Wednesday, October 16, 2013

தமிழகத்தில் இருந்து 'தப்பி' புதுவையில் போட்டியிடுவாரா அன்புமணி ராமதாஸ்? - www.tnfinds.com - Best Site in the World

தமிழகத்தில் இருந்து 'தப்பி' புதுவையில் போட்டியிடுவாரா அன்புமணி ராமதாஸ்?


சென்னை: முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வந்து விட்டாலும் கூட அவர் தமிழகத்தில் போட்டியிடாமல், புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது. இதை அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2004 முதல் 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் அன்புமணி ராமதாஸ். அப்போது அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். ஆனால் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். இதனால் எந்த தொகுதியில் நிற்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.

அதில் ஆரணி அல்லது தருமபுரி தொகுதியில் போட்டியிடுவது குறித்து கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆரணி சரியாக வராது தருமபுரி தான் சரியாக வரும் என முடிவு எடுத்து அங்கு நிறுத்தப்படலாம் என கூறப்பட்டது. அண்மையில் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இதை மறைமுகமாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் ஆதரவுடன் புதுவை லோக்சபா தொகுதியில் அன்புமணியை நிறுத்தலாமா என பாமக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

காங்கிரஸுக்கு போட்டியாக தற்போது ஆட்சியில் உள்ள கட்சி என்.ஆர்.காங்கிரஸ். அவர்களுக்கு ஏற்கனவே இந்திரா நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது பாமக ஆதரவு தந்தது. அந்த அடிப்படையில் என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு தரும் என்பது பாமகவின் நம்பிக்கை.

அத்துடன் புதுச்சேரியில் வன்னியர்கள் அதிகம். அவர்கள் வாக்கு தங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பாமகவுக்கு உள்ளது.
இருப்பினும் நாளை வெளியாக உள்ள பாமக லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் அன்புமணி எங்கு போட்டியிடுகிறார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்

No comments: