுகானுபவம் கெட்டு விடாது. கஃபே டெல் மார் பீச் பார் அண்ட் கிளப் வடக்கு கோவாவில் உள்ள கேளிக்கை விடுதிகளுக்கு போட்டியாக கஃபே டெல் மார் பீச் பார் அண்ட் கிளப், மார்கோ மற்றும் பனாஜியை உள்ளடக்கிய தெற்கு கோவாவின் புகழ்பெற்ற கேளிக்கை விடுதியாகும். இந்த உல்லாச விடுதி பலோலம் கடற்கரையில் அமைந்திருக்கிறது. 
 
தெற்கு கோவாவில் உள்ள இரவு விடுதிகளில் நீங்கள் வேறெங்கும் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிவரை கேளிக்கைகளில் ஈடுபட முடியாது. ஆனால் கஃபே டெல் மார் விடுதி அதற்கான உரிமத்தை பெற்றுள்ளது. எனவே நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இந்த விடுதியில் விரும்பும் மதுவினை அருந்தியவாரே கேளிக்கைகளில் திளைக்கலாம். அதுமட்டுமல்லாமல் விடுதியில் ஒலிபரப்பப்படும் பாடல்களுக்கு ஏற்ப, காக்டெயில்கள் தந்த கிறுகிறுப்போடு நடனமாடி மகிழலாம். கஃபே டெல் மார் விடுதியில் உள்ள நடன மேடை நிறைய பேர் ஆடும் அளவுக்கு இட வசதி உள்ளது என்றாலும், கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். அதனால் வயது வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் அவரவர்கள் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் நடனம் ஆடலாம்.

No comments: