Tuesday, October 15, 2013

அதிமுகவில் 'ஓ.பி.எஸ்' க்கு நெருக்கடி? ஜெ.வுடன் 'டி.டி.எஸ்' சந்திப்பால் ஆதரவாளர்கள் பீதி!! - www.tnfinds.com - Best Site in the World

அதிமுகவில் 'ஓ.பி.எஸ்' க்கு நெருக்கடி? ஜெ.வுடன் 'டி.டி.எஸ்' சந்திப்பால் ஆதரவாளர்கள் பீதி!!


சென்னை: அண்ணா திமுகவில் தொடர்ந்து நடைபெற்று வரும் சந்திப்புகள், அறிவிப்புகளால் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவே அவரது ஆதரவாளர்கள் பீதி அடைந்து போயுள்ளனர். தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்றழைக்கப்படும் ஓ.பி.எஸ்.-ம் ஜெயலலிதாவுக்காக தமது ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தேர்தல் செலவும் செய்து குட் புக்கிங்கில் இருக்கும் தங்க தமிழ்ச் செல்வன் என்ற டி.டி.எஸ்க்கும்தான் கடும் போட்டி. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்கள் என்பது இருவருக்குமே பொருந்தும். இதில் யார் கை ஓங்குவது என்பதுதான் போட்டி.

ஆனால் நீண்டகாலமாகவே ஓ.பி.எஸ்-ன் கைதான் ஓங்கியே இருந்து வருகிறது. இதனால் டி.டி.எஸ். தரப்பு கொந்தளித்துப் போனது.

அண்மையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் டி.டி.எஸ். பெயரை உச்சரிக்காமல் போய்விட்டார் ஓ.பி.எஸ். இதனால் கொந்தளித்துப் போன டி.டி.எஸ். ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து அடித்த சுவரொட்டிகளில் 'ஜானகி அணி ஓ.பன்னீர்செல்வமே' என்று விமர்சித்திருந்தனர். அதிமுக உடைந்தபோது ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகி அணியில் இணைந்து வேலைபார்த்தவர் ஓ. பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது ஓ.பி.எஸ்.சை ரொம்பவே அப்செட் செய்ய முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட்டதுடன் டி.டி.எஸ். உட்பட 9 பேர் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

மறுநாளே ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் டி.டி.எஸ். தவிர 5 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். 4 பேர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து கழற்றிவிடப்பட்டனர் என்ற கலவையான அறிக்கை வெளியானது. ஆனால் டி.டி.எஸ்.மீது நடவடிக்கை இல்லை என்றவுடன் ஓ.பி.எஸ். தரப்பு அதிர்ந்து போனது.

அத்துடன் டி.டி.எஸ். சென்னைக்கே வந்து முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பக்கம் பக்கமாக ஓ. பன்னீர்செல்வம் பற்றி புகார் மனுக்களை மலையாக அடுக்கி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அந்த சந்திப்பின் போது உங்கள் புகாரில் விசாரணை நடத்தப்படும்.. உண்மை இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதிகொடுத்திருக்கிறார் ஜெ.
 
அந்தப் புகாரில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? இதனால் அமைச்சர் பதவிக்கு மட்டுமின்றி கட்சியிலும் நெருக்கடி வருமோ? என்ற பீதியில் ஓ.பி.எஸ்-ம் அவரது ஆதரவாளர்களும் உறைந்து போயிருக்கின்றனர் என்கிறது டி.டி.எஸ்.தரப்பு

 

No comments: