Wednesday, October 16, 2013

“என்னைப் புகழும் காட்சிகளோ, பஞ்ச் டயலாக்குகளோ இருக்கக் கூடாது” : அஜித் போட்ட கண்டிஷன்! - www.tnfindscom - Best Site In The world

“என்னைப் புகழும் காட்சிகளோ, பஞ்ச் டயலாக்குகளோ இருக்கக் கூடாது” : அஜித் போட்ட கண்டிஷன்!

“என்னைப் புகழும் காட்சிகளோ, பஞ்ச் டயலாக்குகளோ இருக்கக் கூடாது” : அஜித் போட்ட கண்டிஷன்!Arrambham Latest Stills (10)

“ஒரு பிரபல் நடிகருக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தார் அஜித்” என்கிறார்கள் எழுத்தாளர்(கள்) சுபா.
அஜித்தின் ஆரம்பம் படத்தின் கதை, திரைக்கதையை டைரக்டர் விஷ்ணுவர்தனோடு சேர்ந்து இவர்கள் தான் அமைத்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் பணியாற்றியதன் மூலம் எங்களது சினிமா பயணத்தின் உச்சத்தை தொட்டுவிட்டதாக சொல்லும் இவர்களின் ‘ஆரம்பம்’ படத்தில் பணியாற்றிய பற்றிய சில அனுபவங்கள் இதோ…!!!
டைரக்டர் விஷ்ணுவர்த்தன் இப்படி ஒரு படத்தை எடுக்க போகிறோம் என கூறியபோது, அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது.
3 மாதங்களுக்கு பிறகு கதை கருவை அஜித்திடம் பகிர்ந்து கொள்ள முதன்முதலாக அவரை சந்தித்த போது அவரது எளிமை எங்களை கவர்ந்தது. ஒரு உச்ச நடிகருக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தது வியப்பாக இருந்தது. அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் வைத்த வேண்டுகோள் எங்களை மேலும் ஆச்சரியப்படுத்தியது, அது “படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ, பஞ்ச் வசனங்களோ இருக்க கூடாது” என்பதுதான். கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார் .
அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்ட பிறகு தான் அந்த மனிதருக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது. அந்த தன்னம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டி கொண்டது என்றால் மிகை ஆகாது.
படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல்நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடற்பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சி தான் அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்றிருக்கும் என தெளிவாக புரிந்தது.
நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணிபுரிந்து இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் ஆரம்பம் படத்தை பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை. எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதை பார்க்கும் போதுதான் அவருடைய ரசிகர் வட்டம் எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புலப்படுகிறது.
ஏராளமான பொருட் செலவு, விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம் , யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு என்கிறார்கள் எழுத்தாளர்(கள்) சுபா. 

More News Click Here.. 


 

No comments: