Tuesday, October 22, 2013

ஏற்காடு இடைத்தேர்தல்: அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! - www.tnfinds.com - Best Site In the world

ஏற்காடு இடைத்தேர்தல்: அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!


சேலம்: ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறை மீறி செயல்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த தொகுதியும், அந்த தொகுதியைக் கொண்ட சேலம் மாவட்டமும் அன்று முதல் தேர்தல் விதிகளுக்கு உட்பட்ட பகுதிகளாக உள்ளன. இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி சேலம் சென்ற அமைச்சர் வீரமணி, சேலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரிகளை சந்தித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வீரமணி, தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்றும், தேசிய கொடியுடன் அரசு வாகனத்தை ஏற்காடு தொகுதியில் பயன்படுத்திய அமைச்சர் வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகளை சந்தித்தது, அரசு வாகனத்தை பயன்படுத்தியது பற்றி அமைச்சர் வீரமணியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம். மேலும் இந்த நோட்டீஸுக்கு, அமைச்சர் வீரமணி இரு தினங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

No comments: