Sunday, October 13, 2013

ஆபத்தை நோக்கி அமெரிக்காவின் பொருளாதாரம்.. உலக வங்கி எச்சரிக்கை! - www.tnfinds.com - Best Site in the World

ஆபத்தை நோக்கி அமெரிக்காவின் பொருளாதாரம்.. உலக வங்கி எச்சரிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்காவின் பொருளாதாரம் ஆபத்தை நோக்கி செல்வதாக உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் நிதி மசோதா நிறைவேறாததால் பல அரசு துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் அமெரிக்க பொருளாதாரம் பெரும் ஆபத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக உலக வங்கி தலைவர் ஜிம் யெங் கிங் கூறியுள்ளார். ஆபத்தை நோக்கி அமெரிக்காவின் பொருளாதாரம்.. உலக வங்கி எச்சரிக்கை! அமெரிக்க எம்.பிக்கள் தங்களுக்குள் ஒன்றுகூடி விவாதித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கடன் வரம்பு பிரச்னைக்கு அமெரிக்கா தீர்வு காணாத பட்சத்தில், அது வளரும் நாடுகளை கடுமையாக பாதிக்கும் என்றும் உலக வங்கித் தலைவர் ஜிம் யெங் கிங் எச்சரித்துள்ளார். அமெரிக்க அரசின் கடன் வரம்பு வரும் 17ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் அரசின் செலவினங்களுக்கு நிதி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக அமெரிக்காவின் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் இப்பிரச்னை முடிவுக்கு வராமல் உள்ளது.

 

No comments: