Wednesday, October 16, 2013

பாய்லின் புயல்: துரிதமான செயலால் அதிக சேதத்தை தவிர்த்த ஒடிசா முதல்வருக்கு ஐ.நா பாராட்டு - www.tnfinds.com - Best Side In The World

பாய்லின் புயல்: துரிதமான செயலால் அதிக சேதத்தை தவிர்த்த ஒடிசா முதல்வருக்கு ஐ.நா பாராட்டு


புவனேஸ்வர்: ஒடிசாவில் பாய்லின் புயல் தாக்கத்தினால் அதிக உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் துரிதமாக செயல்பட்டதற்காக அம்மாநில முதல்வரைப் பாராட்டியுள்ளது ஐநா. கடந்த சனியன்று ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடற்கரை மாவட்டங்கள் அதி வேகப்புயலான பாய்லின் தாக்குதலுக்கு ஆளானது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் ஆபத்தான பகுதிகளில் வசித்த 9 லட்சம் பேர் பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால், அங்கு மிகப்பெரிய அளவிலான உயிர் சேதம் தடுக்கப்பட்டது. பாய்லின் புயல் நேரடியாக தாக்கிய கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2.5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மொத்தத்தில் கடலோர பகுதிகளில் வசித்த 9 லட்சத்து 83 ஆயிரத்து 553 பேர் 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட்டதாக மாநில அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாய்லின் புயலில் சிக்கி 21 பேர் பலியானார்கள். பெருத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இத்தகைய அரசு வேக பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் உயிர்கள் பலியாவதை தடுத்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஐ.நா. பேரிடர் இழப்பு தவிர்ப்பு துறையின் சிறப்பு பிரதிநிதி மார்கரெட்ரா வல்ஷ்ட்ரம் பாராட்டுகளை தெரிவித்தார். கடந்த 1999ம் ஆண்டு ஒடிசாவை கடும்புயல் தாக்கிய போது 9 ஆயிரத்து 885 மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

More News Click Here...







No comments: